Top posting users this month
No user |
Similar topics
தெருவில் நடந்த மல்யுத்த போட்டி: சம்பவ இடத்திலேயே நிலை குலைந்து பலியான சிறுவன்
Page 1 of 1

ஐதராபாத்தில் உள்ளூர் சிறுவர்களால் சாலையில் ஏற்பாடு செய்யப்பட்ட மல்யுத்த போட்டியில் 17 வயது சிறுவன் ஒருவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஐதராபாத்தில் கடந்த 3ம் திகதி அன்று, உள்ளூர் சிறுவர்கள் சிலர் இணைந்து மல்யுத்த போட்டி ஒன்றை நடத்தியுள்ளனர்.
தெருவில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த சண்டையில், 17 வயது சிறுவன் ஒருவன் தாக்குதலில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளான். அப்போது அந்த இடத்தில் சுமார் 10 சிறுவர்கள் இருந்துள்ளனர்.
இறந்துபோன சிறுவனின் தந்தை துபாயில் பணிபுரிந்து கொண்டிருந்துள்ளார். மகன் இறந்த செய்தியை அறிந்த அவர், ஐதராபாத்திற்கு வந்துள்ளார்.
என்ன நடந்து என்று சிறுவனின் தந்தை அவனது நண்பர்களிடம் கேட்டபோது, சிறுவன் சாலை விபத்தில் இறந்துபோனதாக தெரிவித்துள்ளனர்.
ஆனால் இந்த காரணத்தை நம்பாத சிறுவனின் தந்தை, சிறுவர்கள் பொய் கூறுகிறார்கள் என்ற எண்ணத்தில் தன் மகன் சந்தேகத்திற்குரிய முறையில் மரணம்டைந்துள்ளதாக பொலிசில் புகார் அளித்துள்ளார்.
பின்னர் பொலிசார் அந்த சிறுவனின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பியதோடு, அந்த சிறுவனின் நண்பர்களில் ஒருவனை விசாரணைக்காக வெள்ளி கிழமையன்று கைது செய்துள்ளனர்.
விசாரணையில் அந்த சிறுவன் நடந்த அனைத்தையும் பொலிசாரிடம் விவரித்துள்ளான்.
இதையடுத்து பொலிசார் சண்டையின் போது உடனிருந்த மற்ற சிறுவர்களையும் கைது செய்துள்ளனர்.
அவர்கள் பொலிசாரிடம், நாங்கள் வழக்கமாக இது போன்ற போட்டிகளை நடத்துவது வழக்கம். திறந்த வெளியில் இரண்டு நபர்களை நேருக்கு நேர் மோத விடுவோம் என்று தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தன்று நடந்த சண்டையை சிறுவர்கள் வீடியோ எடுத்துள்ளனர். அதனை கைப்பற்றிய பொலிசார், அந்த சிறுவன் எதிராளியின் அடியை தாங்க முடியாமல் நிலை தடுமாறி தரையில் விழுவது அதில் பதிவாகியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
பொலிசார் கூறுகையில், இந்த சண்டையின் போது உடனிருந்த சிறுவர்கள் தான், அந்த 17 வயது சிறுவனை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அவனது குடும்பத்திற்கும் தகவல் அளித்துள்ளனர்.
மேலும், சிறுவனின் பெற்றோரிடம் அவன் சாலை விபத்தில் இறந்ததாகவும் பொய் கூறியுள்ளனர் என்று தெரிவித்துள்ளனர்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» ஓமனில் நடந்த பயங்கர சாலை விபத்து: சம்பவ இடத்திலேயே பலியான தமிழர்கள்
» கோதாவரி ஆற்றில் கவிழ்ந்த சுற்றுலா வேன்: பலியான 22 பேர்
» கனமழைக்கு பலியான 19 நபர்களின் குடும்பத்துக்கு நிதியுதவி: முதலமைச்சர் அறிவிப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum