Top posting users this month
No user |
Similar topics
எந்தவொரு கைதிக்கும் கொடுக்காத அதீத பாதுகாப்பு மரண தண்டனையை எதிர்நோக்கும் தமிழருக்கு?
Page 1 of 1

மரண தண்டனையை எதிர்நோக்கும் மயூரன் சுகுமாரனின் விவகாரம் இரு நாடுகளிற்கு இடையேயான பலத்த உட்பூசலாக மாறியுள்ளது.
அதனால் இதுவரை எந்தவொரு வெளிநாட்டு மரணதண்டனைக் கைதிக்கும் கொடுக்காத பாதுகாப்பை இந்தோனேசியா அவுஸ்திரேலியப் பிரஜையான மயூரன் சுகுமாரனிற்குற்கும் அவர்களை சிறை மாற்றிய போது கொடுத்துள்ளதோடு இப்போதும் கொடுத்து வருகின்றது.
சிறைச்சாலையில் இருந்து விமான நிலையத்திற்கு கவச வாகனங்களின் அணிவகுப்பில் அழைத்துச் செல்லப்பட்ட இவர்கள் சென்ற வழியெங்கும் பொலிசாரும் பாதுகாப்புப் படையினரும் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டனர்.
இவர்கள் அழைத்துச் செல்லப்பட்ட விமானத்தில் இவர்கள் இருவருடனும் முகமூடி அணிந்த அதிரடிப்படையினரால் விமானம் நிறப்பப்பட்டது. மேற்படி இரண்டு மரண தண்டனைக் கைதிகளும் பறந்த விமானத்தை பாதுகாத்தபடி இந்தோனேசியாவின் இரண்டு போர் விமானங்கள் பறந்து சென்றன.
அதேபோல விமான நிலையத்திலிருந்து மரணதண்டனை நிறைவேற்றப்படும் தீவிற்கும் இவ்வாறான பலத்த பாதுகாப்புடனேயே விஜயபுர துறைமுகத்திலிருந்து (Wijaya Pura Port) இவர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர்.
அவுஸ்திரேலியாவின் தாக்கமேதுமில்லாமல் தமது நடவடிக்கையை கொண்டு செல்லவே இவ்வாறு இந்தோனேசியா செய்துள்ளது.
இதனிடையே மேற்படி விமானத்திற்குள் இந்தோனேசியாவின் ஒரு மூத்த பொலிஸ் அதிகாரி இரு மரணதண்டனைக் கைதிகளுடனும் ஏளனமாகக் கதைப்பது போன்ற படங்களை இன்று இந்தோனேசியப் பத்திரிகைகள் வெளியிட்டிருந்தன.
இதற்குக் கண்டனம் தெரிவித்த அவுஸ்திரேலியா இது ஒரு கோபமூட்டும் குரூரமான நடவடிக்கை என்று தெரிவித்திருந்தது. இதேவேளை இந்த விவகாரம் இந்தோனேசியாவிற்கும் அவுஸ்திரேலியாவிற்குமிடையேயான ஒரு மௌனப் போராகவே நடைபற்று வருகின்றது.
அவுஸ்திரேலியப் பிரதமர் 2004ம் ஆண்டு சுணாமியின் போது இந்தோனேசியாவிற்கு பல பில்லியன் டொலர்கள் உதவியதைக் குறிப்பிட்டு அதனைக் கருத்திற்கொண்டு இந்தோனேசியா இவர்களை விடுவிக்க வேண்டுமென சில மாதங்களிற்கு முன்னர் குறிப்பிட்டதிலிருந்து இந்த விவகாரம் இறுகியது.
அவுஸ்திரேலியப் பிரதமரின் கருத்திற்கு எதிரான இந்தோனேசியாவில் பல ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றிருந்தன. அவுஸ்திரேலியா தொடர்ந்தும் இவர்களை மரண தண்டனையிலிருந்து காப்பாற்ற முயன்று வருகின்றது.
இவர்கள் புனர்வாழ்வு பெற்று நல்வழிக்கு வந்துவிட்டார்கள் எனவே மரண தண்டனைக் குறைக்க வேண்டுமென்பதே அதன் வேண்டுகோளாக இருக்கின்றது.
இவர்களிற்கான மரணதண்டனை இந்த வாரம் இடம்பெறமாட்டாது என்ற கருத்து தற்போது இந்தோனேசியச் சட்டமா அதிபரிடமிருந்து வெளிப்பட்டுள்ள போதும் அவர்கள் மரணதண்டனை நிறைவேற்றப்படும் தீவிலேயே வைத்திருக்கப்பட்டிருப்பதால் 72 மணிநேரத்திற்கு முன்னர் அவர்களிற்கு மரணதண்டனை விவகாரம் அறியத்தரப்பட்டு நிறைவேற்றப்படலாம் என்ற அச்சமே தற்போதுள்ளது.
மரண தண்டனையிலிருந்து மயூரனை காப்பாற்றும் அவுஸ்திரேலியாவின் முயற்சி தோல்வி
அவுஸ்ரேலிய அரசாங்கத்தின் சிறைக் கைதிகள் பரிமாற்றத் திட்டம் தொடர்பான யோசனையை இந்தோனேசிய அரசாங்கம் நிராகரித்துள்ளது.
ஹெரோயின் போதைப் பொருள் கடத்தல் தொடர்பில் இந்தோனேசிய அரசாங்கத்தினால் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இரண்டு அவுஸ்ரேலிய பிரஜைகளுக்கு பதிலாக, அவுஸ்ரேலிய சிறையில் உள்ள இந்தோனேசிய சிறைக் கைதிகள் சிலரை பரிமாற்றிக் கொள்ள அவுஸ்ரேலிய அரசாங்கம் யோசனை ஒன்றை முன்வைத்தது.
இந்த யோசனையையே இந்தோனேசிய அரசாங்கம் நிராகரித்துள்ளது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» இந்தோனேசியாவில் கொடூரமான மரண தண்டனையை எதிர்நோக்கும் யாழ் தமிழன்.
» தேர்தல் காலங்களில் மாத்திரம் தமிழருக்கு வழங்கும் வாக்குறுதிகள்
» மயூரனின் மேல் முறையீடு தோல்வி: உலகே மரண தண்டனையை நிறுத்து

Permissions in this forum:
You cannot reply to topics in this forum