Top posting users this month
No user |
Similar topics
கனமான கிரீடம் தலையில் இருக்கலாம். ஆனால், தலைக்குள் கனம் இருக்கக்கூடாது
Page 1 of 1

* நல்ல ஒழுக்கமும், அறிவும் கொண்டவர்கள் காணும் காட்சிகள் அனைத்தும் நல்ல காட்சிகளாகவே திகழும்.
* உறுதியான மனம் உடையவனே துன்பத்தைப் பொறுத்துக் கொள்ளும் ஆற்றல் பெற்றவனாக இருப்பான்.
* பொருள் ஈட்டும் ஆர்வத்தில் மக்கள் பிறரை அடித்து நொறுக்கவும் தயங்காமல் இருக்கின்றனர். உலகம் இன்ப கேளிக்கைகளில் மூழ்கிக் கிடக்கிறது.
* அதர்ம வழியில் ஈட்டிய பொருள் அற்பமானது. அது தீயவழிகளில் மனிதனைத் தள்ளி விடும் அபாயம் கொண்டது.
* விரதம் இருப்பது மிகவும் புனிதமானது. அலட்சியம் காட்டாமல் அக்கறையுடன் விரதமிருக்க வேண்டும்.
* தீய செயல்களில் ஒருபோதும் ஈடுபட மாட்டேன் என்கிற மன உறுதி நம் ஒவ்வொருவருக்கும் அவசியமானது.
* இல்லறத்தில் இருந்து கொண்டு பிறருக்குச் செய்யும் சேவை பெரிதும் பாராட்டக் கூடியதாகும்.
* மனம், மொழி மெய்களால் வருந்தி செய்த குற்றத்தைப் போக்க முயல்பவர்களே உயர்ந்தவர்கள்.
* துன்பத்தைப் பொறுக்கும் சக்தி படைத்தவர்களே துறவிகள் என மதிக்கப்பட வேண்டியவர்கள்.
* அதிகாரம், அந்தஸ்து, பணம், பதவி இவற்றால் செய்யும் தீங்கு பல மடங்கு பாவமூட்டையைச் சுமக்க வழிவகுக்கும்.
* தியானத்தை முறையாகச் செய்து வந்தால் மனதில் ஏற்படும் அற்ப எண்ணங்களை அடியோடு ஒழிக்க முடியும்.
* பிறருக்கு உதவி செய்யும் போது தன்னடக்கமும், எளிய தன்மையும் இருக்க வேண்டியது அவசியம். கனமான கிரீடம் தலையில் இருக்கலாம். ஆனால், தலைக்குள் சிறிதும் ஆணவம் இருக்கக் கூடாது.
* பிறப்பால் உயர்வு தாழ்வு கருதுவது கூடாது. பண்பின் அடிப்படையிலேயே மனிதனுக்கு உயர்வும், தாழ்வும் உண்டாகிறது.
* பசித்தவருக்கு உணவிடுவதே தலைசிறந்த அறம். பசி என வந்தவருக்கு புசி என வழங்குவதே நல்ல பண்பின் அடையாளம்.
* இளமையும், அழகும் குறிப்பிட்ட காலத்தோடு காணாமல் போகும். அழகை எண்ணி ஆணவம் கொள்வது அறியாமையின் வெளிப்பாடே.
* தேனீக்கள் சேர்த்த தேன் கொள்ளையடிக்கப்படுவது போல, கருமிகள் சேர்த்த பணமும் கயவர்களால் களவாடப்படும்.
* ஏழ்மையிலும், துன்பத்திலும் வாடுபவர்களுக்கு இயன்ற உதவிகளைச் செய்வதே மேலான தர்மம்.
* நல்லவர்கள் செய்த உதவி சிறியதாக இருந்தாலும், அதனால் உண்டாகும் நன்மை வளர்ந்து கொண்டே செல்லும்.
* மனிதனின் அறிவை எடை போடுவதே ஒருவன் படிக்கும் நல்ல நூல்களால் தான். நல்ல நூல்களைப் படிப்பதால் நல்ல பண்பும், அடக்கமும் உண்டாகிறது.
* எப்போதும் நேர்மையைப் பின்பற்றுங்கள். பொய் பேசவோ, பொய் பேச தூண்டவோ செய்யாதீர்கள். நேர்மை காப்பவனுக்கு தோல்வியே உண்டாகாது.
* அன்பு, ஈகை, நற்பண்பு, இரக்கம் உள்ள மனிதர்கள் மேலானவர்கள். அவர்கள் இருக்கும் இடத்தில் நன்மை அனைத்தும் உண்டாகும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» யாரெல்லாம் உண்ணா விரதம் இருக்கலாம்?
» அதிசயம் ஆனால் உண்மை
» உதயங்க வீரதுங்க ரஸ்யாவில் இருக்கலாம் என்று சந்தேகம்: இலங்கை அரசாங்கம்
» அதிசயம் ஆனால் உண்மை
» உதயங்க வீரதுங்க ரஸ்யாவில் இருக்கலாம் என்று சந்தேகம்: இலங்கை அரசாங்கம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum