Top posting users this month
No user |
Similar topics
கைவிலாஞ்சேரி கோவில்
Page 1 of 1
கைவிலாஞ்சேரி கோவில்
ஸ்தல வரலாறு:
தமிழகத்தில் உள்ள பாடல் பெற்ற சிவ தலங்கள் 276. இதில் 190 தலங்கள் சோழமண்டலத்தில் அமைந்துள்ளன. காவேரி தென் கரைத்தலங்கள் வரிசையில் 19-வது தலமாக திகழ்வது பாபநாசம் அருகே உள்ள திருப்பாலைத் துறை திருத்தலம் ஆகும். இக்கோவில் கிழக்கு நோக்கி அமைந்து உள்ளது.
இதனை வணங்குபவர்கள் பொன்னும் மெய்ப்பொருளும் பெற்றுப் போகமும் திருவும் புணர்விக்க பெறுவர் என்பது வேதாகமங்களின் முடிவாகும். பண்டைக்காலத்தில் தாரு வனத்து முனிவர்கள் விநாயகரை வணங்காமல் பல வேள்விகள் செய்து முக்தி அடைய முயற்சி செய்தனர். அவர்களை நல்வழிபடுத்த சிவபெருமான் பிச்சாடனராகவும், திருமால் மோகினியாகவும் வந்து அவர்களை மனங்கலங்க செய்தனர்.
இதனால் அந்த முனிவர்கள் வெகுண்டு கெடு வேள்வி புரிந்து ஒரு கொடும்புலியை உண்டாக்கி அதை சிவபெருமான் மீது ஏவினர். அதனை இவ்வூரில் கொன்று அதன்தோலை உரித்து அவர் ஆடையாக உடுத்துக்கொண்டார்.
முதல் ஊழியாகிய கிருதயுகத்தில் சிவபெருமானின் பற்றற்ற நிலையைக்கலைத்து பார்வதியை மணம் புரிந்து கொள்ளும்படி செய்ய மன்மதனை அழைத்து அவர் மீது மலர்கணைகளை விட்டு அவரது தவத்தை தேவர்கள் கலைத்தனர். இதனால் சினம்கொண்ட சிவன் நெற்றி கண்ணால் நோக்கி மன்மதனை எரித்து சாம்பலாக்கினார்.
பின்னர் ரதிதேவியின் வேண்டுகோளுக்கு இரங்கி மன்மதனை உயிர்பெற செய்து அவன் ரதியின் கண்களுக்கு மட்டும் தெரியும் வரம் அருளினார். பின்னர் சிவபெருமான் பார்வதியை திருமணம் செய்து கொண்டார். திருப்பாலைத்துறை திருக்கோவில் 370 அடி நீளமும் 260 அடி அகலமும் உடையதாகும்.
முன்புறம் அமைந்துள்ள 4 நிலைக்கோபுரம் 70 அடி உயரமும் அடுத்துள்ள மூன்று நிலைக்கோபுரம் 45 அடி உயரமும் உள்ளன. ராஜகோபுரத்தை அடுத்து விநாயகர், நந்தி சன்னதிகள் அமைந்துள்ளன. இரண்டாவதாக அமையப்பெற்ற மூன்று நிலைக்கோபுரத்தை கடந்து சென்றால் கருவறை மகாமண் டபத்தின் வலபுறம் விநாயகர் சந்நிதியும் இடதுபுறம் திருப்பாலைத்துறை தலப்பதிக கல்வெட்டும் உள்ளன.
கோவிலின் முன்பு நெற்க ளஞ்சியம் உள்ளது. இது தஞ்சை நாயக்க மன்னர்களின் வழி வந்த ரகுநாத நாயக்கரால் (கி.பி. 1600-1634) கட்டப்பட்டது. 36 அடி உயரம் கொண்ட இந்த நெற்களஞ்சியத்தின் அடிப்பகுதி வட்ட வடிவிலும், மேற் பகுதி கூம்பு வடிவிலும் அமைந்துள்ளது.மேற் பகுதி, நடுப்பகுதி, கீழ் பகுதியில் 3 வாயில்களை கொண்டுள்ளது.
இதில் சுமார் 3 ஆயிரம் கலம் தானியத்தை சேமிக்கலாம். வரலாற்று முக்கியம் வாய்ந்த இதனை அறிய புரதான சின்னமாக அரசு 1996-ம் ஆண்டே அறிவித்து பாதுகாத்து வருகிறது. பாலை வன நாதசுவாமி கோவிலில் உள்ள வரலாற்று சிறப்பு மிக்க நெற்களஞ்சியம் 1966-ம் வருடத்தில் புரதான சின்னங்கள் மற்றும் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் மற்றும் எச்சங்கள் என்ற சட்டத்தின் கீழ் (1966 எண். 25) கொண்டு வரப்பட்டுள்ளது.
இதை யாராவது சேதப்படுத்தினாலோ அல்லது அகற்றினாலோ அல்லது மாற்றம் செய்து அழிவுக்குட் படுத்தினாலோ அல்லது தகாத முறையில் உபயோகப்படுத்தினாலோ சட்டப்படி தண்டிக்கப் படுவதுடன் 3 மாதங்கள் வரை சிறையோ அல்லது ரூ. 5 ஆயிரம் வரை பாதுகாப்பு சட்டபிரிவு 29-ன் படி அபராதம் விதிக்கப்படும் என்று தொல்லியல் துறை மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் ஆச்சரியம் என்னவென்றால் சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பே 5 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என்று அறிவித்ததிலிருந்து எவ்வளவு முக்கிய பொக்கிஷமாக இந்த நெற் களஞ்சியத்தை பாதுகாத்து வந்திருக்கிறார்கள் என்பதை அறிய முடியும். விவசாயம் செழித்து இருந்த அந்த காலத்தில் இந்த அளவுக்கு நெற்களஞ்சியத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு உள்ளது.
ஆசிய கண்டத்திலே இந்த கோவிலில் மட்டுமே நெற்களஞ்சியம் இருப்பது குறிப்பிடத் தக்கது. பொங்கல் பண்டிகையின் போது இதில் சேமித்து வைக்கப்பட்டுள்ள நெல்லை எடுத்து பொங்கல் வைத்து கரும்பு, மற்றும் தானியங்களை படைத்து வழி பட்டு பக்தர்களுக்கு வழங்கி வந்தனர். தற்போது இந்த வழக்கம் படிப்படியாக குறைந்து விட்டது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum