Top posting users this month
No user |
Similar topics
தூணை தழுவுங்க! கல்யாணம் பண்ணுங்க!
Page 1 of 1
தூணை தழுவுங்க! கல்யாணம் பண்ணுங்க!
தூணைத் தழுவி பெருமாளை வழிபட்டால் திருமணத்தடை நீங்கும் என்ற தகவல் உங்களுக்கு தெரியுமா! இதுபற்றி தெரிய வாருங்கள் கும்பகோணம் அருகிலுள்ள ஆதனூர் ஆண்டளக்கும் ஐயன் கோயிலுக்கு!
திருமங்கையாழ்வார் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் திருப்பணி செய்தபோது, அவரால் பணியாளர்களுக்கு கூலி கொடுக்க முடியவில்லை. தனக்கு உதவும்படி பெருமாளிடம் வேண்டவே சுவாமி, கொள்ளிடம் ஆற்றங்கரைக்கு வரும்படி கூறினார். ஆழ்வாரும் அங்கு சென்றார். அங்கு தலைப்பாகை அணிந்த வணிகர் ஒருவர், நெல் அளக்கும் மரக்கால், ஏடு எழுத்தாணியுடன் வந்தார். திருமங்கையிடம், ""உங்களுக்கு உதவ ரங்கநாதன் என்னை அனுப்பி வைத்தான். என்னிடம் உள்ள மரக்கால் கேட்டதை தரக்கூடியது. இதில் மணலை அளந்து தருகிறேன். பணியாளர்களின் உழைப்பிற்கேற்ப மணல் ஊதியமாக மாறிவிடும்,'' என்றார். ஆழ்வாரும் ஒப்புக்கொண்டார். ஆனால், கூலி பெற்ற பணியாளர்கள் பலருக்கு மணல் அப்படியே இருந்தது. இதனால் கோபம்கொண்ட அவர்கள் வணிகரை அடிக்கப் பாய்ந்தனர். வணிகர் தப்பி ஓட, திருமங்கை பின் தொடர்ந்தார்.
ஓரிடத்தில் வணிகர் நின்றார். ""நீங்கள் யார்? எதற்காக எனக்கு உதவி செய்வதாக சொல்லி ஏமாற்றினீர்கள்?'' என்று அவரிடம் கேட்டார். வந்தவர் மகாவிஷ்ணுவாக ரூபம் காட்டினார். கூலி அளந்ததால் இவர் "ஆண்டளக்கும் ஐயன்' என்று பெயர் பெற்றார்.
திருமணத்துக்கு தூண் வழிபாடு: சுவாமி சந்நிதி முன் இரண்டு தூண்கள் உள்ளன. பெருமாள் கோயில்களில் முதலில் சுவாமியின் திருப்பாதத்தையும், பின் திருமுகத்தையும் வணங்க வேண்டும். இதனடிப்படையில் நீண்ட நாட்களாக திருமணத்தடை உள்ளவர்கள், திருமணத்திற்கு வரன் தேடுபவர்கள் ஒரு தூணை தழுவிக்கொண்டு சுவாமியின் திருப்பாதத்தையும், மற்றொரு தூணை தழுவி சுவாமியின் திருமுகத்தையும் தரிசிக்கிறார்கள். இதனால், விரைவில் திருமணம் நிச்சயமாகும் என நம்புகிறார்கள். இதற்கு, "மணத்தூண்' என்று பெயர்.
சிறப்பம்சம்: பிரணவ விமானத்தின் கீழ் மகாவிஷ்ணு, கையில் ஏடு, எழுத்தாணி வைத்து, மரக்காலை தலைக்கு வைத்து சயனித்திருக்கிறார். அருகில் ஸ்ரீதேவி, பூதேவி, பிரம்மா, பிருகு, திருமங்கைஆழ்வார் ஆகியோர் உள்ளனர். தாயார் பார்கவிக்கு தனிசந்நிதி இருக்கிறது. விஷ்ணுவை வேண்டி காமதேனு (ஆ) தவம் செய்து வழிபட்டதால் இத்தலம், "ஆதனூர்' எனப்பட்டது. வைகாசியில் பிரம்மோற்ஸவம் நடக்கிறது. கருத்து வேறுபாட்டால் பிரிந்த தம்பதிகளை சேர்த்து வைப்பவராக இங்கு சுவாமி அருளுகிறார். இதை மெய்ப்பிக்கும் விதமாக நடந்த சம்பவம் ஒன்றைக் கேளுங்கள். ஜெர்மனியில் வசித்த தியோடர் மில்லர், ஆண்டிபயோடின் தம்பதியர், தங்களுக்குள் கருத்துவேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்தனர். ஒருசமயம் இவ்விருவரும் ஒருவருக்கொருவர் தெரியாமலேயே கோயில் பற்றிய ஆராய்ச்சிக்காக இந்தியா வந்தனர். யதேச்சையாக இருவரும் ஒரே சமயத்தில் இங்கு சந்தித்துக் கொண்டனர். ஆண்டளக்கும் ஐயனை வணங்கி மீண்டும் ஒன்று சேர்ந்தனர்.
இருப்பிடம்: கும்பகோணத்திலிருந்து 8 கி.மீ.,
திறக்கும் நேரம்: காலை 7.00- 12.30, மாலை 4.00- 8.00.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» தீவிரவாதிகளே வந்து ‘யோகா’ பண்ணுங்க..: அழைப்பு விடுத்த மத்திய உள்துறை அமைச்சர்
» 60 ம் கல்யாணம்
» ஆட்டையாம்பட்டியில் பரபரப்பு.. மாணவர் கைது: வித்தியாசமான பேனரால் களைகட்டிய கல்யாணம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum