Top posting users this month
No user |
Similar topics
வலி. வடக்கில் மக்களின் வீடுகளை இராணுவத்தினர் இடித்து தரைமட்டமாக்கியுள்ளனர்!
Page 1 of 1

வலி.வடக்கு இராணுவ உயர்பாதுகாப்பு வலையத்திற்குள் இருந்து மீள்குடியேற்றத்திற்காக விடுவிக்கப்பட்ட பகுதிகளில் இருந்த மக்களுடைய வீடுகளை இராணுவத்தினர் கண்மூடித்தனமாக இடித்து தரைமட்டமாக்கியுள்ளனர்.
வறுத்தலைவிளான் மற்றும் பளை வீமன்காமப் பகுதிகளில் இருந்த வீடுகளே அண்மையில் இவ்வாறு இராணுவத்தினால் இடித்து தரைமட்டமாக்கப்பட்டுள்ளது.
வலி.வடக்கு இராணுவத்தினர் உயர்பாதுகாப்பு வலையத்திற்குள் இருந்து இரண்டாம் கட்டமாக 8 கிராம சேவையாளர் பிரிவுகள் விடுவிக்கப்பட்டிருந்தது.
இப்பகுதிகளில் வறுத்தலைவிளான் மற்றும் பளை வீமன்காமம் பகுதி கிராமசேவையாளர் பிரிவுகளும் பகுதியளவில் மக்களுடைய மீள்குடியேற்றத்திற்காக விடுவிக்கப்பட்டிருந்தது.
விடுவிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள காணிகளை இனங்காண்பதற்கு மக்கள் நேற்று அங்கு சென்றிருந்தனர்.
இதன் போது தமது வீடுகள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டுள்ளமையினைக் கண்டு கண்ணீவடித்துக் கொண்டதுடன், இராணுவத்தினரையும் மனமாற தீட்டித்தீர்திருந்தனர்.
தாம் அங்கிருந்து இடம்பெயர்ந்து செல்லும் போது கட்டி மடீக்கப்படடிருந்த வீடுகள் கடந்த சில நாட்களுக்கு முன்னர்தான் இடிக்கப்பட்டிருக்க வேண்டும்.
ஏன் என்றால் புதிதாக இடிக்கப்பட்டமைக்கும், வீடுகள் இடிக்கப்பட்டு பல ஆண்டு காலம் சென்றால் எவ்வாறு இருக்கும் என்பதை விளங்கிக் கொள்ளாத அளவிற்கு நாங்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை.
நாங்கள் எங்களுடைய வீடுகளை கண்டுபிடித்து குடியேறிக் கொள்ளக் கூடாது என்ற நோக்கத்துடனே இவ்வாறான கண்மூடித்தனமாக செயற்பாடுகளை இராணுவத்தினர் மேற்கொண்டுள்ளனர்.
இடிக்கப்பட்ட எங்களுடைய வீடுகளுக்குள் இராணுவத்தினர் முகாங்கள் அமைத்திருந்துள்ளனர். அவர்கள் அடுக்கி வைத்திருந்த மண் மூடைகள் அப்படியே இருக்க வீடுகளில் சுவர்கள் மட்டும் எவ்வாறு உடைந்திருக்கும்.
இராணுவத்தினர் வேனுமென்றே எங்களுடைய வீடுகளை உடைத்துள்ளனர் என்றும் உடைக்கப்பட்ட வீட்டின் உரிமையாளர்கள் மனமுருகியுள்ளனர்.
2ம் இணைப்பு
வலி.வடக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட பிரதேசங்களில் எஞ்சியிருந்த வீடுகளின் சுவர்களில் இராணுவத்தினர் ஆபாச படங்களை வரைந்தும், தகாத வார்த்தைப் பிரயோகங்களை எழுதியும் சென்றுள்ளனர்.
இராணுவத்தினரின் இவ்வனாகரிக செயற்பாடுகளால் காணிகளை இனங்காணச் சென்ற மக்கள் முகம்சுழித்துக் கொண்டனர்.
புதிய அரசாங்கத்தின் ஏற்பாட்டில் இரண்டாம் கட்டமாக 590 ஏக்கர் நேற்று விடுவிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி விடுவிப்பதாக அறிவிக்கப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்கள் தமது காணிகளை இனங்கண்டு மீள்குடியேற்த்திற்கான பதிவுகளை மேற்கொள்ள அங்கு சென்றிருந்தனர்.
27 வருடங்களின் பின்னர் தமது சொந்த நிலங்களை பார்ப்பதற்கு அனுமதி கிடைத்ததை அடுத்து பெண்கள், சிறுவர்கள் என ஏராளமானவர்கள் காணிகளை பார்வையிடுவதற்கு அங்கு குழுமியிருந்தனர்.
ஆனாலும் அங்கு பெரும்காலன வீடுகள் உடைக்கப்பட்டிருந்தது. இருந்த போதும் ஒரு சில வீடுகளின் சுவர்கள் மட்டும் எஞ்சிக்காணப்பட்டது.
இவ்வாறு எஞ்சிக்காணப்பட்ட பளை வீமன்காமம் வடக்குப் பகுதியில் உள்ள ஒரு வைத்தியருடைய வீட்டில் இதுவரை காலமும் நிலைகொண்டிருந்த இராணுவத்தினர் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் காதல் வசனங்களையும், தகாத வார்த்தைகளையும் எழுதியிருந்தனர்.
மேலும் நிர்வானமாக பெண்கள் நிற்பது போன்று சுவர்களில் வரைந்திருந்தனர். இதுமட்டுமல்லாமல் வெற்று சிகரெட் பெட்டிகள் மற்றும் மதுப் போத்தல்களையும் ஆங்காங்கே வீசிவிடப்பட்டிருந்தது.
காணிகளைப் பார்க்கச் சென்ற மக்களை இராணுவத்தினரின் இவ்வாறான சமூகத்திற்கு ஒவ்வாத செயற்பாடுகள் முகம் சுழிக்க வைத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
3ம் இணைப்பு
வலி.வடக்கு மற்றும் வலி.கிழக்குப் பகுதியில் இராணுவத்தினரின் வசம் இருந்து மீள்குடியேற்றத்திற்கென விடுவிக்கப்பட்ட 1043 ஏக்கரில் 20 வீதமான காணிகளே மக்களுடைய குடியேற்றக் காணிகள் என்று தெரிவித்துள்ள வலி.வடக்குப் பிரதேச சபையின் தலைவர் எஸ்.சுகிர்தன் மக்கள் குடியிருப்புகளை குறிவைத்தே இராணுவத்தினர் முகாங்களை அமைத்துள்ளனர் என்றும் குற்றம் சுமத்தியுள்ளார்.
வலி.வடக்கு மற்றும் வலி.கிழக்குப் பகுதிகளில் இராணுவத்தினர் வசமிருந்த 613 ஏக்கர் நேற்று இரண்டாம் கட்டமாக மக்களுடைய மீள்குடியேற்றத்திற்காக விடுவிக்கப்பட்டிருந்தது.
ஆனாலும் அங்கு சென்ற மக்கள் தமது காணிகள் விடுவிக்கப்படவில்லை என்று குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தனர். இவ்விடையம் தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இவ்வியைடம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்:-
புதிய அரசாங்கம் இராணுவ உயர்பாதுகாப்பு வலையத்திற்குள் இருந்து 1000 ஏக்கர் நிலப்பரப்பினை மக்களுடைய மீள்குடியேற்றத்திற்காக விடுவிப்பதாக தெரிவித்திருந்தது.
இதன்படி கடந்த முதற்கட்டமாக வளலாய், வசாவிளான், பலாலி தெற்கில் 430 ஏக்கர் நிலப்பரப்பு விடுவிக்கப்பட்டிருந்தது. இரண்டாம் கட்டமாக 8 கிராம சேவையாளர் பிரிவுகளை உள்ளடக்கிய 613 ஏக்கர் நிலப்பரப்பும் விடுவிக்கப்பட்டிருந்தது.
ஆனாலும் இவ்வாறு விடுவிக்கப்பட்ட பகுதிகளில் பெரும்பாலானவை விவசாய நிலங்களே. மக்களுடைய குடிமனைகள் என்று பார்க்கும் போது விடுவிக்கப்பட்ட பகுதிகளின் 20 வீதமானவையே குடியிருப்புக் காணிகள் என்று கூறலாம்.
மக்கள் குடியிருப்புக் காணிளை குறிவைத்தே இராணுவத்தினர் முகாங்களை அமைத்துள்ளனர். இதனால் அவ்விடங்களை விடுவிக்கவும் மறுப்புத் தெரிவித்து வருகின்றனர்.
இராணுவம் முகாங்கள் அமைத்துள்ள காணிகளை விடுவித்தால் யாழ்ப்பாணத்தில் உள்ள சில நல்புரி நிலையங்களை மூடிவிடலாம்.
1000 மேற்பட்ட பகுதிகள் இராணுவத்தினரிடம் இருந்து விடுவிக்கப்பட்டு மக்களிடம் கையளிக்கப்பட்டிருந்த போதும் யாழ்ப்பாணத்தில் உள்ள நல்புரி நிலையங்களில் தங்கியுள்ள மக்களுடை வாழ்க்கையில் எந்த மாற்றங்களும் நிகழவில்லை. அவர்கள் இன்றும் நிலங்களை பறிகொடுத்தவர்களாகவே வாழ்ந்து வருகின்றார்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
4ம் இணைப்பு
எங்களுடைய சொந்த நிலங்களிலிருந்து இடம்பெயர்ந்து சென்று 27 வருடங்களாக நாங்கள் வாடகை வீடுகளிலும், உறவினர் மற்றும் நண்பர்கள் வீடுகளிலும், நலன்புரி முகாம்களிலும் மோசமான அவல வாழ்கை வாழ்ந்தவிட்டோம்.
இப்போது எங்கள் வீடுகள் இடிக்கப்பட்டு, காடுகள் வளர்ந்து சுடுகாடாய் காணப்படுகின்றது. சொந்த நிலங்களிலிருந்து இடம்பெயர்ந்து 27 வருடங்களில் வறுமையோடு வாழ்கிறோம்.
எவ்வாறு இடம்பெயர்ந்து செல்லும்போது வெறுங்கையோடு சென்றோமோ? அவ்வாறே வெறுங்கையோடு திரும்பி வந்திருக்கிறோம். எங்களுக்கு அரசாங்கம் வீட்டுத்திட்டம், வாழ்வாதார உதவிகள், இழப்பீடு போன்றவற்றை வழங்கவேண்டும்.
மேற்கண்டவாறு வலி,வடக்கில் மீள்குடியேறிய மக்கள் அரசாங்கத்திடமும், அரசியல்வாதிகளிடமும் கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.
நேற்றைய தினம் வலி,வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திற்குட்பட்டிருந்த பகுதிகளில் 9 கிராமசேவகர் பிரிவுகளில் மக்கள் மீள்குடியேற்றத்திற்காக தங்கள் நிலங்களை அடையாளப்படுத்துவதற்காக நிலங்களை பார்வையிட அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் தங்கள் நிலங்களை அடையாளப்படுத்துவதற்காக வந்திருந்த மக்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் கடந்த 27 வருடங்களுக்கு முன்னர் நாங்கள் சொந்த இடங்களை விட்டுச் சென்றிருந்தோம்.
இந்நிலையில் இன்றைய தினம் எங்கள், நிலங்களையும், வீடுகளையும் பார்வையிடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கின்றது.
நாங்கள் இடம்பெயர்ந்து சென்றபோது இருந்த நிலையில் எதுவுமே இல்லை. எங்களுடைய வீடுகள் முழுமையாக இடிக்கப்பட்டிருக்கின்றன. அவ்வாறு இடிக்கப்படாமலிருக்கும் ஒரு பகுதி வீடுகளில் கூரைகள் மற்றும் கதவுகள், நிலைகள், காணாமல்போயிருக்கின்றன.
மேலும் இருக்கும் வீடுகளில் சில படையினர் பயன்படுத்திய நிலையில் அவை அப்படியே இருக்கின்றன. ஆனால் பல வீடுகள் உடைந்தும், வீடுகளுக்குள் மரங்கள் வளர்ந்தும் காடுகளாக இருக்கின்றன. இந்நிலையில் எங்களை இங்கே மீள்குடியேற்றத்திற்காக அழைத்து வந்திருக்கின்றார்கள், ஆனால் இங்கே வீடுகள் இல்லை. காடுகள் வளர்ந்திருக்கின்றன.
இவற்றை துப்புரவு செய்வதற்கே எமக்கு நீண்டகாலம் எடுக்கும். 27 வருடங்கள் அகதிகளாக வாழ்ந்த எங்களிடம் எந்தவிதமான வசதிவாய்ப்புக்களும் இல்லை. நாங்கள் அகதி வாழ்க்கையில் எதனையுமே சேர்த்திருக்கவில்லை.
எனவே அரசாங்கம் எமக்கு வீட்டுத்திட்டம் மற்றும் வாழ்வாதாரம், இழப்பீடு ஆகியவற்றை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு எங்களுடைய அரசியல்வாதிகள் கூடியளவு கவனமெடுத்து செயற்பட வேண்டும் என மக்கள் ஊடகங்கள் ஊடாக கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» உயர்பாதுகாப்பு வலயத்தில் மக்களின் கிணறுகளை இராணுவத்தினர் மூடுகின்றனர்: விநாயகமூர்த்தி எம்.பி குற்றச்சாட்டு
» மக்களின் எதிர்பார்ப்பே எமது எதிர்பார்ப்பாகும்: பெ. இராஜதுரை - மக்களின் சக்திமிக்க அமைப்பாக த.மு.கூட்டணி: எஸ்.ஸ்ரீதரன்
» விசுவமடு கற்பழிப்பு வழக்கு! இராணுவத்தினர் 4 பேருக்கு சிறை: நீதிமன்றில் கதறியழுத உறவினர்கள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum