Top posting users this month
No user |
Similar topics
ஹலசினஹன்னு அப்பா
Page 1 of 1
ஹலசினஹன்னு அப்பா
புழுங்கல் அரிசி - முக்கால் கப்
பச்சரிசி - கால் கப்
பலாச்சுளை - 15
பொடித்த வெல்லம் - 1/4 - 1/2 கப்
தேங்காய் துருவல் - அரை கப்
ஏலக்காய்த் தூள் - சிறிது
உப்பு - ஒரு சிட்டிகை
எண்ணெய் - பொரிப்பதற்கு
இரண்டு அரிசிகளையும் 3 மணி நேரம் ஊற வைத்து நீர் இல்லாமல் வடித்து வைக்கவும். பலாச்சுளைகளை விதையை நீக்கி நறுக்கி வைக்கவும்.
மிக்ஸி அல்லது க்ரைண்டரில் அரிசியைப் போட்டு நீர் விடாமல் ஒரு சுற்று சுற்றி, அதனுடன் பலாச்சுளைகளைச் சேர்த்து அரைக்கவும்.
அனைத்தும் மசியத் துவங்கியதும் பொடித்த வெல்லத்தைச் சேர்த்து அரைக்கவும். வெல்லம் சேர்த்ததும் இன்னும் நீர்க்க துவங்கும்.
மாவில் உப்புச் சேர்த்து நீர் இல்லாமல் வெல்லம் மற்றும் பழத்தின் நீரிலேயே நைசாக அரைத்தெடுத்து, தேங்காய் துருவல் மற்றும் ஏலக்காய்த் தூள் சேர்த்து கலந்துக் கொள்ளவும்.
மாவுக் கலவை தயார்.
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், மாவுக் கலவையை சிறு உருண்டைகளாக (நெல்லிக்காய் அளவில்) உருட்டி எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும். இந்த போண்டா சற்று டார்க்காக இருக்கும். ஆனால் கருகிவிடாது. (எண்ணெயை மிதமான தீயில் காயவிட்டு பொரிக்கவும். அதிகச் சூடாக இருந்தால் மாவின் உள்ளே வேகுவதற்கு முன்பே வெளியில் கறுத்துப் போகும். வெல்லம் சேர்ப்பதால் இப்படி சிவக்கும். சிறு உருண்டைகளாக இருந்தால் சீக்கிரமாக வெந்துவிடும். உள்ளே நன்றாக வேகும் முன் வெளியே கறுத்து போகாமல் இருக்கும்).
சுவையான பலாப்பழ போண்டா தயார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum