Top posting users this month
No user |
Similar topics
பாரிய நிதி மோசடி: மலையகத்தின் முன்னாள் அமைச்சர் கைதாகும் சாத்தியம்
Page 1 of 1

மலையகத்தின் முன்னாள் பிரதி அமைச்சர் ஒருவர் வெகுவிரைவில் கைதாகலாம் என ஆங்கில இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த அரசாங்கத்தினால் தொண்டமான் மன்றத்திற்கு” பிரஜா சக்தி “ “நவசக்தி” என்ற திட்டமிடலுக்காக 2013ம் ஆண்டு 175 மில்லியன் ரூபாவும் , 2014 ம் ஆண்டு 175 மில்லியன் ரூபாவையும் திறைசேரி வழங்கியுள்ளது.
ஆனால் இந்த தொகையை முறைகேடாக பயன்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன் அடிப்படையில் முன்னாள் பிரதி அமைச்சர் முத்து சிவலிங்கம் கைது செய்யப்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
அத்தோடு இந்த மன்றத்தின் கணக்காளர், மேலாளர், தலைவர் ஆகியோரும் கைதாகலாம் என நிதி மோசடி புலனாய்வு பிரிவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் தொண்டமான் மன்றத்தின் ஆறு முக்கிய நபர்களின் கைது நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
2014ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 65 மில்லியன் ரூபாய் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் தேர்தல் பிரச்சார செலவிற்கு செலவிடப்பட்டுள்ளதாகவும் இந்த பணத்தை முன்னாள் அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் தனது சொந்த விருப்பத்தில் விருந்துக்களுக்கும் மதுபானங்களுக்கும் செலவு செய்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் பிரஜாசக்தியின் ஊழியர்களுக்கு ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையிலான சம்பள கொடுப்பனவுகளும் வழங்கப்படவில்லையெனவும் இதனால் 400ற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதி தேர்தலின் போது 140 பேருக்கு வேலை வழங்கப்பட்டடுள்ளது, எனினும் அவர்களுக்கான கொடுப்பனவுகள் வழங்கப்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
இதேவேளை குறித்த பணத்தொகையினை “பிராஜாசக்தி” “நவசக்தி” ஆலோசகர் மற்றும் முன்னாள் அமைச்சர் ஆறுமுகம் தொண்டமானினும் வியாபார பங்காளருமான திருமதி.ரூபலதா மகந்தி ராமோகனின் ஆலோசனையிலே செலவு செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இவர் கருத்தரங்குகள், செயல் அமர்வுகளுக்கு பணத்தினை செலவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, முத்து சிவலிங்கம் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் நுவரெலியா ஹற்றன் நெஷனல் வங்கியில் இவரது தனிப்பட்ட கணக்கிலிருந்து 50 மில்லியனை பெற்றுள்ளதாகவும், அரசுக்கு சொந்தமான மகாவலி காணி 24 ஏக்கரில் செய்துள்ளதாகவும், அங்கு ஓர் சொகுசு பங்களாவும் வைத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விடயங்கள் சம்பந்தமாக பிரதேச மக்கள் அமைச்சர் திகாம்பரத்தின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார்கள்.
குறித்த காணியை அரசாங்கம் கைப்பற்றி தோட்ட மக்களுக்கு வீடுகளை அமைக்க வேண்டும் என கோரிக்கை முன் வைத்துள்ளார்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பாக வேறு பல விடங்களும் வெளிவரலாம் எனவும் ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இச்செயற்பாடு காரணமாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பலம் மலையகத்தில் குறையலாம் என எதிர்பார்க்கப்படுவதாக குறித்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» முன்னாள் அமைச்சர் ஏக்கநாயக்கவுக்கு நிதி மோசடி விசாரணைப் பிரிவு அழைப்பு
» மகிந்தவின் பாரிய கொள்ளை சிக்கியது! சாட்சியுடன் வெளிப்படுத்துவேன்: நிதி அமைச்சர்
» நிதி குற்றவியல் விசாரணை பிரிவு கலைக்கப்படும் சாத்தியம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum