Top posting users this month
No user |
Similar topics
கோத்தாவுக்கு எதிரான மனு ரணிலின் கையில்
Page 1 of 1
கோத்தாவுக்கு எதிரான மனு ரணிலின் கையில்
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை கைது செய்ய இடைக்கால தடை விதித்து, உயர் நீதிமன்றத்தின் நீதியரசர்கள் குழாம் வழங்கிய உத்தரவில் குழப்பங்கள் காணப்படுவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அலரிமாளிகையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நிதி மோசடி விசாரணை பிரிவுக்கு எதிராக கோத்தபாய ராஜபக்சவினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவின் அடிப்படையில், இந்த மனு மீதான விசாரணை முடியும் வரை அவரை கைது செய்ய இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த மனுவை விசாரணை செய்ய நியமிக்கப்பட்ட மூன்று நீதியரசர்களில் ஒருவர் விசாரணைக்கு சற்று முன்னர் விலகிய நிலையில் இருவர் மாத்திரமே இந்த உத்தரவை பிறப்பித்தனர்.
எனினும் அடிப்படை மனுக்கள் மீதான விசாரணைக்கு அமைவான சட்டத்தின் பிரகாரம் குறித்த மனுவை ஏற்றுக் கொள்வதா? இல்லையா? என்பதில் இருவர் கொண்ட நீதியரசர்கள் குழாம் போதுமானது என அவர் தெரிவித்துள்ளார்.
ஆனால் குறித்த மனு மீதான உத்தரவை வழங்க கட்டாயம் மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் அவசியம் என்பதினால் சில சிக்கல் நிலைகள் காணப்படுவதாக பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே இந்நிலைமை தொடர்பில் சட்டமா அதிபரிடம் ஆலோசனை பெறுவதற்கு தீர்மானித்துள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை இது போன்ற ஒரு கருத்தை நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றிலும் பிரதமர் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» ரணிலின் சலூன் கதவு திறக்கப்பட்டுள்ளது: அமைச்சர் பீ. ஹெரிசன்
» கோத்தாவுக்கு அழைப்பு விடுத்த பொதுபல சேனா
» ரணிலின் கருத்தை எதிர்க்கும் ஜாதிக ஹெல உறுமய
» கோத்தாவுக்கு அழைப்பு விடுத்த பொதுபல சேனா
» ரணிலின் கருத்தை எதிர்க்கும் ஜாதிக ஹெல உறுமய
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum