Top posting users this month
No user |
Similar topics
மகிந்தவின் ஆட்சியில் அரச நிதியைக் கையாடல் செய்த தொண்டமான், சஜின்வாஸ்
Page 1 of 1

மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் அமைச்சராக இருந்த ஆறுமுகன் தொண்டமான் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன ஆகியோர் அரசாங்கத்தின் சிறப்புரிமைகளை பெற்றுக்கொண்டு தனியார் நிறுவனங்களை நடாத்தி வந்துள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது.
இவர்களின் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்கப்படவில்லை, இதனால், அவர்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். இதனையடுத்தே இந்த அரசியல்வாதிகளின் தனியார் நிறுவனங்கள் பற்றி தகவல்கள் கசிந்துள்ளது.
சௌமியமூர்த்தி தொண்டமான் மன்றத்தினால், நடத்தப்படும் தொழிற்பயிற்சி நிலையங்கள் பலவற்றில் பணியாற்றும் ஊழியர்களுக்கு கடந்த 6 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை.
அத்துடன் தொழிற்பயிற்சி நிலையங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள கொஸ்மோஸ் பாதுகாப்பு நிறுவனத்தின் ஊழியர்களுக்கும் இரண்டு மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை.
முன்னாள் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான், ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கங்களில் பல்வேறு அமைச்சு பதவிகளை வகித்துள்ளார்.
அமைச்சின் நிதியை முறைகேடான வகையில், தொண்டமான் நிதியத்திற்கு பயன்படுத்தி வந்தார். தற்போது அவ்வாறு செய்ய முடியாத காரணத்தில் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, நுவரெலியா, தவலந்தன்னை உட்பட பல தோட்டங்களில் இந்த தொழிற்பயிற்சி நிலையங்கள் இயங்கி வருகின்றன.
அவற்றில் 32 பேர் வரை பணியாற்றி வருகின்றனர். சம்பளம் கிடைக்காத காரணத்தினால், இவர்களின் குடும்பங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். அத்துடன் சஜின் வாஸ் குணவர்தனவுக்கு சொந்தமான கொஸ்மோஸ் பாதுகாப்பு நிறுவனத்தின் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படாத காரணத்தினால், அவர்களின் குடும்பங்களும் வாழ்வாதார பிரச்சினையை எதிர்நோக்கியுள்ளனர்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» புற்றுநோய் மருத்துவமனையில் மகிந்தவின் ஆட்சியில் 500 கோடி மோசடி!
» முன்னாள் ஜனாதிபதி மகிந்தவின் மைத்துனர் செய்த பணமோசடி அம்பலம்
» சஜின்வாஸ் குணவர்தனவிடம் சரக்கு விமானம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum