Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


முஸ்லீம்களுக்கு மறைமுகமாக குறி வைக்கும் மோடி: அல்கொய்தா விடுத்த கொலை மிரட்டல்

Go down

முஸ்லீம்களுக்கு மறைமுகமாக குறி வைக்கும் மோடி: அல்கொய்தா விடுத்த கொலை மிரட்டல் Empty முஸ்லீம்களுக்கு மறைமுகமாக குறி வைக்கும் மோடி: அல்கொய்தா விடுத்த கொலை மிரட்டல்

Post by oviya Tue May 05, 2015 2:57 pm

பிரதமர் நரேந்திர மோடிக்கு அல்கொய்தா தீவிரவாதிகள் கொலை மிரட்டல் விடுத்துள்ளதை அடுத்து, மோடிக்கு 5 அடுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
அல் கொய்தா அமைப்பு சமீபத்தில் வெளியிட்ட 9 நிமிடம் ஓடும் ஒரு வீடியோ செய்தியில், அல் கொய்தா அமைப்பின் இந்திய பிரிவு தலைவரான ஆசிம் உமர் என்பவர் மிரட்டல் விடுத்துள்ளார்.

அல் கொய்தா ஆதரவு இணையதளமான அல் சஹாப் வெளியிட்டுள்ள இந்த வீடியோவில் முதல் முறையாக இந்திய பிரதமர் மோடியின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.

’பிரான்சில் இருந்து வங்காளதேசம் வரை தாக்குதல்கள் ஓயப்போவது இல்லை’ என்ற பெயரில் அந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

அதில், மோடி முஸ்லீம்களை மறைமுகமாக குறி வைத்துள்ளார். பல இந்து மத அமைப்பினர் முஸ்லீம்களைத் தாக்கிப் பேசி வருகிறார்கள்.

மோடியின் சில பேச்சுக்களைப் பார்க்கும்போது அவர் முஸ்லீ்ம்களை மறைமுகமாக குறி வைத்திருப்பதையே காட்டுகிறது. உலக வங்கி, ஐஎம்எப் மூலமாக முஸ்லீம்களுக்கு எதிரான போரைத் தொடுத்துள்ளார் மோடி.

சார்லி ஹெப்டோ தாக்குதலை யாரும் மறந்து விடக் கூடாது. வங்கதேச பிளாக்கர் அவிஜித் ராய் மரணத்தை மறந்து விடக் கூடாது என்று உமர் கூறியுள்ளார்.

இதையடுத்து உளவுத்துறை அமைபான “ரா” அமைப்பு இந்த வீடியோ செய்தி குறித்த விசாரணையில் இறங்கியுள்ளது.

கடந்த 2 தினங்களாக இது பற்றி ஆய்வு செய்யப்பட்டதை அடுத்து, பிரதமர் மோடி பாதுகாப்பை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அவர் பங்கேற்கும் கருத்தரங்கங்கள், விழாக்களில் எத்தகைய பாதுகாப்பு நடைமுறையை கடைபிடிப்பது என்று மறு ஆய்வு செய்யப்பட்டது.

பிரதமர் மோடி டெல்லியை விட்டு வெளி மாநிலங்களுக்கு செல்லும் போது குறைந்தபட்சம் அவருக்கு 5 முதல் 7 அடுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் வரும் 9ம் திகதி, பிரதமர் மோடி மேற்கு வங்க மாநிலத்துக்கு செல்லவுள்ளதால், அங்கு அவருக்கு 5 அடுக்கு உயர்மட்ட பாதுகாப்பு கொடுக்கும்படி கொல்கத்தா பொலிசாருக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum