Top posting users this month
No user |
Similar topics
பைனாப்பிள் ரவா கேசரி (pineapple)
Page 1 of 1
பைனாப்பிள் ரவா கேசரி (pineapple)
ரவா - 1 1/2 கப்
சீனி - 1 1/2 கப்
முந்திரி - 10
நெய் அல்லது டால்டா - கால் கப்
பைனாப்பிள் ஜூஸ் - 3 கப்
அடுப்பில் வாணலியை வைத்து வெறும் வாணலியில் ரவாவை கொட்டி நிறம் அதிகம் மாறாத அளவிற்கு வறுத்துக் கொள்ளவும்.
வறுப்படும் போது வாசனை வர ஆரம்பித்தவுடன் அடுப்பை அணைத்துவிட்டு, அந்த சூட்டிலேயே லேசாகக் கிளறிவிட்டு எடுத்துவிடவும். மிகவும் வறுப்பட்டு விட்டால், கேசரி சுவையாக இருக்காது.
முந்திரியை இரண்டாக உடைத்து வைக்கவும். பைனாப்பிள் பழத்தை மிக்ஸியில் தண்ணீர் சேர்த்து அடித்து சக்கையை வடிக்கட்டி ஜூஸை மட்டும் தனியே 3 கப் வருமளவு எடுத்து வைக்கவும்.
பிறகு ஒரு பாத்திரத்தில் 2 கப் பைனாப்பிள் ஜூஸ் ஊற்றி கொதித்ததும், அதில் ரவாவை கொட்டவும்.
பாத்திரத்தில் ஒட்டாமல் இருக்கவும், ரவா கட்டி பிடிக்காமல் இருக்கவும், விடாது கிளறி கொண்டே இருக்கவும். ரவா நன்கு வேகும் வரை கிளறிவிட்டு வேக விடவும்.
சுமார் 4 நிமிடங்கள் கழித்து, ரவா வெந்தது என்று பார்த்த பிறகு சீனியை சேர்த்து கிளறவும். சீனி சேர்த்து தண்ணீர் சேர்க்க வேண்டியதில்லை.
சீனி கரைந்து ரவாவுடன் நன்கு சேரும் வரை கிளறிவிட்டு வேகவிடவும். முந்திரியை ஒரு மேசைக்கரண்டி நெய்யில் வறுத்து. அதை அப்படியே நெய்யுடன் கேசரியில் ஊற்றவும்.
மீதமுள்ள நெய்யையும் ஊற்றி சுமார் 5 நிமிடம் ரவா வேகும் வரை கிளறி விட்டு இறக்கி விடவும். சுவையான பைனாப்பிள் ரவா கேசரி ரெடி

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum