Top posting users this month
No user |
Similar topics
பொன்னான வாய்ப்புக்களை நழுவவிட்ட ம.வி.மு: சோமவன்ச குற்றச்சாட்டு
Page 1 of 1

மக்கள் விடுதலை முன்னணி அநேக விடயங்களை புரிந்து கொள்ளாமல் செயற்பட்டு வருகின்றது என அக்கட்சியின் முன்னாள் தலைவர் சோமவன்ச அமரசிங்க தெரிவித்துள்ளார்.
ஆங்கில நாளிதழொன்றுக்கு அவர் வழங்கியுள்ள செவ்வியிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மக்கள் விடுதலை முன்னணி எதிர்காலத்தில் எவ்வாறானதொரு நிலையை அடையும் என்பதை தம்மால் சிந்தித்து பார்க்க கூட முடியாத நிலைமையே காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய மக்கள் விடுதலை முன்னணி உறுப்பினர்களை தவிர்த்து கட்சியின் நிறுவுனர் ரோஹண விஜேவீரவின் கொள்கைகளை பின்பற்றி புதிய கட்சியொன்றை ஆரம்பிக்கவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
குழப்ப நிலையிலுள்ள சமுதாயத்தை முன்னேற்றுவதற்கு தீவிரமானதும், சரியானதுமான முடிவுகளை சரியான நேரத்திலும், சரியான தருணத்திலும் எடுக்க வேண்டும்.
எனவே சரியான முடிவென்றால் எவ்வித தயக்கமுமின்றி அதை எடுத்து கொள்ள வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காக நான் கடந்த 47 வருடங்கள் மக்கள் விடுதலை முன்னணி சார்பில் போராடி வந்தேன். என் வாழ்வின் இறுதி வரை நான் சோஷலிசத்தை எவருக்காகவும், எதற்காகவும் விட்டுக்கொடுக்க மாட்டேன் என தெரிவித்துள்ளார்.
மக்கள் விடுதலை முன்னணியில் அங்கம் வகித்த காலங்களின் போது முன்னெடுத்த நடவடிக்கைகளை எதிர்வரும் காலங்களிலும் முன்னெடுக்க மாட்டேன் என அவர் தெரிவித்ததுடன், அதே நேரம் மக்கள் விடுதலை முன்னணியிலுள்ள சகோதர சகோதரிகளுக்கு நான் எதிராக நான் ஒருபோதும் செயற்பட மாட்டேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நான் பல அரசியல் கட்சிகளிலிருந்து தான் மக்கள் விடுதலை முன்னணிக்கு வந்தேன்.
எனக்கு லங்கா சமசமாஜ கட்சி மற்றும் கம்யூனிஸ்ட கட்சிகளில் பல அரசியல் தொடர்புடைய நண்பர்கள் இருந்தனர். ஆனால் அவர்களுடன் நான் எவ்வித பிணைப்புக்களையும் ஏற்படுத்தி கொள்ளவில்லை.
ஏனெனில் மக்கள் விடுதலை முன்னணியில் இணைந்து கொண்டால் மாத்திரமே வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மக்களுக்கு சார்பாக செயற்பட முடியும் என்பதை உணர்ந்தேன்.
அதனால் நான் அந்த இலக்கை அடைவேன் என என் உள்ளத்தில் உறுதிபூண்டு கொண்டேன்.
தற்போது நாட்டில் சோஷலிசத்தை ஸ்தாபிப்பதற்கான திறன் மக்கள் விடுதலை முன்னணியை தவிர ஏனைய கட்சிகளுக்கு காணப்படுகின்றன என்பதே உண்மையான கூற்று.
எவ்வாறெனினும் ம.வி.மு பல விடயங்களை புரிந்து கொள்வதில் தவறிழைத்து விட்டது. அவர்கள் வெகு விரைவில் இவ்விடயங்களை உணர்ந்து கொண்டால் எதிர்காலத்தில் வெற்றிப்பாதையில் செல்ல முடியும் எனவும்,
அதை புரிந்து கொள்ளவில்லையெனில் அவர்களுக்கு எதிர்காலம் ஒன்றே இருக்காது எனவும் சோமவன்ச தெரிவித்துள்ளார்.
இலகுவாகவும், விரைவாகவும் கட்சிக்கு வெற்றியை கொண்டு வர முடியும் எனும் நோக்கிலேயே கட்சியில் தற்போது காணப்படும் வசதிகள் குறித்து நான் கணக்கு கேட்டேன்,
எனது பேச்சை மதிக்காமையினால் வரலாறு காணாத வாய்ப்புக்களை மக்கள் விடுதலை முன்னணி இழந்து விட்டது.
கடந்த ஜனவரி மாதம் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் வெளியான போது இராணுவ அரசியல் ஒன்றை ஆரம்பிப்பதற்கு நீதித்துறை சதித்திட்டம் தீட்டியது.
இதனால் தேர்தல் முடிவுகள் சிறிது தாமதத்தின் பின்னரே வெளியிடப்பட்டது. கடந்த கால அரசாங்கத்தின் சதி திட்டம் சிறிய வித்தியாசத்தில் தடுக்கப்பட்டது.
100 நாள் திட்டம் தற்போது முடிவிற்கு வரவுள்ளது, இந்த திட்டத்தில் என்ன நடந்தது என மக்கள் கேள்வியெழுப்பியுள்ளனர்,
மைத்திரிபால நிர்வாகம் குறித்து அவர்கள் பொறுமையிழந்து விட்டனர். அரசாங்கத்தின் மீதான நம்பிக்கை குறைவடையத் தொடங்கிவிட்டது என்பது ஆச்சரியமளிக்கும் விடயமல்ல.
பாராளுமன்ற கலைப்பது குறித்த பேச்சுக்கள் வெளிப்படையாக இடம்பெறுகின்றன.
அரசியலமைப்பிற்கான 19 வது திருத்தம் குறித்து பேச்சு மாத்திரமே காணப்படுகின்றது. எனினும் இது குறித்த செயற்பாடு எதுவும் இடம்பெறவில்லை.
மக்கள் பாராளுமன்ற தேர்தல் நடைபெறுமா? மகிந்த பிரதமராவாரா? போன்ற கேள்விகளை தங்களுக்குள்ளேயே கேட்கின்றனர்.
எனினும் இந்த கேள்விகளுக்கு தற்போது எவரிடமும் பதில் இல்லை எனவும் இரு பிரதான கட்சிகளும் இணைந்து மேலும் குழப்பத்தை அதிகரித்துள்ளன.
நாட்டில் தற்போது பல விடயங்கள் ஆச்சரியமளிக்கும் வேகத்தில் இடம்பெறுகின்றன. இக்காலப்பகுதிக்குள் மக்களுக்கு பாரிய விழிப்புணர்ச்சி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அரசியல் பாடம் போதிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக இரு முக்கிய கட்சிகளையும் வாக்காளர்கள் நிராகரிக்கும் சந்தர்ப்பம் உருவாகியுள்ளதுடன், மக்கள் விடுதலை முன்னணி வெற்றிபெறுவதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது.
அதேவேளை அதேவேகத்தில் ம.வி.மு தனக்கான இந்த பொன்னான வாய்ப்பினை தவறவிடுகின்றது.
மக்கள் விடுதலை முன்னணி தேர்தல் சட்டங்கள் குறித்து விவாதித்துவருகின்றது,
இது மக்களுக்கு அவசியமானதல்ல என அக்கட்சியின் முன்னாள் தலைவர் சோமவன்ச அமரசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» கட்டார் முதலீட்டு வாய்ப்புக்களை ஊக்குவிப்பதற்கு இலங்கை முயற்சி
» எனது வருகைக்காக இன்னும் ஒருவாரம் காத்திருங்கள்: சோமவன்ச
» ஜே.வி.பிக்கு ஆதரவு வழங்கிய மங்கள: சோமவன்ச

Permissions in this forum:
You cannot reply to topics in this forum