Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


என் குழந்தைகளை கணவர் கடத்திவிட்டார்: அமெரிக்காவில் இந்திய தாய் நடத்தும் பாசப் போராட்டம்

Go down

என் குழந்தைகளை கணவர் கடத்திவிட்டார்: அமெரிக்காவில் இந்திய தாய் நடத்தும் பாசப் போராட்டம்  Empty என் குழந்தைகளை கணவர் கடத்திவிட்டார்: அமெரிக்காவில் இந்திய தாய் நடத்தும் பாசப் போராட்டம்

Post by oviya Mon Mar 30, 2015 12:55 pm

தனது முன்னாள் கணவரால் அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு கடத்தப்பட்ட தனது 2 பிள்ளைகளை மீட்க இந்திய தாய் ஒருவர் தீவிரமாக போராடி வருகிறார்.
கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட பிந்து பிலிப்ஸ் (44), அமெரிக்காவில் நியூஜெர்சி மாகாணத்தில் பிளெயின்ஸ்போரோ என்ற இடத்தில் வசித்து வருகிறார்.

இவர் சுனில் ஜேக்கப் என்பவரை திருமணம் செய்து, ஆல்பர்ட் பிலிப் ஜேக்கப், ஆல்பிரட் வில்லியம் ஜேக்கப் என்ற இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார்.

பின்னர் பிந்து பிலிப்சுக்கும் கணவர் சுனில் ஜேக்கப்புக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த 2008-ம் ஆண்டு விடுமுறை என்ற பெயரில் இந்தியா சென்றபோது, சுனில் ஜேக்கப் 2 பிள்ளைகளையும் கடத்தி சென்றதாக கூறப்படுகிறது.

இதையடுத்து பிந்து பிலிப்சால் அவரது இரட்டை பிள்ளைகளுடன் தொடர்பு கொள்ள முடியவில்லை.

எனவே தற்போது பிந்து இந்த விவகாரத்தை அமெரிக்க பாராளுமன்றத்துக்கு எடுத்துச்சென்றுள்ளார்.

இது தொடர்பான விசாரணையில் பிந்து கூறுகையில், குளிர்கால விடுமுறையின் போது இந்தியாவுக்கு குடும்பத்துடன் செல்ல வேண்டும் என்று கூறி என்னை அவர் நிர்ப்பந்தித்தார்.

அவர் மிகவும் கொடூரமான முறையில் என் குழந்தைகளை என்னிடம் இருந்து பிரித்து இந்தியாவுக்கு கடத்திச்சென்று விட்டார்.

மேலும், நான் அவர்களுடன் தொடர்பு கொள்ளக்கூட முடியாத நிலை உள்ளது.

பின்னர் இது தொடர்பாக நான் நியூஜெர்சி சுப்பீரியர் நீதிமன்றத்தை நாடியபோது, 2009-ம் ஆண்டு டிசம்பர் மாதம், எனது குழந்தைகளின் சட்டப்படியான, பாதுகாப்பு உரிமையை அந்த நீதிமன்றம் எனக்கு வழங்கியது.

ஆனால் நான் என் குழந்தைகளை பார்க்கவோ, அவர்களுடன் பேசவோ முடியவில்லை என்றும், என் குழந்தைகள் மீண்டும் என்னோடு சேர பாராளுமன்ற உறுபினர்கள் உதவ வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

அமெரிக்க வெளியுறவு துறையின் குழந்தைகள் விவகார சிறப்பு ஆலோசகர் சூசன் ஜேக்கப்ஸ் கூறுகையில், இந்த பிரச்சினையில் ஒரு இணக்கமான தீர்வு காண்பதற்கு அமெரிக்கா உறுதி பூண்டுள்ளது என உறுதியளித்துள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum