Top posting users this month
No user |
டிரான் அலஸ் சிறையில் இருக்க வேண்டியவர்: நீதிமன்றில் வாதம்
Page 1 of 1

சிறையில் இருக்க வேண்டிய டிரான் அலஸ் வெளியில் இருப்பதாகவும் இதன் மூலம் விசாரணைகளில் வெளிப்படை தன்மையில்லை என்பது புலப்படுவதாகவும் ராடா நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் சாலிய விக்ரமசூரிய சார்பில் ஆஜரான சட்டத்தரணி இன்று நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஜனாதிபதி சட்டத்தரணி அனில் டி சில்வா நீதவான் பிரியந்த லியனகே முன்னிலையில் இதனை அவர் கூறியுள்ளார்.
எமில் காந்தனை, சாலிய விக்ரமசூரியவுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் டிரான் அலஸே அறிமுகம் செய்தார்.
விசாரணைகளில் வெளிப்படை தன்மை இல்லாததன் காரணமாகவே காவற்துறையினர் டிரான் அலஸை இதுவரை கைது செய்யவில்லை எனவும் சிறையில் இருக்க வேண்டியவர் வெளியில் சுதந்திரமாக நடமாடுவதாகவும் சட்டத்தரணி அனில் டி சில்வா கூறியுள்ளார்.
சுனாமி அனர்த்தம் காரணமாக அழிவடைந்த வீடுகளை நிர்மாணித்து கொடுப்பதற்காக ஆரம்பிக்கப்பட்ட ராடா நிறுவனத்தில் கோடிக்கணக்கில் மோசடி நடந்துள்ளதாகவும் அந்த பணம் விடுதலைப் புலிகள் அமைப்பை சேர்ந்த எமில் காந்தன் என்பவருக்கு வழங்கியதாக குற்றம் சுமத்தி காவற்துறை தலைமையகத்தின் விசேட விசாரணைப் பிரிவு வழக்கொன்றை தாக்கல் செய்துள்ளது.
இந்த வழக்கில் குற்றச்சாட்டப்பட்டுள்ளவர் சார்பில் சட்டத்தரணி அனில் டி சில்வா ஆஜராகி வாதிட்டார்.
காவற்துறை விசாரணைகளில் வெளிப்படை தன்மையில்லை. ராடா நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் டிரான் அலஸ் அவர்களே இந்த வழக்கின் பிரதான சந்தேக நபர். அவரை கைது செய்வதாக காவற்துறையினர் கூறிய போதிலும் இதுவரை அவர் கைது செய்யப்படவில்லை.
காவற்துறையினரின் விசாரணை பக்கசார்பானது என சட்டத்தரணி குற்றம் சுமத்தியுள்ளார். இந்த குற்றச்சாட்டுக்கு பதிலளித்துள்ள காவற்துறையினர், நாடாளுமன்ற உறுப்பினர் டிரான் அலஸ், அடிப்படை உரிமைமீறல் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளதால், அந்த மனுமீதான தீர்ப்புக்கு அமைய செயற்படுவதாகவும் தாம் எந்த வகையிலும் பக்கசார்பாக செயற்படவில்லை எனவும் தெரிவித்தார்.
இதேவேளை சாலிய விக்ரமசூரிய உட்பட சந்தேக நபர்கள் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum