Top posting users this month
No user |
Similar topics
19வது திருத்தச் சட்டத்தை நிறைவேற்ற ஐ.தே.கட்சிக்கு அக்கறையில்லை!– எதிர்க்கட்சித் தலைவர்
Page 1 of 1

19வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை நிறைவேற்றும் தேவை ஐக்கிய தேசியக் கட்சிக்கு இல்லை என எதிர்க்கட்சித் தலைவர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

விருப்பம் இல்லாவிட்டால் ஆதரவு வழங்க வேண்டாம் என ஐக்கிய தேசியக் கட்சியின் அடிக்கடி கூறி வருகின்றனர்.
19வது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றும் தேவை அந்த கட்சியினருக்கு இல்லை என்பதையே இது காட்டுகிறது. எனவும் எதிர்க்கட்சித் தலைவர் கூறியுள்ளார்.
கொழும்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
எவ்வாறாயினும் 19வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்துடன் தேர்தல் முறை மாற்றம் தொடர்பான 20வது திருத்தச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்.
19வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை நிறைவேற்றி விட்டு ஐக்கிய தேசியக் கட்சி எம்மை ஏமாற்ற முயற்சித்து வருகிறது.
அதேவேளை திறைசேரி பத்திர மோசடி சம்பவம் தொடர்பில் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அர்ஜூன் மகேந்திரன் பதவி விலக வேண்டும்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவே திருடர்களை பாதுகாக்க முயற்சித்து வருகிறார். சம்பவம் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணை அறிக்கையை ஏற்க போவதில்லை என நிமால் சிறிபால டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை இந்த ஊடக சந்திப்பில் கருந்து வெளியிட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளரான அனுரபிரியதர்ஷன யாப்பா,
அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் குறித்து ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் அனைத்து கட்சிகளும் விகாரமஹாதேவி பூங்காவில் கூடிய கலந்துரையாடவுள்ளன.
அத்துடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுவில் இருந்து நீக்கப்பட்டவர்கள் குறித்தும் மத்திய செயற்குழுவில் கலந்துரையாடி ஒரு இணக்கத்தை ஏற்படுத்த எதிர்பார்த்துள்ளோம்.
100 நாள் வேலைத்திட்டம் முடிவடைந்துள்ளது. அதில் பல குறைபாடுகள் உள்ளன. பின்னவல திறந்தவெளி விலங்கியல் பூங்கா 100 நாட்களுக்கு நிர்மாணிக்கப்பட்டது என்பது கேலிக்குரியது.
அதேவேளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கும் இடையில் சந்திப்பொன்று நடைபெறவுள்ளதுடன் அதற்கான திகதியை ஜனாதிபதி வழங்குவார் என அனுரபிரியதர்ஷன யாப்பா குறிப்பிட்டுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» சுதந்திரக் கட்சி பிரதமரை நியமிப்பது மூலம் 20ம் திருத்தச் சட்டத்தை நிறைவேற்ற முடியும்!- டலஸ்
» 19வது திருத்தச் சட்டத்தை மல்வத்து மாநாயக்கரிடம் கையளித்த ஜனாதிபதி
» 19ம் திருத்தச் சட்டத்தை நிறைவேற்றுவதில் சிக்கல் நிலை?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum