Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


பிரதமருடனான சந்திப்பு வெற்றிகரமாக அமைந்தது: விஜயகாந்த் மகிழ்ச்சி

Go down

பிரதமருடனான சந்திப்பு வெற்றிகரமாக அமைந்தது: விஜயகாந்த் மகிழ்ச்சி Empty பிரதமருடனான சந்திப்பு வெற்றிகரமாக அமைந்தது: விஜயகாந்த் மகிழ்ச்சி

Post by oviya Thu Apr 30, 2015 1:37 pm

தமிழகத்தின் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காண டெல்லி சென்ற தேமுக தலைவர் விஜயகாந்த வெற்றியுடன் திரும்பியுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டு என்ற இடத்தில் கர்நாடக அரசு அணை கட்டுவதை தடுத்து நிறுத்துவது உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காண வலியுறுத்தி தேமுதிக தலைவர் விஜயகாந்த் அனைத்துக் கட்சி பிரதிநிதிகளுடன் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து கடந்த 27-ம் திகதி மனு கொடுத்தார்.

அதன்பின் மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத்சிங் உள் ளிட்ட பலரை சந்தித்துவிட்டு விஜயகாந்த் நேற்று முன்தினம் சென்னை திரும்பினார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் விஜயகாந்த் கூறியதாவது:

டெல்லி பயணம் வெற்றி கரமாக அமைந்தது. இரு துருவங்களாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் பாரதிய ஜனதா, காங்கிரஸ் ஆகிய இரு கட்சியினரையும் ஒன்றாக டெல்லிக்கு அழைத்துச் சென்றதே மிகப்பெரிய வெற்றிதான்.

பிரதமரை பார்த்து தமிழக நலன் சார்ந்த கோரிக்கைகளை எல்லோரும் வலியுறுத்தி பேசியது மகிழ்ச்சியளித்தது.

எங்கள் கோரிக்கைகளை பிரதமர் மோடி உன்னிப்பாக கேட்டறிந்தார். நிச்சயம் நல்லது செய்வோம் என்று உறுதி அளித்தார். அவர் நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளது.

பிரதமரை சந்திக்க அனைத்து கட்சி உறுப்பினர்களும் வந்த நிகழ்வை கூட்டணி என்று இப்போது சொல்ல முடியாது. போக போகத்தான் தெரியும்.

ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அரசு வழக்கறிஞர் ஆச்சாரியா தனி நீதிமன்ற நீதிபதி குன்ஹா அளித்த தீர்ப்பு சரியானதுதான் என்று கூறியுள்ளார்.

அரசுத் தரப்பு வழக்கறிஞரே தீர்ப்பை வரவேற்று கூறிய பின்பு நான் மாற்று கருத்து தெரிவிக்க முடியாது என விஜயகாந்த் தெரிவித்தார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum