Top posting users this month
No user |
Similar topics
19 ஏழு உப பிரிவுகளுக்கு சர்வஜன வாக்கெடுப்பு! உச்ச நீதிமன்றம் வியாக்கியானம் குறித்து எம்பிக்களின் கருத்துக்கள்!
Page 1 of 1

19வது அரசியலமைப்பு திருத்தச் சட்டம் அரசியலமைப்பிற்குட்பட்டது என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. இதில் உள்ள இரு சரத்துக்களிலுள்ள 7 உப பிரிவுகளை நிறைவேற்ற சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என உச்ச நீதிமன்ற வியாக்கியானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக சபாநாயகர் சமல் ராஜபகச நேற்று பாராளுமன்றத்தில் அறிவித்தார்.
அமைச்சரவையின் தலைவராக பிரதமரை நியமிப்பது, அமைச்சர்களினதும் அமைச்சுக்களினதும் எண்ணிக்கை மற்றும் அவற்றின் விடயதானம் மற்றும் பணிகளைத் தீர்மானித்தல், பாராளுமன்ற உறுப்பினர்களில் இருந்து அமைச்சரவையின் உறுப்பினர்களாக இல்லாதவர்களை அமைச்சராக நியமிக்கலாம், உட்பட 7 உப பிரிவுகள் இதில் அடங்கும். 7 உப பிரிவுகளும் சர்வஜன வாக்கெடுப்பின் மூலம் அங்கீகரிக்கப்பட வேண்டும் என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.
பாராளுமன்றம் நேற்று கூடியபோது, சபாநாயகர் சமல் ராஜபக்ச, 19ஆவது திருத்தம் தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு எனக்குக் கிடைத்துள்ளது. 19வது திருத்தச் சட்டமூலம் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட வேண்டும்.
11 வது சரத்தின் 7 உப பிரிவுகளுக்கு அரசியலமைப்பின் 83 ஆவது உறுப்புரையின் பிரகாரம் சர்வஜன வாக்கெடுப்பின் மூலம் மக்களின் அங்கீகாரத்தை பெற வேண்டியுள்ளது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது என்றார்.
எம்.பிக்களின் கருத்து
ரணில் விக்ரமசிங்க
சர்வஜன வாக்கெடுப்புக்கு உட்படுத்தப்பட வேண்டுமென்ற வகையில் உயர் நீதிமன்றத்தினால் பரிந்துரைக்கப்பட்டுள்ள 19 வது திருத்தத்தின் சில சரத்துக்களை நீக்கிக் கொள்வதாக அரசாங்கம் நேற்று சபையில் அறிவித்தது. இதன்படி உயர் நீதிமன்றத்தினால் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதானதும் 19 வது திருத்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதுமான இரண்டு ஷரத்துக்களில் உள்ளடக்கப்பட்டுள்ள ஏழு பிரிவுகளை நீக்கி விட்டு பெரும்பான்மை பலத்துடன் சட்ட திருத்தத்தை நிறைவேற்றிக்கொள்ள முடியும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
ஜி.எல். பீரிஸ்
ஜனாதிபதி மற்றும் பிரதமரின் அதிகாரம் தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டுமென உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மார்ச் 24 ம் திகதி பிரதமரினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட 19 வது திருத்தத்தில் அகற்றப்பட்டிருந்த பிரிவுகள் பின்னர் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளன. எதிர்காலத்தில் பிரச்சினை எழாத வகையில் இந்த திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும். சகலரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் 19 வது திருத்தம் அமைக்கப்பட வேண்டும்.
ரத்ன தேரர்
மக்களுக்கு அர்த்தபுஷ்டியான யாப்பொன்றை வழங்க வேண்டும். ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரத்தை குறைக்க வேண்டும் என்பதே சகலரதும் நோக்கமாகும். 19 வது திருத்தத்திற்கு புதிய திருத்தங்களை சட்டமா அதிபர் நீதிமன்றத்தில் முன்வைத்தார். அது ஆங்கில மொழியில் மட்டுமே முன்வைக்கப்பட்டன. தமிழ், சிங்கள மொழிகளில் அவை சமர்ப்பிக்கப்படவில்லை. பாராளுமன்ற சம்பிரதாயங்களை நன்கு அறிந்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க, 19வது திருத்தத்தை நிறைவேற்றும் நடவடிக்கைக்கு தலைமை வகிப்பார் என நம்பினாலும் அவர் அதனை மீறியுள்ளார். தனக்கு அதிகாரங்களை காட்டிக்கொள்ளும் வகையில் யாப்பு திருத்தத்துக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சுசில் பிரேம் ஜெயந்த்
ஜனாதிபதியின் சில அதிகாரங்களை பிரதமருக்கு வழங்கும் முயற்சி காரணமாகவே 19 வது திருத்தத்தின் சில உப பிரிவுகளுக்காக சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டுமென உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைக்குப் பதிலாக வெஸ்ட் மினிஸ்டர் முறை அல்லது வேறு ஒரு முறைமை தயாரிக்கப்பட வேண்டும். 1972 ம் ஆண்டு அரசியலமைப்பு 2 வருடங்கள் ஆராயப்பட்ட பின்னரே நிறைவேற்றப்பட்டது. 1978 யாப்பும் அவ்வாறே நிறைவேற்றப்பட்டது.
ரஜீவ விஜேசிங்க
நல்லாட்சிக்கான அம்சங்களை அரசாங்கம் மீறியுள்ளது. தேர்தல் விஞ்ஞாபனத்தில் ஜனாதிபதி வாக்களித்தவை மீறப்பட்டுள்ளது. அமைச்சரவை அனுமதியளித்த விடயங்கள் புதிய திருத்தங்களினூடாக மாற்றப்பட்டுள்ளது.
ரவூப் ஹக்கீம்
19 வது திருத்தம் தொடர்பில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில் மீண்டும் உச்ச நீதிமன்றத்திடம் வியாக்கியானம் கோருமாறு எதிர்த்தரப்பு கோருகிறது. இதற்கு முன்னர் இவ்வாறு நடந்தது கிடையாது. மீண்டும் நீதிமன்ற வியாக்கியானம் கோர தேவையில்லை.
அநுரகுமார திசாநாயக்க
19வது அரசியலமைப்பு திருத்தமானது எமது ஜனநாயக கட்டமைப்பை பலப்படுத்தும் பிரதானமான நடவடிக்கையாகும். 19 வது திருத்தத்திலுள்ளவற்றை முழுமையாக ஏற்காதிருக்கலாம். அல்லது சகல நோக்கமும் இதனால் நிறைவேறாமல் இருக்கலாம். ஆனால் ஜனநாயக முறைகள் பின்பற்றி இதனை முன்னெடுக்க வேண்டும்.
தினேஷ் குணவர்தன
அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் எம்மிடையே பாரிய முரண்பாடு கிடையாது. 19வது அரசியலமைப்பு திருத்தத்தை திருத்தும் முறையை மாற்ற வேண்டாமென்றே கோருகிறோம்.
நவீன் திசாநாயக்க
நீதிமன்றம் சுதந்திரமாக செயற்படுகிறது. தொலைபேசி அழைப்புகள் எதுவும் உச்ச நீதிமன்றத்திற்கு செல்லவில்லை.18வது திருத்தத்திற்கு ஆதரவளித்து நாம் செய்த தவறை தற்பொழுது உணர்கிறேன். அன்று செய்த தவறை திருத்துவதற்கு இன்று அவகாசம் கிடைத்துள்ளது. 19 வது திருத்தத்தினூடாக ஜனாதிபதியின் அதிகாரம் பாராளுமன்றத்திற்கு வழங்கப்படுகிறது. அரசியல் நோக்கமின்றி இதனை நிறைவேற்ற முன்வர வேண்டும். தற்பொழுது இதனை செய்யாவிட்டால் வரலாறு எம்மை சபிக்கும்.
வாசுதேவ நாணயக்கார
துண்டு துண்டாக திருத்தங்களை மேற்கொள்ளாது ஒன்றாக 19 வது சட்டமூலம் முன்வைக்கப்பட வேண்டும். வர்த்தமானியில் வெளியிட்ட பின்னர் மீண்டும் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அவையும் பகிரங்கப்படுத்தப்பட வேண்டும். 18 வது திருத்தம் அகற்றப்படுவதையும் 17 திருத்தம் கொண்டு வரப்படுவதையும் இட்டு மகிழ்கிறேன். இரு தரப்பும் இணைந்து செய்யக் கூடியவாறு திருத்தங்களை முன்வைக்குமாறு கோருகிறேன்.
அஜித் பி பெரேரா
19வது திருத்தத்தின் ஆரம்ப திருத்தத்தில் என்ன விடயங்கள் மாற வேண்டும் என தெளிவாக கூறப்பட்டுள்ளது. இந்த விடயத்தில் அநீதி எதுவும் இடம்பெறவில்லை. உச்ச நீதிமன்ற தீர்ப்பை ஆராய எதிர்க்கட்சிக்கு அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இது மஹிந்த ராஜபக்ச அல்ல ரணில் விக்ரமசிங்க சம்பந்தப்பட்ட பிரச்சினையல்ல. நாட்டின் எதிர்காலம் குறித்த விடயமாகும். மனச்சாட்சிக்கு ஏற்ப எம்.பிக்களுக்கு செயற்பட இடமளிக்க வேண்டும். அரசியலமைப்பும் நிலையியற் கட்டளையும் பேணப்பட்டு இந்த விடயம் முன்னெடுக்கப்பட்டுள்ளது என்றார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» 19வது அரசியலமைப்பு முரண்பாட்டை தீர்க்க சர்வஜன வாக்கெடுப்பு?
» மனித உரிமை பேரவையின் யோசனை தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்: விமல் வீரவன்ஸ
» ஜெயலலிதாவின் விடுதலையை எதிர்த்த மனு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum