Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


சீனாவுக்கு சொந்தமாகப் போகும் இலங்கை வான்பரப்பு

Go down

சீனாவுக்கு சொந்தமாகப் போகும் இலங்கை வான்பரப்பு         Empty சீனாவுக்கு சொந்தமாகப் போகும் இலங்கை வான்பரப்பு

Post by oviya Tue Mar 17, 2015 1:18 pm

கொழும்புத் துறைமுக நகரத் திட்டத்தை தொடர அனுமதித்தால், இலங்கை தனது வான் பிராந்தியத்தின் ஒரு பகுதியை சீனாவிடம் இழக்க நேரிடும் என்று சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை எச்சரிக்கை விடுத்துள்ளது.
கொழும்புத் துறைமுக நகரத் திட்ட உடன்பாட்டின்படி, சீனாவுக்கு நில உரிமை வழங்கப்பட்டால், அதற்கு மேலாக உள்ள வான் பிராந்தியமும், சீனாவின் கட்டுப்பாட்டிலேயே இருக்கும் என்றும், விமானப் போக்குவரத்து அதிகார சபை சுட்டிக்காட்டியுள்ளது.

சிவில் விமானப் போக்குவரத்து தொடர்பாக, 1944ம் ஆண்டு கையெழுத்திடப்பட்ட சிக்காகோ பிரகடனத்தில் சிறிலங்கா உள்ளிட்ட 191 நாடுகள் ஒப்பமிட்டுள்ளன.

இந்தப் பிரகடனத்தின் 1வது மற்றும் 2வது, பிரிவுகளின்படி, கொழும்புத் துறைமுக நகரத்தில் சீனாவுக்குச் சொந்தமாக நிலம் வழங்கப்பட்டால், அதற்கு மேலாக உள்ள வான் பகுதியும் சீனாவுக்குச் சொந்தமானதாகவே இருக்கும்.

கொழும்புத் துறைமுக நகரத் திட்ட உடன்பாட்டின்படி, சீனாவுக்கு 108 ஹெக்ரெயர் நிலப்பரப்பு வழங்கப்படும்.இதில் 88 ஹெக்ரெயர், 99 ஆண்டு குத்தகைக்கும், 20 ஹெக்ரெயர் சீனாவுக்குச் சொந்தமாகவும் வழங்கப்படும்.

சிக்காகோ பிரகடனத்தின் 1வது பிரிவில், ஒரு நாடு தனது பிராந்தியத்துக்கு மேலாக உள்ள வான்பரப்பில் தனியுரிமை கொண்டிருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபையின் இது குறித்து சுட்டிக்காட்டியுள்ளது புதிய அரசாங்கத்துக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிக்காகோ பிரகடனத்தை கவனத்தில் கொள்ளாமல் முன்னைய அரசாங்கம் எவ்வாறு சீனாவுடன் இந்த உடன்பாட்டுக்கு இணங்கியது என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

இந்த திட்டம் பாதுகாப்பு ரீதியான கவலைகளை ஏற்படுத்தியுள்ளதாக, இந்தியா முன்னர் பிரச்சினை எழுப்பியிருந்தது.

இந்தநிலையில், இந்த வான் பிராந்திய ஆதிக்க விவகாரம் இந்தியாவுக்கு பெரும் கவலையை அளிக்கும் என்று இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஆனால் தற்போது கொழும்புத் துறைமுக நகரத் திட்டம் புதிய அரசாங்கத்தினால் தற்காலிகமாக இடை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எனினும் சீன அரசாங்கம் கொழும்புத் துறைமுக நகரத் திட்ட உடன்படிக்கையினை பாதுகாக்க இராஜதந்திர ரீதியில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum