Top posting users this month
No user |
Similar topics
கட்டார் முதலீட்டு வாய்ப்புக்களை ஊக்குவிப்பதற்கு இலங்கை முயற்சி
Page 1 of 1

இலங்கை மற்றும் கட்டாருக்கிடையிலான பொருளாதார, வர்த்தக மற்றும் முதலீட்டு துறைகளில் காணப்படும் உறவுகளை வலுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது
முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் கபீர் ஹாஷிம், கட்டாரின் பொருளாதார மற்றும் வர்த்தக அமைச்சர் ஷேக் அஹ்மத் பின் ஜாசிம் பின் முஹம்மத் அல் தானி ஆகியோருக்கிடையில் நேற்று சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இச்சந்திப்பின் போது இரு நாடுகளுக்கும் இடையிலான கூட்டு ஒத்துழைப்பு அம்சங்களை மேம்படுத்தும் வழிகளை பரிசீலித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இரு நாடுகளுக்கும் இடையில் வர்த்தக மற்றும் பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பல ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன.
இதன்படி கடந்த 2012 ம் ஆண்டு கொழும்பில் கைச்சாத்திடப்பட்ட பொருளாதார, வர்த்தக, தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தம், 2012 ம் ஆண்டு தோஹாவில் கைச்சாத்திடப்பட்ட பரஸ்பர முதலீடுகளை பாதுகாத்தல் மற்றும் ஊக்குவித்தல் ஒப்பந்தம், 2007 ம் ஆண்டு கட்டார் வர்த்தக சபையும், இலங்கை வர்த்தக சபையும் செய்து கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் உள்ளிட்டவை குறிப்பிடத்தக்கது.
கொழும்புக்கும் தோஹாவுக்குமிடையில் 2014 ம் ஆண்டின் பொருளாதாரப் பரிமாற்றத்தின் அளவு 417.4 மில்லியன் ரியால் என கட்டார் அரசாங்கம் மதிப்பீடு செய்துள்ளது.
கட்டார் மன்னரின் இலங்கை விஜயத்தின் போது இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தக உறவை வலுப்படுத்துவதோடு, மற்றும் பொருளாதார பரிமாற்றங்களுக்கான புதிய வாய்ப்புக்களையும் உருவாக்கும் என தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இரு நாடுகளுக்கும் இடையே ஏற்றுமதிகளை அதிகரிப்பதன் மூலம் விமான போக்குவரத்து துறையை விரிவாக்கம் செய்தல், தமது நாட்டுக்கு பொருத்தமான வகையில் இலங்கையில் காணப்படும் முதலீட்டு வாய்ப்புகளை கண்டறிந்து,
உரிய முதலீடுகளை மேற்கொள்வதன் ஊடாக இரு நாட்டு பொருளாதார உறவை மேம்படுத்துவதற்கு கட்டார் முயற்சித்து வருவதாக கட்டார் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» ஜனாதிபதி மைத்திரிக்கு கட்டார் வாழ்த்து
» புலிகளுக்கு மஹிந்த பணம் கொடுத்த விவகாரம்: எமில்காந்தனை இலங்கை அழைத்துவர முயற்சி
» பொன்னான வாய்ப்புக்களை நழுவவிட்ட ம.வி.மு: சோமவன்ச குற்றச்சாட்டு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum