Top posting users this month
No user |
Similar topics
தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் கோவில்
Page 1 of 1
தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் கோவில்
தர்மபுரிக்கு அருகில் அமைந்திருக்கும் தீர்த்தமலை மிகவும் பிரசித்தி பெற்ற ஒரு ஆன்மீக தலமாகும். இந்த தலம் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஆரூருக்கு அருகில் அமைந்துள்ளது. சுற்றுலா பயணிகளும் பெருமளவில் இங்கு வந்து செல்கின்றனர்.
இந்த தீர்த்தமலையில் இருந்து ஐந்து நீரூற்றுகள் உற்பத்தியாகின்றன. இந்த நீரூற்றுகளை கொண்டே இதற்கு தீர்த்த மலை என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த மலையில் இறைவன் சிவபெருமான் எழுந்தருளி இருக்கிறார். இங்கிருக்கும் சிவபெருமான் தீர்த்தகிரீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். இங்கு ஓடி வரும் புனித நீரூற்றுகளில் குளித்தால் நமது பாவங்கள் எல்லாம் அழிந்துவிடும் என்று இந்த பகுதியில் இருக்கும் மக்கள் நம்புகின்றனர்.
ஸ்தலவரலாறு:
ராவணனை சம்ஹாரம் செய்து விட்டு அயோத்தி நோக்கி போகும் போது இங்கு சிவபூஜை செய்ய விரும்பினார். பூஜைக்கு காசியிலிருந்து தீர்த்தமும் பூவும் எடுத்து வர அனுமனால் தாமதமாகி விட்டது. ஆஞ்சநேயர் தீர்த்தம் எடுத்து வர தாமதமாகி விட்டதால் ராமர் தனது பாணத்தை எடுத்து மலையில் விட்டார். அவர் பாணம் விட்ட பாறையிலிருந்து தீர்த்தம் வந்தது.
அதை வைத்து சிவபூஜை நடத்தினார். இதனால் இதற்கு ராமர் தீர்த்தம் என்று பெயர் வந்தது. மேலும் ஆஞ்சநேயர் தான் எடுத்து வந்த தீர்த்தத்தை வீசி எறிய அது 12 கி.மீ. தூரத்தில் தென்பெண்ணையாற்றங் கரையில் விழுந்து அனுமந்த தீர்த்தம் என்று பெயர் பெற்றது. அனுமந்த தீர்த்தத்தில் குளித்து விட்டு இங்கு வந்து ராம தீர்த்தத்தில் குளித்தால் பாவங்கள் விலகும்.
ராமபிரான் சிவபெருமானை இரண்டிடங்களில் பிரதிஷ்டை செய்து சிவபூஜை செய்துள்ளார். அதில் ஒன்று பெருஞ்சிறப்பு பெற்ற ராமேசுவரம். மற்றொன்று தீர்த்தங்கள் நிறைந்த தீர்த்த மலை. இத்தலத்தின் மிக விசேஷமானவை தீர்த்தங்கள் ஆகும். அற்புத மூலிகைகளின் சத்து கலந்து விளங்குவதால் பக்தர்களின் உடற்பிணி உளப்பிணி யாவும் தீர்ந்து புத்துணர்வும் புதுவாழ்வும் பெறுகின்றனர்.
1000 வருடங்களுக்கும் மேலாக பழமை வாய்ந்த கோயில் இது. 1041 ல் ராஜ ராஜ குலோத்துங்க சோழனால் திருப்பணி நடைபெற்ற பழமையான கோயில் இது. அருணகிரி நாதர் இத்தலம் குறித்து பாடியுள்ளார். மலை மீது அமைந்த அற்புதமான சிவ தலம் இது. இங்குள்ள சிவன் சுயம்புமூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இவர் தீர்த்தகிரீஸ்வரர் என அழைக்கப்படுகிறார்.
இங்குள்ள ஈசனை வழிபடுவோர்க்கு மனநிம்மதி கிடைக்கும். இது உடல் சம்பந்தப்பட்ட எந்த நோயானாலும் தீருகிறது. மேலும் குழந்தை வரம் மற்றும் குடும்ப ஐஸ்வர்யம் ஆகியவற்றுக்காகவும் இத்தலத்தில் பக்தர்கள் பெரும்பாலும் பிரார்த்தனை செய்கிறார்கள்.
கடன் தொல்லை தீரவும் இத்தலத்தில் வேண்டுகின்றனர். இங்கு வழிபட்டால் பக்தர்களின் எல்லா குறைகளும் நிவர்த்தியாகும். செல்லும் வழி:தருமபுரி நகரிலிருந்து அரூர் சென்று அங்கிருந்து தீர்த்தமலை சென்றடையலாம்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum