Top posting users this month
No user |
உயர்பாதுகாப்பு வலயத்தில் மக்களின் கிணறுகளை இராணுவத்தினர் மூடுகின்றனர்: விநாயகமூர்த்தி எம்.பி குற்றச்சாட்டு
Page 1 of 1

வலி.வடக்கு இராணுவ உயர்பாதுகாப்பு வலையத்திற்குள் உள்ள மக்களுடைய வீடுகளை உடைக்கும் இராணுவத்தினர் அங்குள்ள கிணறுகளையும் மூடிவருகின்றதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூரத்தி குற்றம் சுமத்தியுள்ளார்.
மக்களுடைய மீள்குடியேற்றத்தினை கேள்விக்குறியாக்கும் இராணுவத்தினருடைய இச்செயற்பாடுகள் உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இது சம்மந்தமாக வடமாகாண ஆளுநர், யாழ்.மாவட்டக் கட்டளைத் தளபதி ஆகியோருக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
வலி.வடகில் இன்னமும் விடுவிக்கப்படாமல் இராணுவத்தினருடைய கட்டுப்பாட்டின் கீழ் பெரும்பாலான நிலங்கள் உள்ளது.
இந்நிலங்களுக்கு உரித்தானவர்கள் இன்றுவரை எதுவித வசதிகளும் அற்ற நலன்புரி நிலையங்களில் கடந்த 25 வருடங்களாக வசித்து வருகின்றனர்.
தற்போது ஆட்சிக்கு வந்துள்ள புதிய அரசாங்கம் தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் வடக்கின் மீள்குடியேற்றம் பூரணப்படுத்தப்படும் என்று தெரிவித்திருந்தது. அதன்படி மக்களுடைய விவசாயக் காணிகளின் ஒரு சிறு பகுதி விடுவிக்கப்பட்டிருந்தது.
ஏனைய பகுதிகள் விடுவிப்பது சம்மந்தமாக இதுவரையில் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.
விடுவிக்கப்பட்ட பகுதிகளில் இருந்த மக்களுடைய வீடுகள் உடைக்கப்பட்டிருந்தால் மக்கள் சென்று குடியேறிக் கொள்ளவதில் சிரமங்களை எதிர் கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் இதுவரையில் விடுவிக்கப்படாமல் உள்ள பகுதிகளில் காணப்படும் மக்களுடைய வீடுகளையும் இராணுவத்தினர் உடைக்கின்றனர். அங்குள்ள கிணறுகளையும் மூடிவருகின்றனர் என்று உறுதிப்படுத்தப்பட்ட தகவல் கிடைத்துள்ளது.
வலி.வடக்கில் உள்ள மக்களுடைய மக்களுடைய வீடுகள் மிகவும் பெறுமதி வாய்தவை. அவ்வாறான வீடுகள் உடைக்கப்பட்டால் எந்தவிதமான அடிப்படை வசதிகள், தொழில்வாய்ப்புக்களும் அற்ற நிலையில் வாழ்வாதார ரீதியில் பெரும் பாதிப்புக்களை கடந்த 25 வருடமாக எதிர் கொண்டுவரும் மக்கள் மீண்டும் அமைத்துக் கொள்ளும் நிலையில் இல்லை. தற்போது ஒரு கிணறு அமைப்பதற்கு 50 ஆயிரம் ரூபாவிற்கு மேல் தேவையாக உள்ளது.
தாங்களுடை வீடுகள் இருக்கின்றது என்ற நம்பிக்கையிலேயே முகாமில் வாழுகின்ற அதிகமான மக்கள் இன்னும் உயிருடன் இருக்கின்றார்கள்.
இராணுவம் மேற்கொண்டுவரும் இச்செயற்பாட்டினை நிறுத்தி மக்களுடைய சொத்துக்களை பாதுகாக்குமாறு கோரி வடமாகாண ஆளுநர் மற்றும் யாழ்.மாவட்டக் கட்டளைத் தளபதி ஆகியோருக்கு கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum