Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


சனீஸ்வரர் கோயில்கள்

Go down

சனீஸ்வரர் கோயில்கள்               Empty சனீஸ்வரர் கோயில்கள்

Post by oviya Sat Apr 11, 2015 2:24 pm

* திருநள்ளாறு சனீஸ்வரர்: நிடதநாட்டு மன்னன் நளன் சேதி நாட்டு இளவரசி தமயந்தியை திருமணம் செய்தான். இப்பெண்ணை தேவர்கள் மணக்க விரும்பினர். ஆனால், நளனை அவள் திருமணம் செய்ததால் பொறாமை கொண்டு, சனீஸ்வரனை நாடினர். சனீஸ்வரன் நளனின் தூய்மையான மனநிலையை அவர்களுக்கு உணர்த்த, அவனை ஏழரை ஆண்டுகள் பிடித்து துன்பப்படுத்தினார். மனைவி, மக்களையும், உடுத்தும் துணியைக் கூட இழந்து அவஸ்தைப்பட்ட மன்னன் நளன் எதற்கும் கலங்கவில்லை. ஒரு கட்டத்தில் திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரரை நளன் வணங்கினான். அப்போது சனி அவனை விட்டு நீங்கியது. அவனது வேண்டுகோளின் படி இதே தலத்தில் கிழக்கு நோக்கி அமர்ந்து ஈஸ்வர பட்டத்துடன் "சனீஸ்வரன்' என்ற பெயர் தாங்கி அருள்பாலிக்கிறார். போன்: 04368 - 236 530.

* குச்சனூர் சனீஸ்வரர்: தினகரன் என்ற மன்னன் குழந்தை வரம் வேண்டி இறைவனிடம் வேண்டினான். அப்போது அசரீரி ஒன்று உன் வீட்டுக்கு ஒரு பிராமணச் சிறுவன் வருவான். அவன் வந்த பிறகு உனக்கு குழந்தை பிறக்கும் என்றது. அதுபடியே வந்த சிறுவனுக்கு சந்திரவதனன் என்று பெயரிட்டு வளர்த்தான். அரசிக்கும் குழந்தை பிறந்து சதாகன் என்ற பெயருடன் வளர்ந்தான். புத்திசாலியான வளர்ப்பு மகன் சந்திரவதனுக்கே முடி சூட்டப்பட்டது. இந்நிலையில் மன்னன் தினகரனுக்கு ஏழரைச்சனி பிடித்தது. இதனால் சந்திரவதனன் சுரபி நதிக்கரைக்கு சென்று, இரும்பால் சனியின் உருவத்தை படைத்து, வளர்ப்பு மகனான எனக்கு முடிசூட்டிய என் தந்தைக்கு துன்பம் தராதே. அத்துன்பத்தை எனக்கு கொடு என்று வேண்டினான். சனீஸ்வர பவகவான் அவனது நியாயத்தை உணர்ந்து ஏழரைநாழிகை மட்டும் அவனை பிடித்து பல கஷ்டங்களைக் கொடுத்தார். பின்பு அவன் முன் தோன்றி உன்னைப்போன்ற நல்லவர்களைப் பிடிக்க மாட்டேன் என்றும் இப்போது உன்னை பிடித்தற்கு காரணம் உன் முன் ஜென்ம வினை என்றும் கூறி மறைந்தார். பிறகு சந்திரவதனன் இவ்வூரில் குச்சுப்புல்லால் கூரை வேய்ந்து கோயில் எழுப்பினான். இதுவே குச்சனூர் என பெயர் வழங்க காரணமாயிற்று. தேனியிலிருந்து 30 கி.மீ., தூரத்தில் உள்ளது.

* ஸ்ரீவைகுண்டம் சனீஸ்வரர்: தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் கைலாசநாதர் கோயில் நவகைலாயங்களில் ஒன்றாகும். நவக்கிரகங்களில் இது சனி தலம். இங்கு சனீஸ்வரருக்கு தனிசந்நிதி இருக்கிறது. சனி தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் கைலாசநாதருக்கும், சனீஸ்வரருக்கும் விசேஷ பூஜை செய்கிறார்கள். சனி தசையால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் இங்கு பரிகாரம் செய்துகொண்டால் தடைபட்ட செயல்கள் நடக்கும். இழந்த சொத்துக்களை மீண்டும் பெறலாம் என்பது நம்பிக்கை. திருநள்ளாறு சனீஸ்வரன் கோயிலுக்கு இக்கோயில் ஈடானது இந்தத்தலம். திருநெல்வேலியில் இருந்து 30 கி.மீ.,

* பெருங்குளம் வேங்கடவாணர்: திருச்செந்தூர் அருகிலுள்ள பெருங்குளம் வேங்கடவாணர் கோயில் நவதிருப்பதிகளில் ஒன்றாகும். இப்பகுதியிலுள்ள ஒன்பது வைணவத் தலங்களும், நவக்கிரகங்களுடன் தொடர்புடையவை. இங்கு நவக்கிரக சந்நிதிகள் கிடையாது. எனினும், ஒன்பது திருப்பதிகளிலும் உள்ள பெருமாளையே கிரகதோஷம் போக்குபவராக வழிபடுகின்றனர். அவ்வகையில், பெருங்குளம் வேங்கடவாணர் கோயில், சனித்தலமாக உள்ளது.

* திருக்கொள்ளிக்காடு அக்னீஸ்வரர் : சனி பகவான் பாரபட்சம் பார்க்காதவர். நாம் செய்யும் நல்லது, கெட்டதற்கு தகுந்தபடி நற்பலனும், தண்டனையும் கொடுப்பவர். ஆனால் தேவர் முதல் மனிதர் வரை சனிபகவான் செய்யும் நன்மைகளை கண்டு சந்தோஷப்படாமல், அவர் செய்யும் தீய பலன்களைப்பற்றி மட்டுமே நினைத்து பயந்தனர். இதனால் அவருக்கு கெட்ட பெயரே மிஞ்சியது. மனம் வருந்திய சனி, வசிஷ்டரின் யோசனைப்படி அக்னி வனம் எனப்படும் இத்தலத்தில் வந்து கடும் தவம் செய்தார். இவரது தவத்தில் மகிழ்ந்த ஈசன், அக்னி உருவில் தரிசனம் தந்து, சனியை பொங்கு சனியாக மாற்றினார். இவரை வணங்குவோருக்கு கெடுபலன்கள் அறவே நீங்கி விடும் என்பர். இந்த சனீஸ்வரர் கலப்பை ஏந்தியிருப்பார். உழைப்பவர்களுக்கே தன்னருள் உண்டு என்பதை இதன்மூலம் உணர்த்துகிறார். நவக்கிரக மண்டலத்தில் சனியின் திசை மேற்கு. இத்தலமும் மேற்கு பார்த்து அமைந்துள்ளது. திருவாரூர்-திருத்துறைப்பூண்டி ரோட்டில் (கச்சனம் வழி) 28 கி.மீ., போன்: 04369 237 454.

* இலத்தூர், உறையூர் பொங்குசனி: திருநெல்வேலி மாவட்டம் தென்காசியில் இருந்து சாம்பவர் வடகரை செல்லும் ரோட்டில் 6 கி.மீ., தூரத்திலுள்ள இலத்தூர் மதுநாதகசுவாமி கோயில் மற்றும் திருச்சி உறையூர் வெக்காளியம்மன் கோயில்களில் பொங்கு சனிக்கு தனி சந்நிதி உள்ளது. பொதுவாக சனீஸ்வரர் சந்நிதியை சுற்றி வர முடியாத நிலையே பல கோயில்களில் இருக்கும். இந்தக் கோயில்களில் சனீஸ்வரரைச் வலம் வர வசதியுள்ளது. இலத்தூர் சனீஸ்வரர் அருள்வழங்கும் அபயஹஸ்த நிலையில் உள்ளார்.

* கல்பட்டு விஸ்வரூப சனீஸ்வரர்: விழுப்புரத்தில் இருந்து 21 அடி உயரத்தில் விஸ்வரூபமாக காட்சி தரும் சனீஸ்வரர், இடக்காலை தரையில் வைத்து, வலக்காலை பிரமாண்டமான காக வாகனத்தின் மீது ஊன்றி காட்சி தருகிறார். விழுப்புரம்- திருக்கோவிலூர் ரோட்டில் 15 கி.மீ., தூரத்தில் மாம்பழபட்டு கிராமம். இங்கிருந்து பிரியும் ரோட்டில் ஒரு கி.மீ., தூரத்தில் கோயில்
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum