Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


பகவான் சத்ய சாய்பாபா - பகுதி (5)

Go down

பகவான் சத்ய சாய்பாபா - பகுதி (5) Empty பகவான் சத்ய சாய்பாபா - பகுதி (5)

Post by abirami Mon Apr 06, 2015 5:17 pm


மனம் என்பது எண்ணங்களின் மூட்டை. பகவான் சத்யசாய்பாபா எப்போதும் மனதை ஒரு கைக்குட்டையோடு உதாரணம் காட்டி ஒப்பிடுவார். ""ஒரு கைக்குட்டை பல நூல்களினால் ஊடும் பாவுமாக பின்னப்பட்டிருக்கிறது. இதில் ஒவ்வொரு இழையாக நூலை எடுத்துவிட்டால் மிஞ்சுவது ஒன்றும் இருக்காது. அதைப்போலவே, மனம் என்பது எண்ணங்களை ஊடும் பாவுமாக கொண்டு பின்னப்பட்டிருக்கிறது. நீ ஒவ்வொரு எண்ணமாக விலக்கிவிட்டால் உன் மனமானது காணாமல் போய்விடும்'' என்று குறிப்பிடுவார்.
ஒரு நிமிட நேரத்தில் ஆயிரம் எண்ணங்கள் நம் மனதில் உதிக்கின்றன. ஒன்றை விட்டு ஒன்றிலிருந்து மனம் தாவிக் கொண்டே இருக்கிறது. அப்படி இருக்கும் போது எப்படி ஒருவரால் எண்ணங்களை விலக்கிவிட முடியும்? விலக்க முடியாமல் தவிப்பவர்கள் எண்ணங்களை சீரமைத்துக் கொள்ள முயற்சிக்க வேண்டும் என்று பகவான் பாபா வலியுறுத்துகிறார்.
எண்ணம் எழுந்தவுடன் அதை வெளிப்படுத்த சொல்லை உபயோகிக்கிறோம். பிறகு அந்த எண்ணமே செயலாக வடிவம் பெறுகிறது. இவ்வாறு எண்ணத்திற்குப் பிறகு நிகழும் சொல், செயல் ஆகிய இரண்டும் எண்ணத்தை மையமிட்டே அமைகிறது. எண்ணம்,சொல்,செயல் ஆகிய மூன்றும் உயர்வானதாகவும், ஒன்றுக்கொன்று இசைவானதாகவும், நன்மை தருபவனாகவும் இருத்தல் அவசியம். அதையே பகவான் ""திரிகரண சுத்தி'' என்று குறிப்பிடுகிறார். எண்ணம் இல்லாவிட்டால் வாழ்க்கையே இல்லை. வாழ்நாள் முழுவதும் மனதில் உருவாகும் எண்ணங்கள் திடமாகவும், உறுதிமிக்கதாகவும், ஆழமாக அமைந்து வேர்விடத் தொடங்கினால் அது நாளடைவில் சங்கல்பமாக மாறி விடுகின்றது. நமக்குள் உறையும் முற்பிறவி வாசனைகள் எண்ணங்களாகத் தோன்றுவதாக சாஸ்திரங்கள் கூறுகின்றன. இது சாத்தியம் தானா? அன்றாட வாழ்வில் நம்மில் ஒருசிலர் பிறந்தது முதலே நல்ல செயல்களில் ஈடுபாடு கொள்வதையும், ஆன்மிக சிந்தனையுடையவர்களாக இருப்பதைக் காண்கிறோம். மற்றும் பலர் எத்தகைய சாதுக்களின், நல்லவர்களின் நட்பு, கூட்டுறவு இருந்தாலும் நாத்திகம் பேசிக்கொண்டு விதண்டாவாதிகளாகத் திரிகிறார்கள். இவைகளுக்கு காரணம் அவரவருடைய முற்பிறவி வாசனைகளே. உள்மனதில் தேங்கி நிற்கும் எண்ணங்களின் வெளிப்பாடே அவர்களின் குணமாக அமைந்து விடுகிறது.
""உண்ணும் உணவைப் பொறுத்து ஒவ்வொருவருடைய எண்ணங்கள் அமைகின்றன. நீ உண்ணும் உணவு எவ்வகையோ, உன் எண்ணங்கள் அவ்வகையே. உன் எண்ணங்கள் எவ்வகையோ உன் கடவுளும் அவ்வகையே,'' என்று பகவான் பாபா அடிக்கடி கூறுவதுண்டு. தாமஸ குணங்களைத் தூண்டும் உணவுவகைகளால் சோம்பல், கீழான சிந்தனைகள், மூர்க்கத்தன்மை, வன்முறை போன்ற விலங்கு குணங்கள் உண்டாகின்றன. ராஜஸ குணத்தை தூண்டும் உணவு வகைகள் உண்பவர்கள் எச்செயலில் ஈடுபட்டாலும் ஆதாயம், லாபநோக்கம் கருதியே ஈடுபடுவர். எப்போதும் எதையும் சாதிக்க வேண்டும் என்ற எல்லையற்ற உணர்ச்சிக் கொந்தளிப்போடு இருப்பர். எதிர்பார்ப்பு இல்லாமல் எச்செயலிலும் இவ்வகை மனிதர்கள் ஈடுபட முடியாது. சாத்வீக உணவு வகைகளான பழங்களை உண்டு வந்தால் அமைதி, சத்சங்கம், ஆன்மிக எண்ணங்கள் ஒருவரிடம் தழைத்தோங்கும். அன்பு அருள் பெருகிவரும். முகத்தில் அமைதி தவழும். உண்ணும் உணவுவகைகள் நம் எண்ணங்களைக் கட்டுப் படுத்தும் சக்தி படைத்தவை என்பதை யாராலும் மறுக்க முடியாது. ""எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார் திண்ணிய ராகப் பெறின்,'' என்பது திருக்குறள். ""மனவுறுதி கொண்டவர்கள் நினைத்ததை நினைத்தபடியே செய்து முடிப்பார்கள்'' என்பது வள்ளுவரின் திருவாக்கு. உறுதியான சங்கல்பம் இருந்தால் மட்டும் போதாது. கடவுளின் அருள் சேர்ந்தால் மட்டுமே நாம் தொடங்கிய செயல்கள் நல்ல விதத்தில் நிறைவேறும். எனவே, நாம் கடவுளிடம், ""இறைவா! நிறைவான நல்ல எண்ணங்களைக் கொடு. உறுதியான சங்கல்பத்தையும், வைராக்கியத்தையும், இச்சாசக்தியையும் எனக்குத் தந்தருள்வாயாக!
என்னுடைய சிந்தனை எப்போதும் உன்னை மையமிட்டபடியே சுற்றிக் கொண்டிருக்கட்டும். என்னை எப்போதும் ஆசீர்வதிப்பாயாக!'' என்று வேண்டிக் கொள்ள வேண்டும்.
"என் செயலை நான் வணங்குகிறேன். நான் செய்யும் செயலை பூரணமாக கடவுளுக்கு
அர்ப்பணிக்கிறேன்' என்று எண்ணத்தோடு செயல்களைச் செய்து வரவேண்டும்.
மனவுறுதி இருப்பவனிடம் திரிகரண சுத்தி உண்டாகும். திரிகரண சுத்தி கைவரப்பெற்றால் சங்கல்பத்தை அடையலாம். இதையே இச்சாசக்தி என்று குறிப்பிடுவர். நாம் அனைவருமே மன
உறுதியை வளர்த்துக் கொண்டால் எந்தத் துறையிலும் நினைத்ததைச் சாதிக்கும் வலிமை பெறுவோம். எண்ணம், சொல், செயல் ஆகிய மூன்றும் உயர்வு உடையதாக அமைந்து, கடவுளின் ஆசியும், அருளும் இணைந்து விடும் போது நாம் செய்கின்ற செயல் ஒவ்வொன்றும் ஒரு வழி பாடாக அமைந்து விடும். அத்தகைய நிலையை நாம் அடைவோம்.
- தொடரும்

பழியை நீக்கியவர்
கோல்கட்டாவில் ஒரு இளைஞன் நிறுவனம் ஒன்றில் கிளர்க்காக பணியாற்றி வந்தான். ஒருமுறை அலுவலகத்தில் அவன் பணம் கையாடிவிட்டதாக குற்றம் சுமத்தப்பட்டான். வீண்பழியைக் கேட்டு அவனால் என்ன செய்வதென்றே தெரியவில்லை. இளைஞனின் தாய் பகவான் பாபாவின் பக்தை. பூஜை அறையில் இருந்த பாபா படத்தின் முன் அமர்ந்து அழுதாள். தன் பிள்ளையைக் காப்பாற்றும்படி பாபாவிடம் மன்றாடினாள். அந்தர்யாமியாக தன் பக்தர்களின் நெஞ்சில் வாழும் பாபா தெரிந்து கொள்ளாத விஷயம் என்று ஒன்று உண்டா? அந்த இளைஞன் கங்கையாற்றில் விழுந்து தற்கொலை செய்ய முடிவெடுத்தான். கங்கையாற்றை நோக்கி நடக்கத் தொடங்கினான். பாலத்தின் நடுப்பகுதியை அடைந்தான். ஆற்றுவெள்ளத்தில் குதிக்க முயன்ற அந்த நேரத்தில் ""புட்டபர்த்திக்கு வா!'' என்றொரு குரல் அசரீரியாகக் கேட்டது. சற்று தைரியம் எழுந்தது. தன் அம்மா கொண்டிருந்த சாய்பக்தி தான் காரணம் என்பதை உணர்ந்தான். தன் முடிவை மாற்றிக் கொண்டு புட்டபர்த்திக்கு புறப்பட்டான். ரயிலின் சக்கரச்சத்தம் கூட "புட்டபர்த்தி...புட்டபர்த்தி' என்றே ஒலிப்பது போல அவன் காதில் கேட்டுக் கொண்டிருந்தது. புட்டபர்த்தியில், பகவான் பாபாவின் தரிசனத்தின் போது, ""ஹை கல்கத்தா! உள்ளே வா!'' என்று சொல்லி இளைஞனை நேர்காணலுக்கு அழைத்தார். ஒன்பது நாட்கள் அங்கேயே தங்கும்படியும், எல்லா பிரச்னை
களையும் தான் பார்த்துக் கொள்வதாகவும் உறுதி அளித்தார்.மீண்டும் அலுவலகம் சென்ற இளைஞனுக்கு ஆச்சரியம் காத்திருந்தது. பணம் கையாடல் செய்தவனே தன் குற்றத்தை ஒப்புக்கொண்டான். இளைஞனுக்கு ஏற்பட்ட பழியிலிருந்து பகவான் பாபா முழுமையாக அவனைக் காப்பாற்றிவிட்டார்.
abirami
abirami

Posts : 4514
மன்றத்தில் இணைத்த தேதி : 26/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum