Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


100 அரசாங்கத்தின் பாதுகாப்பு வியூகம்!

Go down

100 அரசாங்கத்தின் பாதுகாப்பு வியூகம்! Empty 100 அரசாங்கத்தின் பாதுகாப்பு வியூகம்!

Post by oviya Sun Apr 26, 2015 1:02 pm

புதிய அரசாங்கம் கடந்த வாரத்துடன் 100 நாட்களை நிறைவு செய்திருக்கின்ற நிலையில், இலங்கையின் பாதுகாப்புச் சூழலில் இது பெரியளவிலான தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதாகக் கூற முடியாது.
பாதுகாப்புச் சூழல் என்று இங்கு கூறப்படும்போது, தனியே இராணுவப் பாதுகாப்பு விடயங்களை மட்டும் சார்ந்திருக்க முடியாது. பொதுமக்கள் பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு, மனித உரிமைகள் போன்றவற்றையும் இது உள்ளடக்குகின்றது.

மூன்று மாதங்களுக்கு முன்னர், மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியின்போது நிலவிய பாதுகாப்புச் சூழல் அனைவராலும் அறியப்பட்ட ஒன்று தான். அந்த நிலைமை மீதிருந்த வெறுப்பும் கூட, மூன்று மாதங்களுக்கு முன்னர் நடந்த ஜனாதிபதி தேர்தலில், மஹிந்த ராஜபக்ஷ தோற்கடிக்கப்பட்டு, புதிய அரசாங்கம் பதவிக்குக் கொண்டு வரப்படுவதற்கும் ஒரு காரணமாக இருந்தது.

மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கம் பதவிக்கு வந்த போது, பலவிதமான அச்சங்கள் காணப்பட்டன.

கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளாகப் பதவியில் இருந்த முன்னைய ஆட்சியில், பாதுகாப்புக் கட்டமைப்புகள் அனைத்தும், அதனை நோக்கியதாகவே வளைக்கப்பட்டு வடிவமைக்கப்பட்டிருந்தது.

அவ்வாறு மஹிந்த ராஜபக்ச, கோத்தபாய ராஜபக்ஷ போன்றவர்களால் உருவாக்கப்பட்ட தமக்கு விசுவாசமான ஒரு பாதுகாப்புக் கட்டமைப்பு, புதிய அரசின் ஜனநாயக ரீதியான செயற்பாடுகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துமோ? என்ற அச்சம் ஆரம்பத்தில் இருக்கவே செய்தது.

அதுபோலவே, ஜனநாயகம், நல்லாட்சி, சட்டம், ஒழுங்கு, மனித உரிமைகளை மீள மைப்பதிலும் புதிய அரசாங்கம் சிக்கல்களை எதிர்நோக்கும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.

ஏனென்றால், ஒரு தசாப்த காலத்தில், முன்னைய ஆட்சியின் வேர்கள் ஆழமாக ஊன்றியிருந்தன. அவற்றை மீறி, சீரமைப்புகளை மேற்கொள்வது இலகுவான காரியமில்லை.

ஆனாலும், புதிய அரசாங்கம், ஜனநாயகம், மனித உரிமைகள், நல்லாட்சி போன்றவற்றில் முன்னேற்றத்தை எட்டியுள்ளதாக அமெரிக்கா போன்ற நாடுகளால் புகழாரம் சூட்டப்பட்டுள்ளது.

அதேவேளை, நாட்டின் பாதுகாப்புக் கட்டமைப்பில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் இடம்பெற்றுள்ள போதிலும், முன்னர் எதிர்பார்க்கப்பட்டளவுக்கு பெரியளவில் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளதாக கருத முடியாது.

பாதுகாப்புக் கட்டமைப்பு ஒட்டுமொத்தமாகவே மாற்றியமைக்கப்படும் என்றும், முன்னைய ஆட்சியில் பாதுகாப்பு கட்டளை அமைப்புகளின் தலைமைப் பொறுப்புகளுக்கு நியமிக்கப்பட்டவர்கள் மாற்றப்படுவார்கள் என்றும் பலத்த எதிர்பார்ப்பு நிலவியது.

உதாரணத்துக்கு, முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ஷவுக்கு மிகவும் நெருக்கமாக இருந்தவரான ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய கூட்டுப்படைகளின் தளபதி பதவியில் இருந்து நீக்கப்படுவார் என்றும், விமானப்படைத் தளபதி விரைவில் மாற்றப்படுவார் என்றும், நிலவிய எதிர்பார்ப்பு இன்று வரை நிறைவேறவில்லை.

இவர்களை பதவியில் இருந்து ஓய்வு பெற வைத்து விட்டு புதியவர்களை அரசாங்கம் நியமித்திருக்கலாம். ஆனால் அவ்வாறு செய்ய முனையவில்லை. அதேவேளை, இராணுவத் தளபதியாக இருந்த ஜெனரல் தயா ரத்நாயக்க ஓய்வுபெற வேண்டிய காலம் நெருங்கியதால், புதிய தளபதியாக லெப்.ஜெனரல் கிரிசாந்த டி சில்வா நியமிக்கப்பட்டார்.

முன்னைய ஆட்சிக்கு மிக நெருக்கமாக இருந்த தளபதிகள் மாற்றப்பட்டு, அவர்களின் முக்கியத்துவங்கள் குறைக்கப்பட்டாலும், முற்றிலுமாக அவர்கள் பாதுகாப்புத் தரப்பில் இருந்து ஓரங்கட்டப்படவோ, ஒதுக்கி வைக்கப்படவோ இல்லை. பாதுகாப்புத் தரப்பு இலங்கையில் வலிமையான ஒன்று என்பதை தற்போதைய அரசாங்கம் உணர்ந்திருக்கிறது.

அதனுடன் முரண்பட்டுக் கொள்வதன் ஆபத்தையும், அது புரிந்து கொண்டிருக்கிறது. அதனால், பாதுகாப்புத்துறையுடன் நெருக்கமான இறுக்கமான உறவை ஏற்படுத்திக் கொள்வதற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில், அரசியல் செல்வாக் கில் இராஜதந்திர சேவைக்கு நியமிக்கப்பட்ட தூதுவர்கள் மற்றும் இராஜதந்திரிகள் திருப்பி அழைக்கப்பட்ட போது, முன்னாள் படைத் தளபதிகளான, அட்மிரல் திசார சமரசிங்க, வசந்த கரன்னகொட போன்றவர்களின் பதவிகள் தான் பறிக்கப்பட்டன.

ஆனால், பல்வேறு நாடுகளிலும் இரண்டாவது நிலைத் தூதுவர்களாகவும், இராஜதந்திரிகளாகவும் நியமிக்கப்பட்ட படை அதிகாரிகளை புதிய அரசாங்கம் திருப்பி அழைக்கவில்லை. அவர்கள் தமது இரண்டு ஆண்டு சேவையை நிறைவு செய்வதற்கு சந்தர்ப்பம் அளித்துள்ளது.

இதன் மூலம், பாதுகாப்புத் தரப்புடன் முரண்படாத- அதனுடன் நெருக்கமான உறவுகளைப் பேணுகின்ற நிலைப்பாட்டை அரசாங்கம் வெளிப்படுத்தியிருக்கிறது. புதிய அரசாங்கம், இராணுவப் புரட்சி ஒன்று பற்றிய சாத்தியங்களுடன் தான் பதவிக்கு வந்தது என்பதால், படையினரை அதிருப்திக்குள்ளாக்கும் வகையிலான விடயங்களைத் தவிர்த்துக் கொண்டுள்ளது.

பாதுகாப்புத் தரப்பினரைத் திருப்திய டையச் செய்யும் அரசாங்கத்தின் கொள் கை தமிழ்மக்களை அதிருப்திக்குள்ளாக்கியிருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. 100 நாள் அரசாங்கத்தின் ஆட்சிமாற்றத்தில் முக்கிய பங்கெடுத்த வடக்கு, கிழக்குத் தமிழ் மக்கள், தம்மீதான இராணுவ நெருக்குவாரங்கள், குறைக்கப்படும் என்று அதிகமாகவே நம்பியிருந்தனர்.

குறிப்பாக, வடக்கு, கிழக்கில் அளவுக்கதிகமாக குவிக்கப்பட்டுள்ள படையினர் குறைக்கப்பட்டு, பொதுமக்களின் காணிகளிலும், அவர்களின் குடியிருப்புகளுக்கு மத்தியிலும் அமைக்கப்பட்டுள்ள படை முகாம்கள் விலக்கப்பட்டு, இயல்பானதொரு சூழல் உருவாகும் என்ற எதிர்பார்ப்பு அவர்களிடத்தில் இருந்தது.

எனினும், தற்போதைய அரசாங்கம் தனது 100 நாள் செயற்றிட்டத்தில் பாதுகாப்புத் துறை சார்ந்த எந்தத் தடைகளையோ கட்டுப்பாடுகளையோ நீக்குவதாக, வாக்குறுதியைக் கொடுக்கவில்லை.

அவ்வாறான வாக்குறுதி ஜனாதிபதி தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை, மைத்திரிபால சிறிசேனவும் அவரை முன்னிறுத்திய தரப்புகளும் மட்டுமன்றி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் கூட நன்றாகவே அறிந்திருந்தது. அதனால் தான், மைத்திரிபால சிறிசேனவுடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எழுத்து மூலமான ஒரு உடன்பாட்டைச் செய்து கொள்வதையும் தவிர்த்துக் கொண்டது.

அதேவேளை, புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர், தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் நடந்து கொண்டிருக்கிறது என்று கூற முடியாது. 100 நாள் செயற்றிட்டங்களுக்கு அப்பால், வலி.வடக்கில் ஏற்கனவே முன்னைய அரசாங்கத்தினால் விடுவிக்கப்படத் தயார் நிலையில் இருந்த ஆனால், விசமத்தனமாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்த 1000 ஏக்கர் நிலங்களை விடுவிக்க ஏற்பாடு செய்துள்ளது.

சம்பூரிலும், பொதுமக்களின் ஒரு தொகுதி நிலங்களை விடுவிக்கவும் இணங்கியிருக்கிறது. இதற்காக, சம்பூரில் உள்ள பொதுமக்களின் காணிகளில் அமைக்கப்பட்ட, கடற்படையின் அடிப்படைப் பயிற்சி நிலையத்தை வேறு இடத்துக்கு மாற்றவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

எனினும், வடக்கிலும் கிழக்கிலும், பொதுமக்களின் ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகள் இன்னமும், உயர் பாதுகாப்பு வலயங்களாகவே முட்கம்பி வேலிகளுக்குள் அகப்பட்டுக் கிடக்கின்றன. வலி.வடக்கில் விடுவிக்கப்பட்ட பொதுமக்களின் காணிகளும் கூட, அதிகம் தரிசாக கிடந்தவையே தவிர மக்கள் குடியிருப்புகளைச் சார்ந்தவையல்ல.

விடுவிக்கப்பட்ட காணிகளைப் பயன்படுத்த முடியாத வகையில், பல இடங்களில், வீதிகளை மறித்து இராணுவ வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு கையால் கொடுத்து விட்டு மறுகையால் பிடுங்குவது போலவே, வலி.வடக்கில் பலர் ஏமாந்து போய் உள்ளனர். அதைவிட பொதுமக்கள் குடியமர்வதற்காக விடுவிக்கப்பட்ட பகுதிகளில் கண்ணிவெடிகள் கூட அகற்றப்படாமல் உள்ளன.

இது பொதுமக்கள் மீளக்குடியேறுவதை தடுக்க வேண்டும் என்ற இராணுவ நோக்கத்தையே வெளிப்படுத்துகிறது. தமது சொந்த நிலங்களில் குடியமரும் ஆவலில் இருந்து பலரும், இந்த நிலையால் நிர்க்கதியாகியுள்ளனர்.

இராணுவத்தினரின் பயன்பாட்டுக்குத் தேவையற்ற தனியார் காணிகள் அனைத்தும் பொதுமக்களிடம் மீள ஒப்படைக்கப்படும் என்ற வாக்குறுதியை கடந்த வியாழக்கிழமையும் கூட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நினைவுபடுத்தியிருக்கிறார்.

எனினும், வலி.வடக்கிலும், வன்னியிலும், சம்பூரிலும், பெரியளவிலான நிலப்பரப்புகளை வளைத்துப் போட்டு, அமைக்கப்பட்டுள்ள படைத் தளங்களை விலக்கிக் கொள்வதற்கு தற்போதைய அரசாங்கம் தயாராக இல்லை. படை முகாம்களையோ, படையினரையோ குறைப்பது குறித்த எந்த முடிவுக்குச் செல்வதற்கு, இந்த 100 நாள் அரசாங்கம் ஒரு அங்குலத்தையேனும் முன்னோக்கி அடி எடுத்து வைக்கவில்லை.

அது, பாராளுமன்றத் தேர்தலில் தமக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை அரசாங்கம் அறியும். அதனால், வடக்கு, கிழக்கின் பாதுகாப்பு நிலைமைகளில் எந்த தளர்வையும் காட்டும், நிலையில் புதிய அரசாங்கம் இருக்கவில்லை.

வெளிப்படையான இராணுவ நெருக்குவாரங்கள் குறைந்து. பொதுமக்கள் மீதான அழுத்தங்கள் கொஞ்சம் குறைக்கப்பட்டுள்ள போதிலும், முன்னைய அரசின் பாதுகாப்புக் கொள்கையில் இருந்து பெரிதாக இந்த அரசாங்கம் வேறுபாட்டைக் காட்டவில்லை.

முன்னைய அரசாங்கம், வெளிப்படையாக இராணுவத்தை நிறுத்தி பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொண்டது. ஆனால் இப்போதைய அரசாங்கம், வெளிப்படையாக படையினரை நிறுத்தி, படைக் கெடுபிடி என்ற தோற்றத்தைக் காட்டுவதை தவிர்த்துக் கொண்டுள்ளது. ஆனால், புலனாய்வுப் பிரிவுகளைக் களமிறக்கி கண்காணிப்பை தீவிரப்படுத்தியிருக்கிறது.

வெளிப்படையாக இராணுவ நெருக்குவாரங்களில்லாமல் வாழுகிறோம் என்று வடக்கு கிழக்கிலுள்ள மக்களை திருப்தியடையச் செய்வதில் புதிய அரசாங்கம் ஓரளவுக்கு வெற்றி கண்டிருக்கிறது. ஆனால், இராணுவ சீருடையணியாதவர்களால் தாம் கண்காணிக்கப்படுகிறோம் என்பதை அவர்களில் பலரும் அறிந்திருக்கவில்லை.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum