Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


யோஷித்த, சஜின்வாஸ் நிதி மோசடி விசாரணை பிரிவுக்கு விரையும் சாத்தியம்

Go down

யோஷித்த, சஜின்வாஸ் நிதி மோசடி விசாரணை பிரிவுக்கு விரையும் சாத்தியம் Empty யோஷித்த, சஜின்வாஸ் நிதி மோசடி விசாரணை பிரிவுக்கு விரையும் சாத்தியம்

Post by oviya Sun Apr 26, 2015 1:06 pm

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் புதல்வர் யோஷித்த ராஜபக்ச மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின்வாஸ் குணவர்தன ஆகியோர் அடுத்த சில தினங்களில் நிதி மோசடி விசாரணைப் பிரிவுக்கு அழைக்கப்படவிருப்பதாக தெரியவருகிறது.
அரசாங்கத்திற்கு கிடைக்க வேண்டிய 4 ஆயிரம் மில்லியன் ரூபா பணத்தை இவர்கள் முறைகேடாக பயன்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

சீ.எஸ்.என் தொலைக்காட்சிக்கு இலங்கையின் கிரிக்கெட் போட்டிகளை ஒளிப்பரப்பும் உரிமையை பெற அரச வளத்தை முறைகேடாக பயன்படுத்தியமை,

அதில் கிடைக்க வருமானத்தில் அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய பணத்தை செலுத்தாது அதனை வேறு வர்த்தகங்களுக்கு பயன்படுத்தியமை உட்பட பல குற்றச்சாட்டுக்கள் இவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளது.

அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய 4 ஆயிரம் மில்லியன் ரூபாவுக்கும் மேலான நிதியை இவர்கள் செலுத்த தவறியுள்ளனர்.

யோஷித்த ராஜபக்ச, சீ.எஸ்.என் தொலைக்காட்சியின் உரிமையாளர்களில் ஒருவர் என்பதுடன் சஜின்வாஸ் குணவர்தன அதில் முதலீடுகளை செய்துள்ளதாக கூறப்படுகிறது.

சீ.எஸ்.என் தொலைக்காட்சி ஆரம்பிக்கப்பட்ட நாளில் இருந்து இதுவரை அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய கட்டணங்கள் எதனையும் செலுத்தவில்லை.

இதன் காரணமாக குறித்த தொலைக்காட்சி நிறுவனம் ஒரு பில்லியன் ரூபாவை அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டும் என இடைக்கால வரவு செலவுத் திட்டத்தில் யோசனை முன்வைக்கப்பட்டது.

எனினும் தொலைக்காட்சி நிறுவனம் இந்த பணத்தை செலுத்தாது தொலைக்காட்சி நிறுவனத்தை மூடிவிட தீர்மானித்தது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum