Top posting users this month
No user |
Similar topics
20வது திருத்தம்: இணக்கப்பாடின்றி முடிவடைந்த அமைச்சரவைக் கூட்டம்
Page 1 of 1

20வது திருத்தச்சட்டம் தொடர்பாக நேற்றிரவு நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் இணக்கப்பாடு ஏற்படவில்லையென தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நேற்றிரவு கூடியது.
இக்கூட்டத்தில் 20வது திருத்தச்சட்ட மூலத்தை, சிறு மற்றும் சிறுபான்மையினக் கட்சிகள் முன்வைத்துள்ள திருத்த யோசனைகளுடன் ஜனாதிபதி சமர்ப்பித்தார்.
எனினும் இது குறித்து இணக்கப்பாடு எதுவும் ஏற்படாத காரணத்தினால், 20வது திருத்தம் தொடர்பில் ஆராய்வதற்காக அமைச்சரவை உப-குழுவொன்றை நியமிப்பதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்தார்.
அமைச்சர் சரத் அமுனுகம தலைமையிலான இந்த அமைச்சரவை உப-குழுவில் அமைச்சர்களான லக்ஷ்மன் கிரியெல்ல, பாட்டலி சம்பிக்க ரணவக்க, ரவூப் ஹக்கீம், பி.திகாம்பரம் ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர்.
20வது திருத்தம் தொடர்பில் அரசியல் கட்சிகள் முன்வைத்துள்ள யோசனைகள், பரிந்துரைகளை இந்த உப-குழு விரிவாக ஆராய்ந்து, அறிக்கை சமர்ப்பிக்கும் என ராஜித்த தெரிவித்தார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» 20வது திருத்தம் இல்லை எனில் நாடாளுமன்றை கலைக்கவும்: ஜே.வி.பி
» 20வது திருத்தம் தொடர்பில் விசேட வர்த்தமானி வெளியானது
» 20வது திருத்தம் தொடர்பில் இணக்கமில்லை என்றால் பொதுத் தேர்தலுக்கு செல்வது பொருத்தமானது!– சோபித தேரர்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum