Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


கல்கம்ப வடிவ பெருமாள்

Go down

கல்கம்ப வடிவ பெருமாள் Empty கல்கம்ப வடிவ பெருமாள்

Post by abirami Mon Apr 06, 2015 4:22 pm


கால்நடைகளுக்கு சுகவீனம் ஏற்பட்டு வருமானம் குறைந்தால், நிவர்த்திக்காக அரியலூர் மாவட்டம் கல்லங்குறிச்சி கலியுகவரதராஜப் பெருமாள் கோயிலுக்கு வருகிறார்கள். இவர் கல் கம்ப வடிவில் காட்சியளிக்கிறார்.
தலவரலாறு: அரியலூர் சிதளவாடியில் 250 ஆண்டுகளுக்கு முன் கோபாலன் என்பவர் வாழ்ந்து வந்தார். வன்னிய குலத்தைச் சேர்ந்த இவருடைய மகன் மங்கான், மாட்டு மந்தை ஒன்றை நிர்வகித்து வந்தார். மந்தையில் கருவுற்ற நிலையிலிருந்த பசு, மேயச் சென்ற போது காணாமல் போனது. மூன்று நாட்கள் தேடியும் கிடைக்காததால் துயரமடைந்தார். மூன்றாம் நாள் இரவு, அவர் கனவில், ""அன்பனே! கவலைப்படாதே, காணாமல் போன பசு கன்றுடன் மேற்புறமுள்ள காட்டில் இரண்டு மைல் தொலைவில் ஆலமரத்துக்கும் மாவிலிங்க மரத்துக்கும் இடையே சங்கு இலை புதர் அருகேயுள்ளது. காலையில் அங்கே கன்றுடன் பசுவைக் காண்பாய்,'' என இறைவன் கூறி மறைந்தார். காலையில் மங்கான் பணியாட்களுடன் சென்று பார்த்த போது, அந்தப்பசு, தன்கன்றுடன் அம்மாவெனக் கதறியபடியே அவரிடம் வந்தது. பசு நின்ற இடத்தில் சாய்ந்து கிடந்த கம்பம் ஒன்றைக் கோபாலன் கண்டார். அதன் மீது பால் சொரிந்திருந்தது. அக்கம்பத்தை மங்கானும், அவரது பணியாட்களும் வணங்கினர்.
மங்கான், கனவில், பொய்ப்பொருளாம் உன்பசுவை அழைத்துச் சென்று, மெய்ப்பொருளாம் என்னைக் கைவிட்டாய், உன் முன்னோர்க்கும் எனக்கும் உள்ள உரிமைத் தொடர்பை நீ அறியமாட்டாய். திருமாலை வணங்கிய உன் முன்னோர் பெருமாள் கோயில் கட்ட எண்ணி, இங்கு கற்கம்பம் கொண்டு வரும் போது வண்டியின் அச்சு முறிந்ததால், என்னை அங்கேயே விட்டுவந்தார்கள். அதே கம்பம் தான் நீ காண்பது. இதை நிலைநாட்டும் உரிமை உன்னுடையது. கம்பத்தை நிலை நிறுத்தி நாளும் வணங்கு. என்னை நீ உணரவே உன் பசுவை மறைத்து வைத்தேன். உன்னையும் உன் வழித்தோன்றல்களையும் காக்க வந்தவன் நான். கலியுகத்தார் கவலையை நீக்கவே தோன்றினேன். என் பெயர் கலியுக பெருமாள்,'' எனக் கூறி இறைவன் மறைந்தார். மங்கான், அந்த இடத்தில் கோயில் கட்டி வழிபாட்டை துவக்கினார். இதுவே கலியுக வரதராஜப்பெருமாள் கோயிலாக உள்ளது.
விவசாயிகளின் பிரார்த்தனை தலம்: விளைநிலங்களில் உணவு தானியங்கள் விளைச்சல் நன்றாக இருந்தால் பக்தர்கள் தாங்கள் விளைவித்த தானியங்களை நேர்த்திக்கடனாக செலுத்துகின்றனர். நோயுற்ற கால்நடைகள் குணமாவதற்கு வேண்டும் பக்தர்கள், முதல் கன்றை கோயிலுக்கு காணிக்கையாக செலுத்துகின்றனர்.
சிறப்பம்சம்: மூலஸ்தானத்தில் 12 அடி உயர கம்பத்தை ஆஞ்சநேயர் தாங்கி கொண்டிருப்பது போன்ற உருவம் மட்டுமே உள்ளது. இதனையே மூலவராக கருதி பூஜை நடக்கிறது. வைகுண்ட ஏகாதசி யன்று, உற்சவமூர்த்தி பவனி நடக்கும். தாயாருக்கு உற்சவர் கலியுக வரதராஜப் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் அருள்பாலிக்கிறார். தசாவதார மண்டபத்தில் பத்து அவதாரங்களின் சிற்பங்கள் அழகுற செதுக்கப்பட்டுள்ளது. சிற்ப வேலைபாடுகள் நிறைந்துள்ளது. தலவிருட்சம் மகாலிங்கமரம் ஆதிகாலத்திலிருந்தது போலவே இன்றும் தளிர்த்து செழித்து காட்சி தருகிறது.
திருவிழா: தமிழ்வருடப்பிறப்பு, சித்ரா பவுர்ணமி, அட்சயதிரிதியையன்று சுவாமி கருட வாகனத்தில் வீதியுலா, வைகாசி விசாகத்தன்று சுவாமி வெள்ளிக்கருட வாகனத்தில் வீதிஉலா, ஆடிப்பெருக்கு, கோகுலாஷ்டமி, விநாயகர் சதுர்த்தி, விஜயதசமி, திருக்கார்த்திகை, அனுமன்ஜெயந்தி, ஸ்ரீராமநவமியன்று தேரோட்டம், பங்குனி உத்திரம்.
இருப்பிடம்: அரியலூரிலிருந்து இரும்புலி கிராமம் செல்லும் ரோட்டில் ஆறு கி.மீ.,தூரத்தில் கல்லங்குடி உள்ளது. மினி பஸ், ஆட்டோ வசதியுள்ளது.
திறக்கும் நேரம்: காலை 6.30- பகல் 12.30 மணி, மாலை 3- இரவு 9 மணி.
abirami
abirami

Posts : 4514
மன்றத்தில் இணைத்த தேதி : 26/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum