Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


மகன் தாலி கட்ட கழற்றி எறிந்த அப்பா: இது கலாட்டா கல்யாணம்

Go down

மகன் தாலி கட்ட கழற்றி எறிந்த அப்பா: இது கலாட்டா கல்யாணம் Empty மகன் தாலி கட்ட கழற்றி எறிந்த அப்பா: இது கலாட்டா கல்யாணம்

Post by oviya Thu Mar 05, 2015 1:41 pm

ஜாதிப்பிரச்சனையால் மருமகள் கழுத்தில் இருந்த தாலியை மாமனார் ஒருவர் கழற்றி வீசியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே பண்ணப்பட்டியை சேர்ந்த பழனிசாமி என்பவரது மகன் கோபிநாத்(22), சேலத்தில் உள்ள ஜவுளி கடையில் வேலை பார்த்து வருகிறார்.

அதே கடையில், கருப்பூர் பரவைக்காடு பகுதியை சேர்ந்த பெரியசாமியின் மகள் திவ்யா(23) என்பவரும் வேலை பார்த்து வந்தார்.

இருவரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர். இவர்களது காதல், பெற்றோருக்கு தெரியவந்தது. இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால், கோபிநாத்தின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால், கடந்த மாதம் 23ம் திகதி, நண்பர்கள் உதவியுடன் சேலம் ஊத்துமலையில் உள்ள முருகன் கோயிலில், காதல் ஜோடியினர் திருமணம் செய்து கொண்டனர்.

இது தெரிந்ததும் கோபிநாத்தை அவரது தந்தை பழனிசாமி வீட்டில் சிறை வைத்தார்.

இந்நிலையில் நேற்று, நண்பர்களின் உதவியுடன் வீட்டை விட்டு வெளியேறிய கோபிநாத், திவ்யாவை அழைத்துக்கொண்டு ஓமலூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் திருமணத்தை பதிவு செய்ய முடிவு செய்து, இருவரும் ஓமலூருக்கு சென்றனர். மகன் பதிவு திருமணம் செய்ய ஓமலூருக்கு வருவது பழனிசாமிக்கு தெரியவந்துள்ளது.

இதையடுத்து, ஓமலூர் கடைவீதிக்கு வந்த காதல்ஜோடியை பழனிச்சாமி வழிமறித்தார். அப்போது, திவ்யாவின் கழுத்தில் புது தாலி தொங்கியதை கண்டு ஆவேசமடைந்த பழனிச்சாமி, அதை பறித்து வீசினார்.

மேலும், திவ்யாவை சரமாரியாக தாக்கியுள்ளார். இதனால் செய்வதறியாது அதிர்ச்சியடைந்த கோபிநாத், திவ்யாவை அழைத்துக் கொண்டு அங்கிருந்து ஓட்டம் பிடித்தார்.

கடை வீதிக்கு சென்ற கோபிநாத், புது தாலிக்கயிறு வாங்கி, அதே இடத்தில் மனைவியின் கழுத்தில் மீண்டும் கட்டினார். அவர்களை விடாமல் பின்தொடர்ந்து துரத்தி வந்த பழனிச்சாமி, திவ்யாவின் கழுத்தில் மறுபடியும் தாலி இருந்ததை கண்டு, அதை அறுத்து எறிந்தார்.

இதனால் கடைவீதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார் இருவரும் மேஜர் என்பதால், அவர்களுக்கு எந்த இடையூறும் செய்யக்கூடாது என எழுத்துப்பூர்வ உறுதிமொழி வாங்கினர்.

பின்னர் திவ்யாவை, கோபிநாத்துடன் அனுப்பி வைத்துள்ளனர்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum