Top posting users this month
No user |
Similar topics
முக்திநாத் கோவில்
Page 1 of 1
முக்திநாத் கோவில்
கடும் பனி, மழை, குளிர் என்று கஷ்டமான பிரயாணத்தில்தான் இந்த நேபாள நாட்டின் கோவிலை அடைய முடியும். 108 திவ்யதேசங்களில் இந்த கோவில் மட்டுமே நம் இந்தியாவை தாண்டி நேபாள நாட்டில் உள்ளது. 3710 மீட்டர் மேலே ஹெலிகாப்டரில் சென்று இக்கோவிலை அடைய முடியும். இப்போது ஜீப் வசதி செய்திருப்பதாக சொல்லப்படுகிறது.
வயதானவர்கள், இளைப்பு, ஆஸ்த்மா நோய்கள் உள்ளோர் தங்கள் உடல் நிலை தகுதிக்கேற்ப மருத்துவ ஆலோசனைப்படி சென்று வரலாம். இயற்கையின் அதிகமான அழகை ரசித்துக்கொண்டே இக்கோவிலுக்கு செல்லலாம். ஒவ்வொரு கோவில்களிலும் மூலஸ்தானத்தில் உள்ள சுவாமிகளுக்கு தான் வழிபாடு, திருவிழாக்கள் நடத்தப்படுவதை அறிந்திருப்போம்.
மூலஸ்தானத்தில் சாளக்கிராமம் என்ற ஒரு தெய்வீக கல்லுக்கு பூஜை நடப்பதை யாரும் அறிந்து இருக்க மாட்டார்கள். இந்த சாளக் கிராமம் முக்திநாத் கோவில் அருகில் கண்டேகி நதியில் மட்டுமே உருவாகுகிறது. இதில் தான் சுவாமி குடியிருப்பதாக ஐதீகம். பெருமாள் கோவில்களில் இதை சாளக் கிராமம் என்றும், சிவன் கோவில்களில் பானலிங்கம் என்றும், விநாயகர் கோவிலில் சோனபத்ரம் என்றும் அழைக்கிறார்கள்.
இந்த சாளக் கிராமத்தில் பெருமாளின் அத்தனை அவதாரங்களும் அடங்கி உள்ளதாம். கோவிலுக்கு ஜீப்பில் செல்லும் பாதை மிகவும் மோசமாக இருக்கும். கடும் கஷ்டத்துடனே இங்கு பயணிக்கவேண்டும். நடப்பது சற்று பாதுகாப்பாக தெரிந்தாலும் நீண்ட தூரம் நம்மால் நடக்க முடியாது. இரண்டு மணி நேரம் இங்கு ஜீப்பில் பயணிக்க வேண்டும்.
கோவிலை அடைந்தாலும் அங்கிருக்கும் படியேறி கோவிலுக்கு செல்ல சிறிது நேரம் ஆகும். முக்திநாத் கோயில் மிகவும் சிறியது. திருமால் தலம். கோயிலின் முன்னர் இரண்டு சிறிய திருக்குளங்கள் தொட்டிகள் போல உள்ளன. மிகக் குளிர்ந்த நீர். மன உறுதியும் உடல் உறுதியும் இருந்தாலே இதில் நீராடலாம். ஒரே ஒரு பிரகாரம் மட்டுமே அமைந்துள்ளது.
பிரகாரம் சிறியது. கருவறையில் மூலவர் உள்ளார். அருகில் உள்ள மூர்த்தங்களை ஸ்ரீமாதா, சரஸ்வதி என்று அங்குள்ளவர்கள் கூறுகிறார்கள். அத்திருமேனிகள் ஸ்ரீதேவி, பூதேவி என்று தலவரலாற்றுக் குறிப்பில் காணப்படுகிறது. இங்கு மூலஸ்தானத்தின் உள்ளேயே சென்று வழிபடலாம். அதிக சன்னிதிகள் இக்கோவிலில் கிடையாது, அர்த்த மண்டபம் போன்ற கட்டுமானங்கள் இல்லை.
இராமனுஜருக்கும், கருடாழ்வாருககும் திருமேனிகள் உள்ளன. சிறிய யாக சாலை உள்ளது. பிரகாரத்தின் வெளியே தீர்த்தங்கள் கோமுகிவாய் வழியாக விழுகிறது. 108 திவ்ய தேசங்களில் இது 70 ஆவது ஆகும். இத்திருக்கோயில் பெரியாழ்வார், திருமங்கையாழ்வார் ஆகியோரால் மங்களாசாசனம் செய்யப்பட்டது. பெரியாழ்வார் இரண்டு பாடல்கள் பாடியுள்ளார். ஸ்ரீ இராமானுஜரும் இத்தலத்தைப் போற்றியுள்ளார். அவர் இங்கு சில காலம் தங்கியிருந்தார் என்று கூறுகின்றனர்.
கோயில் விவரம்:
சக்கர தீர்த்தம்,
கண்டகி தீர்த்தம்
கனக விமானம் ஸ்ரீ மூர்த்தி – அமர்ந்த திருக்கோலம்
ஸ்ரீதேவி, ஸ்ரீபூதேவி-நின்ற திருக்கோலம்
இக்கோயிலுக்கு அருகில் சற்றுக் கீழாக ஜ்வாலாமுகி கோயில் உள்ளது. சாளக்கிரமங்களில் வஜ்ரகிரீடம் என்ற ஒரு வகைப் பூச்சிகள் பல சுவடுகளை ஏற்படுத்துகின்றனவாம். இந்த சாளக்கிரமங்களை ஸ்ரீமந் நாராயணனாக வழிபடுகின்றனர். வீட்டில் இதை வைத்துப் பூசை செய்வது நல்லது. ஒரு சங்கில் துளசி இலைகளை இட்டு அதனுள் நீர் ஊற்றி அந்த சங்கினால் சாளக்கிரமத்திற்கு அபிஷேகம் செய்வது நல்ல பலன்களைத் தரும் என்பார்கள்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum