Top posting users this month
No user |
Similar topics
பாடாலூர் பூமலை சஞ்சீவிராயர் திருக்கோயிலில் அனுமன் ஜெயந்தி விழா
Page 1 of 1

பாடாலூர், டிச. 22–
ஆலத்தூர் தாலுகா பாடாலூர் அருள்மிகு பூமலை சஞ்சீவிராயர் மற்றும் வழித்துணை ஆஞ்சநேயர் திருக்கோயில்களில் அனுமன் ஜெயந்தி விழா நேற்று நடைபெற்றது.
ஆஞ்சநேயர் திருக்கோயில்களில் அனுமன் ஜெயந்தி விழா ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். அதேபோல் பாடாலூர் பூமலை சஞ்சீவிராயர் மற்றும் வழித்துணை ஆஞ்சநேயர் திருக்கோயில்களிலும் அனுமன் ஜெயந்தி விழா நடைபெற்றது.
அதன்படி, பாடாலூர் பூமலை சஞ்சீவிராயர் மற்றும் வழித்துணை ஆஞ்சநேயர் திருக்கோயில்களில் நேற்று முன்தினம் சனிக்கிழமை மாலை 5 மணிக்கு விஷ்வசேனர் ஆராதனை, புண்ணியாகவாசனம், கலச பூஜை, தீபாராதனையுடன் அனுமன் ஜெயந்தி விழா தொடங்கியது.
விழாவில் நேற்று அதிகாலை 5 மணிக்கு அனுக்ஞை, தனபூஜை, கலசபூஜை, புண்ணியாகவாசம், சுதர்சன ஹோமம், பூர்ணவதி உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதனையடுத்து வழித்துணை ஆஞ்சநேயருக்கு வடமாலை அணிவிக்கப்பட்டு பால், தயிர், வெண்ணெய், மஞ்சள்தூள், சிகைக்காய் தூள், திரவியப்பொடி, அரிசி மாவு, பஞ்சாமிர்தம், தேன், நெய், கருப்பஞ்சாறு மற்றும் ஆப்பிள், ஆரஞ்சு, மாதுளை, திராட்சை, வாழைப்பழம் உள்ளிட்ட வாசனைத் திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகளும் நடைபெற்றது. பின்னர், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
பின்னர், நேற்று மாலை விஷ்ணு சஹஸ்ரநாமம், அனுமன் மூல மந்திரம், அர்ச்சனை, தீபாராதனை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெறறது. விழாவில் பாடாலூர், இரூர், திருவளக்குறிச்சி, பெருமாள் பாளையம், ஆலத்தூர்கேட், நாரணமங்கலம், காரை, தெரணி, நாட்டார்மங்கலம், சீதேவிமங்கலம், கூத்தனூர், செட்டிகுளம், பொம்மனப் பாடி, விஜயகோபாலபுரம், மாவலிங்கை உள்ளிட்ட சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த ஆஞசநேயர் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் கெளதமன், எழுத்தர் தண்டபாணி உள்ளிட்ட கோயில் ஊழியர்கள் செய்திருந்தனர்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» பாடாலூர் பூமலை சஞ்சீவிராயர் திருக்கோயிலில் அனுமன் ஜெயந்தி விழா
» கரூர் அருகே அனுமன் ஜெயந்தி விழா நாளை நடக்கிறது
» நங்கநல்லூர் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா 21-ந்தேதி தொடங்குகிறது

Permissions in this forum:
You cannot reply to topics in this forum