Top posting users this month
No user |
Similar topics
மோடியின் இலங்கைக்கான பயணத்திட்டம்
Page 1 of 1
மோடியின் இலங்கைக்கான பயணத்திட்டம்
இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு 3 நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
இவர் எதிர்வரும் 13ம் திகதி இலங்கையை வந்தடைவார் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளார்.
இந்திய பிரதமரின் இலங்கை விஜயத்தின் போது அவர் செல்லும் இடங்கள் தொடர்பான பயணத்திட்டத்தை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்திய பிரதமர் அநுராதபுரத்திலுள்ள மஹா போதி புனிதஸ்தலத்துக்கு செல்லவுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இந்திய நிதியுதவியில் அமைக்கப்படவுள்ள யாழ்.கலாச்சார மையத்திற்கு அடிக்கல் நாட்டவுள்ளதுடன், இந்திய உதவியில் கட்டப்படவுள்ள வீடுகளை அதற்குரிய பயனாளிகளுக்கு கையளிப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலைமன்னாருக்கும், மதவாச்சிக்கும் இடையிலான ரயில் சேவை மீண்டும் ஆரம்பிக்கப்படுவதை குறிப்புணர்த்தும் வகையில் அங்கிருந்து பயணத்தை மேற்கொள்ளும் முதல் புகையிரதத்திற்கு கொடியசைத்து இந்திய பிரதமர் ஆரம்பித்து வைக்கவுள்ளார்.
மேலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர பேச்சுவார்த்தை நடத்துவதுடன், பாராளுமன்றத்தின் சிறப்பு அமர்விலும் பங்கேற்று உரையாடவுள்ளார் என வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
அதன் பின்னர் கடந்த 1988ம் ஆண்டு இலங்கைக்கு அனுப்பப்பட்டு கொல்லப்பட்ட இந்திய இராணுவத்தினருக்கு, கொழும்பில் அமைக்கப்பட்டுள்ள நினைவு இடத்தில் மலர் வளையம் வைத்து பிரதமர் நரேந்திர மோடி அஞ்சலி செலுத்துவார்.
இலங்கைப் பயணத்தை முடித்துக்கொண்டு எதிர்வரும் 15ம் திகதி இந்திய பிரதமர் மீண்டும் தமது தாய் நாட்டிற்கு திரும்பி செல்வார் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» பிரித்தானியாவின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் யாழ் விஜயம்
» இலங்கைக்கான புதிய வெளிநாட்டு தூதுவர்கள்- கிழக்கு முதல்வருக்கிடையில் சந்திப்பு
» இலங்கைக்கான மூன்று புதிய வெளிநாட்டு தூதுவர்கள் ஜனாதிபதியிடம் தகுதிச் சான்றிதழ்களை கையளித்தனர்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum