Top posting users this month
No user |
வைராக்கிய விரதம்
Page 1 of 1
வைராக்கிய விரதம்
மகாமகம் என்பது 12 வருடத்துக்கு ஒருமுறை வருவது. அந்த நாளில் கும்பகோணத்தில் உள்ள மகாமக குளத்தில் கூட்டம் பல லட்சக்கணக்கில் இருக்கும். நம் நாட்டில் பல பகுதிகளில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்து கூட அதிகமாக கூட்டம் வரும். 12 வருடத்துக்கு ஒரு முறை நடக்கும் பெரிய விழா அல்லவா அதனால்தான் இவ்வளவு கூட்டம் வருகிறது.
அன்று மகாமக குளத்தில் நீராடினால் பல தலைமுறை பாவங்கள் தோஷங்கள் தீரும் என்பது நம்பிக்கை. அகத்திய மகரிஷி இந்த வைராக்கிய விரதம் என்னும் மகாமகத்தை பற்றி கீழ்க்கண்டவாறு உரைப்பதாக, சத்குரு வேங்கடராம சுவாமிகள் என்பவர் கூறுகிறார். அதாவது வரும் 2016ம் ஆண்டு மகாமகம் வ.ருகிறது அதற்கு 3 வருடம் முன்பே சரியாக 36 மாதங்கள் மாதம் ஒருமுறை வரும் மகம் நட்சத்திரத்தன்று விரதம் இருந்து மகாமகம் வரும் வரை நீராடி வரவேண்டும்.
இதை வைராக்கிய விரதம் என அகத்தியர் அழைக்கிறார். இப்படியாக தொடர்ந்து விரதம் இருந்து வந்தால் கடுமையான இந்த கலியுகத்தில் கூட கடவுளின் பரிபூரண அருள் உங்களுக்கு கிட்டுமாம். இவ்வாறு விரதம் இருந்து வந்த பீஷ்மர், விதுரர், அக்ரூரர் போன்றோர் வாழ்நாளில் கிருஷ்ணபரமாத்மாவின் விஸ்வரூப தரிசனத்தை காணக்கிடைக்கும் பாக்கியம் பெற்றதாக அகத்தியர் கூறுகிறார்.
ஆழ்ந்த நம்பிக்கை கொண்டு இதை செய்து வந்தால் இந்த கலியுகத்திலும் கடவுள் தரிசனம் ஏதாவது ஒரு வகையில் கிடைப்பது சாத்தியமே எனக்கூறுகிறார். இந்த விரதத்திற்கு வைராக்கிய விரதம் என்று தற்போது அழைக்கப்படுகிறது. இவ்விரதத்தை தவறவிட்டவர்கள் இனி அடுத்த மகாமகத்திற்க்குத்தான் இருக்க முடியும்.
இருந்தாலும் மகாமகம் வர இருக்கும் இன்னும் ஒரு வருட காலத்தில் மாதம் முழுவதும் வரும் மக நட்சத்திரத்தில் விரதம் இருந்து மக குளத்தில் நீராடினாலும் தவறு இல்லை.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum