Top posting users this month
No user |
Similar topics
பாலியல் குற்றங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்: நடிகை குஷ்பு ஆவேசம்
Page 1 of 1

பலாத்காரம் செய்த குற்றவாளியை தண்டிக்காமல், அவன் அளித்த பேட்டியை ஒளிபரப்ப தடை விதிப்பதிலேயே மத்திய அரசு முனைப்புடன் உள்ளதாக பிரபலங்கள் பலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
டெல்லியில் மருத்துவ மாணவியை ஓடும் பேருந்தில் பலாத்காரம் செய்து கொன்றவர்களில் ஒருவனான முகேஷ் சிங்கிடம், திகார் சிறையில் பி.பி.சி. தொலைக்காட்சி பேட்டி கண்டு ஆவணப்படமாக எடுத்துள்ளது.
"இந்தியாவின் மகள்" என்று பெயரிடப்பட்டுள்ள அந்த ஆவணப்படத்தில், முகேஷ் பேசியவை முன்பே செய்தியாக வெளியானதை அடுத்து அந்த படத்திற்கு மத்திய அரசு தடை விதித்தது.
ஆனாலும் தடையை மீறி பி.பி.சி. அந்த ஆவணப்படத்தை ஒளிபரப்பியதால் மத்தியில் ஆளும் பாஜக பி.பி.சி.யை விமர்சித்துள்ளது.
ஆனால், இதுபற்றி காங்கிரஸ் மூத்த தலைவர் பிரியா தத் கூறுகையில், அந்த ஆவணப்படம், பாலியல் பலாத்காரத்தை ஆதரிக்கவில்லை.
பலாத்காரம் செய்பவரின் மனநிலையைத்தான் வெளிப்படுத்துகிறது. அதற்கு தடை விதித்தது அதிர்ச்சி அளிக்கிறது என்று கூறியுள்ளார்.
இந்நிலையில், சமூக வலைத்தளங்களில் திரைப்பட பிரபலங்கள் தங்கள் கண்டனங்களை பதிவு செய்துள்ளனர்.
நடிகை குஷ்பு கூறுகையில், பெண்களுக்கு எதிராக தினம் தினம் வன்முறைகள் நடந்து கொண்டு இருக்கின்றன. ஆனால் நிர்பயா வழக்கை மட்டுமே பேசிக்கொண்டு இருக்கிறார்கள்.
நிர்பயா ஆவணப்படம் பற்றி சர்ச்சைகள் கிளம்பி இருக்கிறது. பெண்களுக்கு எதிராக தினமும் நடக்கும் தாக்குதல்களைத்தான் இந்த ஆவண படத்தை விட முக்கியமான பிரச்சனையாக பார்க்க வேண்டும்.
தற்போது உருவாகியுள்ள பரபரப்பு காரணமாக இந்த ஆவண படத்தை நிறையபேர் பார்க்க கூடிய நிலைமை ஏற்பட்டுள்ளது.
மேலும், பாலியல் குற்றங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும், பாலியல் குற்றங்களுக்கு தண்டனை கிடைக்க செய்வதும் மக்கள் மனநிலையில் மாற்றம் ஏற்படுத்துவதும் தான் இப்போதைக்கு முக்கியம் எனவும் தெரிவித்துள்ளார்.
இயக்குனர் புனித் மல்கோத்ரா, பேட்டியை ஒளிபரப்ப தடை விதிப்பது பற்றி உடனடியாக முடிவு எடுத்த மத்திய அரசு, அந்த பாலியல் குற்றவாளியை 3 ஆண்டுகளாக உயிருடன் வைத்திருப்பது ஏன் என்று எனக்கு புரியவில்லை.
மேலும், அவர்களை உடனடியாக தூக்கிலிட வேண்டியதுதானே என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
நடிகர் சித்தார்த், அமெரிக்க ராணுவத்தில் நடந்த பாலியல் பலாத்காரம் பற்றியோ, கத்தோலிக்க திருச்சபையில் நடந்த பலாத்காரம் பற்றியோ எடுக்கப்படும் படங்கள் அனுமதிக்கப்படுகிறது.
ஆனால், இந்தியாவில் நடந்த ஒரு பாலியல் பலாத்காரம் பற்றிய படத்துக்கு தடை விதிக்கப்படுவது ஏன் என்று கேட்டுள்ளார்.
நடிகை டிவிங்கிள் கன்னா, கருவில் உள்ள பெண் குழந்தையை அழிப்பதில் இருந்து, பெண்களை பலாத்காரம் செய்து கொல்வதுவரை நடக்கிறது.
நாளைய ஆண்களை நாங்கள்தான் வளர்த்து வருகிறோம். எனவே, ஆண்களின் மனோபாவம் மாற வேண்டும் என்று கூறியுள்ளார்.
ஹிந்தி திரைப்பட இயக்குநர் அபிஷேக் கபூர், இந்தியாவின் மகள் என்ற ஆவணப்படம், ஒவ்வொரு இந்தியனின் முகத்திலும் விழுந்த அடி என்று கூறியுள்ளார்.
மேலும், குணச்சித்திர நடிகர் போமன் இரானி, ஆவணப் படங்கள் உண்மையை தெரிவிப்பவை. அந்த உண்மையை நாம் அங்கீகரிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» கள்ளக் காதலனுடன் சேர்த்து வைக்க வேண்டும்: தற்கொலைக்கு முயன்ற இளம்பெண்
» மோடியை முதலில் இந்தியாவுக்கு கொண்டு வாருங்கள்: நடிகை குஷ்பு அதிரடி
» தி.மு.க.வை விட்டு நான் வெளியேறிய காரணம் கருணாநிதிக்கு மட்டுமே தெரியும்: நடிகை குஷ்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum