Top posting users this month
No user |
Similar topics
விக்கினேஸ்வரனுக்கும் ரணிலுக்குமிடையில் கருத்து முரண்பாடுகள் எதுவுமில்லை என்கிறார் செல்வம் எம்.பி.
Page 1 of 1

வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் கருத்து முரண்பாடுகள் இல்லை. ஒரு சில தர்க்கங்களை பிரிவினையாக கருதக்கூடாது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
வடமாகாணத்திற்காக விஜயத்தினை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேற்கொண்டுள்ள நிலையில் கூட்டமைப்பு உடனான சந்திப்பு தொடர்பிலும் வடமாகாண முதலமைச்சர் மற்றும் பிரதமருக்கு இடையில் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் கருத்து முரண்பாடுகள் தொடர்பில் வினவிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
பிரதமரின் யாழ். விஜயம் மிக ஆரோக்கியமானதென்றே நாம் கருதுகின்றோம்.
கடந்த வாரம் வடக்கில் காணி விடுவிப்பு நிகழ்வில் பிரதமர் கலந்து கொண்டிருந்த போதும் அவருடனான சந்திப்பினை மேற்கொள்ள முடியவில்லை.
எனினும் நாளை ஞாயிற்றுக்கிழமை நாம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை கிளிநொச்சியில் சந்திக்கவுள்ளோம்.
இச்சந்திப்பின் போது மன்னார், வன்னி பகுதிகளில் இராணுவ வசமிருக்கும் பொதுமக்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பிலும் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பிலும் எம்பக்க கருத்துக்களை முன்வைப்போம்.
வடக்கில் காணிகள் விடுவிக்கப்பட்ட போதிலும் மக்களின் நிலங்கள் முழுமையாக விடுவிக்கப்படவில்லை. வன்னி, மன்னார் முள்ளிக்குளம், பகுதிகளில் மக்களின் நிலங்கள் இன்றும் இராணுவத்தினர் பிடியிலேயே உள்ளது.
எனவே இவ்விடயங்களை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் கவனத்திற்கு கொண்டுவரவுள்ளோம்.
அதேபோல வடமாகாண முதலமைச்சர் மக்களின் உண்மை நிலைமையினை வெளிப்படுத்தியுள்ளார். அவரின் கருத்துக்களில் நியாயமான கோரிக்கைகளே உள்ளடங்கியிருக்கின்றது.
அதேபோல் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் வடமாகாண சபைக்கும் எவ்வித முரண்பாடுகளும் இல்லை.
ஒரு சில கருத்து முரண்பாடுகளை பிரிவினைக்கான சண்டையென சித்தரிப்பது தவறானது.
வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனின் கருத்துக்களினால் அரசாங்கத்துடன் முரண்பாடுகள் ஏற்படப் போவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» பயங்கரவாத தடைச்சட்டத்தை நியாயப்படுத்த அரசு முயற்சி? - அனுமதிக்கமாட்டோம் என்கிறார் கே.வி.
» அரசியலமைப்புச் சபை அன்னப்பறவைச் சபை என்கிறார் உதய கம்மன்பில
» நல்லாட்சி அரசாங்கத்திலும் நீதியில்லை என்கிறார் அரியநேத்திரன் எம்.பி.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum