Top posting users this month
No user |
Similar topics
மகிந்த அரசை அழித்த சம்பிக்க மைத்திரி அரசையும் அழிக்க முயற்சிக்கின்றார்: டிரான் அலஸ்
Page 1 of 1

மின்வலு எரிசக்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க, மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தை அழித்தது போல், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அரசாங்கத்தையும் அழித்து வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் டிரான் அலஸ் குற்றம் சுமத்தியுள்ளார்.
வடக்கு மாகாண வீடமைப்புத் திட்டத்தில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படும் நிதி மோசடி குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் டிரான் அலஸிடம் நிதி மோசடி விசாரணைப் பிரிவு பொலிஸார் நேற்று சுமார் 2 மணிநேரம் விசாரணைகளை நடத்தினர்.
இந்த விசாரணைகளின் பின்னர், ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட டிரான் அலஸ், தனக்கு எதிரான குற்றச்சாட்டின் பின்னணியில் அமைச்சர் சம்பிக்க ரணவக்க இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
சம்பிக்க ரணவக்க உயரமாக வளர்ந்தாலும் அவருக்கு மூளையில்லை. அவரது செயற்பாடுகளை நான் நன்கு அறிவேன்.
மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தை அழித்தது போல், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அரசாங்கத்தை சம்பிக்க அழிக்க போகிறார் எனவும் டிரான் அலஸ் குறிப்பிட்டுள்ளார்.
டிரான் அலஸூக்கு எதிரான இந்த குற்றச்சாட்டு தொடர்பில் அவருக்கு சார்பாக பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில ஆஜராகியிருந்தார்.
சுனாமி அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடுகளை நிர்மாணித்து கொடுக்கும் திட்டத்தின் மூலம் டிரான் அலஸ் 645 மில்லியன் ரூபா பணத்தை மோசடி செய்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த வீடமைப்புத் திட்டத்திற்கான பணத்தை டிரான் அலஸூம் விடுதலைப்புலிகளின் உறுப்பினர் எனக் கூறப்படும் எமில் காந்தன் ஆகியோர் பெற்றுக்கொண்டுள்ளதாக விசாரணைகளின் போது தெரியவந்ததாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்திருந்தது.
கிழக்கு மாகாணத்தில் சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுகாக வீடுகளை நிர்மாணித்து கொடுப்பதற்கான அனுமதியை ராடா என்ற நிறுவனத்திற்கு 2006 ஆம் ஆண்டு ஜனாதிபதி செயலகம் வழங்கியிருந்தது. அந்த நிறுவனத்தின் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் டிரான் அலஸ் செயற்பட்டு வந்தார்.
ராடா நிறுவனத்திற்கு 645 மில்லியன் ரூபா பணம் வழங்கப்பட்ட போதிலும் அந்த நிறுவனம் வீடுகள் எதனையும் நிர்மாணித்து கொடுக்கவில்லை. இந்த பணத்தில் 125 மில்லியன் ரூபா 9 காசோலைகள் மூலம் மோசடி செய்யப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
இந்த நிதி மோசடி சுமத்தப்பட்டுள்ள டிரான் அலஸ் உட்பட ராடா நிறுவனத்தின் பணிப்பாளர் சபையை சேர்ந்த 5 பேருக்கு வெளிநாடு செல்ல கோட்டை நீதவான் நீதிமன்றம் தடைவிதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
எவ்வாறாயினும் தன் மீது சுமத்தப்பட்டுள்ள இந்த குற்றச்சாட்டை மறுப்பதாக டிரான் அலஸ் கூறியுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» புதிய அமைச்சர்களின் நியமனமானது மைத்திரி அரசை சீர்குலைக்கும் மகிந்த ராஜபக்சவின் திட்டம்
» 29 ஆம் திகதி வரை டிரான் அலஸ் கைது செய்யப்படமாட்டார்: சட்டமா அதிபர் உறுதி
» மகிந்தவின் பேய்கள் மைத்திரி அரசை வீழ்த்த முயற்சி: திலிப் வெதாரச்சி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum