Top posting users this month
No user |
Similar topics
இழந்ததைப் பிடிக்க சீனா வகுக்கும் வியூகம்
Page 1 of 1

இலங்கையில் ஏற்பட்ட ஆட்சிமாற்றத்தையடுத்து, சீனா தனது அணுகுமுறையில் மாற்றங்களை ஏற்படுத்தத் தொடங்கியிருக்கிறது. மஹிந்த ராஜபக்சவின் வீழ்ச்சி சீனாவுக்கு இரண்டு விதமான பாதகங்களை ஏற்படுத்தியது.
முதலாவது, இலங்கையில் சீனாவின் முதலீடுகளின் எதிர்காலம் பாதிக்கப்பட்டு பொருளாதார ரீதியான வாய்ப்புக்கள் இழக்கப்படும் ஆபத்து.
இரண்டாவது, கேந்திர முக்கியத்துவம் மிக்க இலங்கைத்தீவில் சீனாவின் செல்வாக்கு வலுவிழந்து போகும் ஆபத்து.
இந்த இரண்டு பாதிப்புகளையிட்டும், சீனா அதிகளவில் கவலை கொண்டுள்ளது என்பதில் சந்தேகமில்லை. தற்போதைய அரசாங்கம் பதவிக்கு வர முன்னரே, சீனாவின் திட்டங்களுக்கு குறிப்பாக, கொழும்புத் துறைமுக நகரத் திட்டத்துக்கு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
ஆட்சி மாற்றத்தின் பின்னர், சீன ஜனாதிபதி, பிரதமர், வெளிவிவகார அமைச்சர், உள்ளிட்ட தரப்பினரால் இலங்கையின் புதிய அரசாங்கத்துக்குப் பரிமாறிக் கொள்ளப்பட்ட அத்தனை வாழ்த்துக்கள், செய்திகளும், இலங்கையுடன் இறுக்கமான உறவு தொடர்வதை உறுதிப்படுத்தும் வகையிலும், சீனாவின் திட்டங்களுக்கு ஒத்துழைப்புக் கிடைக்கும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தும் வகையிலும் அமைந்திருந்தன.
ஆயினும், கொழும்புத் துறைமுக நகரத் திட்ட விவகாரம் உள்ளிட்ட எல்லா விடயங்களிலுமே, இலங்கையின் புதிய அரசாங்கத்தின் நகர்வுகள் குறித்து சீனாவுக்கு முழு நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கவில்லை.
ஏனென்றால், முன்னைய அரசாங்கம் முறைகேடான வகையில் உடன்பாடுகளைச் செய்திருப்பதாகவும், அபிவிருத்தித் திட்டங்களில் ஆயிரக்கணக்கான கோடி ரூபா முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாகவும் குற்றஞ்சாட்டியிருந்ததுபுதியஅரசாங்கம்.
தவறான முறையில் வழங்கப்பட்ட ஒப்பந்தங்களின் மூலம், பெருமளவு தரகுப்பணம் முன்னைய அரசாங்கத்தில் இருந்தவர்களால் சுருட்டப்பட்டதாக குற்றம்சாட்டியே பதவிக்கு வந்த புதிய அரசாங்கம் தாம் அந்த தவறுகளைச் சரி செய்வதாகவும் குற்றம் செய்தவர்களை தண்டிப்பதாவும் வாக்குறுதி அளித்திருந்தது.
தேர்தலில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டிய கடப்பாடு புதிய அரசாங்கத்துக்கு இருப்பதால், தமது திட்டங்கள் எல்லாமே சிக்கலுக்குள்ளாகும் என்று சீனா எதிர்பார்த்தது.
அதேவேளை, ஆட்சியைப் பொறுப்பேற்ற பின்னர் தான், சீனாவின் முதலீடுகள் எல்லாவற்றையும் இடைநிறுத்துவதன் ஆபத்தை தற்போதைய அரசாங்கம் ஓரளவுக்குப் புரிந்து கொண்டிருக்கிறது. அதனால் தான், ஆரம்பத்தில், கொழும்புத் துறைமுக நகரத்திட்டம் இடைநிறுத்தப்படவுள்ளதாக அறிவித்து, இந்தியாவைக் குளிர்மைப்படுத்திய புதிய அரசாங்கம் பின்னர், இடைநிறுத்தப்படாது என்று அறிவித்து குழப்பத்தையும் ஏற்படுத்தியது.
இறுதியாக கொழும்புத் துறைமுக நகரத் திட்டம் குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவித்திருந்தார்.
வரும் 18ம் திகதி இது பற்றிய இறுதி முடிவு அறிவிக்கப்படும் என்றும் புதிய அரசாங்கம் அறிவித்திருக்கிறது.
எவ்வாறாயினும், இந்தியாவுக்கு விருப்பமில்லாது போனாலும் கொழும்புத் துறைமுக நகரத் திட்டத்தை அப்படியே இடைநிறுத்துவது பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தும் என்றும் புதிய அரசாங்கம் கருதுகிறது.
என’வே சீனாவின் திட்டம் செயற்படுத்தப்படுவது பெரும்பாலும் உறுதியாயிருக்கிறது. அதுபோலவே சீனாவின் 40ற்கும் அதிகமான திட்டங்கள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்பதும் உறுதியாயிருக்கிறது. இது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாது போனாலும், இறுதியான நிலை இதுவாகத்தான் இருக்கும்.
ஏனென்றால், அதற்கு சீனா ஒரு இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றது.
ஆட்சி மாற்றத்தினால் இலங்கையில் தனக்குப் பாதகமான நிலை ஏற்பட்டு விட்டது என்று சீனா ஒதுங்கிக் கொள்ளவில்லை. உடனடியாகவே களத்தில் இறங்கிக் காய்களை நகர்த்தத் தொடங்கியுள்ளது.
புதிய அரசாங்கம் பதவியேற்றதும் இந்தியாவுக்குச் சாதகமான சமிக்ஞைகளை காண்பித்தது உண்மை. வெளிவிவகார அமைச்சராக பதவியேற்ற சில நாட்களிலேயே புதுடில்லிக்கு பறந்து சென்றிருந்தார் மங்கள சமரவீர. இன்று புதுடில்லிக்கு பயணமாகவுள்ளார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன.
பொதுவாகவே இலங்கையின் ஜனாதிபதியாக பதவியேற்றவர்கள் முதலில் இந்தியாவுக்கே பயணம் செய்வது வழக்கம்.
அதையேதான் மைத்திரிபால சிறிசேனவும் கடைபிடித்திருக்கிறார்.
மைத்திரிபால சிறிசேனவின் பயணத்தையடுத்து அடுத்த மாதம் இந்திய பிரதமர் நரேந்திர மோடி கொழும்புக்கு வரவுள்ளார்.
மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்துடன் ஏற்பட்டிருந்த இடைவெளியை இந்தியா நிரப்பிக் கொண்டிருக்கிறது. அதேவேளை ஆட்சி மாற்றத்தையடுத்து இலங்கையின் புதிய அரசாங்கத்துடன் நெருக்கத்தை உறுதிப்படுத்திக் கொள்வதற்கு சீனாவுக்கு கால அவகாசம் தேவைப்பட்டது உண்மை.
மைத்திரிபால சிறிசேன தெரிவு செய்யப்பட்ட ஒரு சில மணித்தியாலங்களுக்குள்ளாகவே இந்தியத் தூதுவர் வை.கே.சின்ஹா பூச்செண்டுடன் சென்று அவருக்கு வாழ்த்துக் கூறினார். ஆனால் சீனத் தூதுவரால் ஆறு நாட்களின் பின்னரே, மைத்திரிபால சிறிசேனவைச் சந்திக்க முடிந்தது.
இதனை ஒரு பெரிய இடைவெளியாக ஆய்வாளர்கள் குறிப்பிட்டிருந்தாலும், அதையடுத்து சீனா விழித்துக் கொண்டு காய்களை நகர்த்தியுள்ளது. அதன்படி. சீன ஜனாதிபதியின் விசேட தூதுவராக, வெளி விவகார உதவி அமைச்சர் லியூ ஜியான்சோ கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அவருடன் கூடவே சீனாவின் 10 உயர் அதிகாரிகள் கொண்ட குழுவும் கொழும்பு வந்திருந்தது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதமர் ரணில் விக்ரமசிங்க, வெளி விவகார அமைச்சர் மங்கள சமரவீர உள்ளிட்ட தரப்பினரைச் சந்தித்துப் பேசிய அந்தக் குழு.
இந்தப் பேச்சுக்களின் மூலமே ஓர் இணக்கம் எட்டப்பட்டது. அதாவது சீனாவின் திட்டங்கள் எதையும் உடனடியாக நிறுத்துவதில்லை திட்டங்களை மீளாய்வு செய்வதற்கு சீனா ஒத்துழைக்கும் அது குறித்து அடுத்த மாதம் சீனா செல்லும் போது ஜனாதிபதி மைத்திரிபால் சிறிசேனவுடன் பேச்சு நடத்தப்படும். இதுதான் அந்த இணக்கப்பாடு அதாவது ஏற்கனவே செய்து கொள்ளப்பட்ட குறைகளை திட்டங்கள் மீளாய்வு குறை நிறைகளை நிவர்த்தி செய்ய தயார் என்று சீனா இணக்கப்பட்டை ஊற்படுத்தியது. இதன் மூலம் தனது திட்டங்களை கைவிடப்படுவதில் இருந்து பாதுகாத்துக் கொண்டது சீனா.
விசேட தூதுவரை அனுப்பி தனது நிலையை ஓரளவுக்கு உறுதிப்படுத்திக் கொண்டதுடன் சீனா நின்று விடவில்லை.
உடனடியாகவே சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுவின் கீழ் செய்யப்படும் சர்வதேசத் திணைக்களத்தின் அமைச்சர் வாங்ஜியாரூய் தலைமையில் மூன்று பேர் கொண்ட குழுவையும் அனுப்பியது. கடந்த வாரம் இந்தக் குழு கொழும்பு வந்து ஒரு வாரகாலம் தங்கியிருந்து அரசாங்கத் தரப்புடனும், அரசியல் கட்சிகளுடனும் விரிவான கலந்துரையாடலை நடத்தியது.
இந்தக்குழு அனுப்பி வைக்கப்பட்டதன் நோக்கம் ஆட்சி மாற்றத்துக்கான காரணம் என்ன, ஆட்சி மாற்றத்தின் பின்னர் ஏற்பட்டுள்ள நிலைமைகள் என்ன, இங்குள்ள அரசியல் தலைமைகளின் எதிர்பார்ப்பு என்ன என்பன போன்ற பல கேள்விகளுக்கு பதில் தேடுவதேயாகும்.
இவர்கள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை மட்டுமின்றி தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் உள்ளிட்ட தரப்பினரையும் சந்தித்துப் பேசியிருந்தனர். இதுவரையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை சீனா அவ்வளவாக கரிசனையில் கொண்டதில்லை.
கூட்டமைப்பின் கருத்துக்களை செவி மடுத்ததும் இல்லை. தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகள் என்னவென்று கூட சீனா கேட்டதில்லை. ஆனால் மஹிந்த ராஜபக்சவின் தோல்வியை அடுத்து சீனாவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கருத்தை அவர்களின் எதிர்ப்பார்ப்பை அறிந்து கொள்ள வேண்டிய நிலையை ஏற்படுத்தியிருக்கிறது.
இது இந்தியாவை குட்டி முந்தும் செயற்பாடு என்று எடுத்துக் கொள்ள முடியாது போனாலும் பின்னடைவுகளில் இருந்து பாடம் கற்றுக் கொள்ளும் பின்னடைவுகளுக்கான காரணங்களைக் கண்டறிந்து முன்னேறும் வேகம் சீனாவிடம் இருப்பதை எடுத்துக்காட்டியிருக்கிறது.
இலங்கையின் கேந்திர முகாமைத்துவம் காரணமாக அதனை இழப்பதற்கு சீனா ஒரு போதும் விரும்பாது.
ஆட்சி மாற்றம் என்ற தடைக்கல் ஒன்று வந்திருந்தாலும் அதனை விலக்கியபடி தனது காய்நகர்த்தலை செய்ய முனைகிறது சீனா.
அதனால் தான் இதுவரை கண்டு கொள்ளாதிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கருத்துக்களை கூட செவி மடுக்கும் நிலைக்கும் வந்திருக்கிறது.
சீனாவின் இந்த அணுகுமுறையும் தற்போது மேற்கொண்டுள்ள ஆய்வுகளின் மூலம் அது எடுக்கவுள்ள முடிவுகள் மற்றும் வகுக்கவுள்ள உபாயங்களும் இலங்கையுடன் மேலும் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளும் வாய்ப்புக் கிடைக்கக் கூடும்.
இருந்தாலும் இதனை இந்தியா எந்தளவுக்கு அனுமதிக்கப் போகிறது என்பதை இன்று புதுடெல்லிக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆரம்பிக்கவுள்ள பயணத்தின் போது கோடி காட்டப்படும் என்பதில் சந்தேகமில்லை.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» 100 அரசாங்கத்தின் பாதுகாப்பு வியூகம்!
» வெயிலைத் தாக்குப் பிடிக்க.....!
» சீனா – இந்தியா இடையே தடுமாறும் இலங்கை
» வெயிலைத் தாக்குப் பிடிக்க.....!
» சீனா – இந்தியா இடையே தடுமாறும் இலங்கை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum