Top posting users this month
No user |
எனக்கும் எனது குடும்பத்திற்கும் பாதுகாப்பு தேவைப்படுகின்றது!– ஜயந்த கெட்டகொட
Page 1 of 1

தமக்கும் தமது குடும்பத்திற்கும் பாதுகாப்பு தேவைப்படுவதாக ஜனநாயகக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெட்டகொட நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.
தமக்கு உரிய பாதுகாப்பை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு அவர் நேற்று நாடாளுமன்றில், சபாநாயகர் சமால் ராஜபக்சவிடம் உத்தியோகபூர்வமாக கோரிக்கை விடுத்துள்ளார்.
வரப்பிரசாத கேள்வி ஒன்றின் மூலம் அவர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் என்ற ரீதியில் சுயாதீனமான முறையில் கடமையாற்ற முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
எனக்கும் எனது குடும்ப உறுப்பினர்களுக்கும் கடுமையான அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுகின்றன.
சுதந்திரமான மனநிலையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
எனக்கு எதிராக அவதூறு ஏற்படும் வகையிலான விளம்பரங்கள், சுவரொட்டிகள் உள்ளிட்ட பிரசாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.
எனக்கும், எனது மனைவி மற்றும் பிள்ளைகளுக்கும் கடுமையான அவமானம் ஏற்படும் வகையில் பிரசாரம் மேற்கொள்ளப்படுகின்றது.
சில தரப்பினர் இந்த நடவடிக்கைகளை திட்டமிட்ட வகையில் மேற்கொண்டு வருகின்றனர் என ஜயந்த கெட்டகொட தெரிவித்துள்ளார்.
ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா தேர்தலில் போட்டியிட்டு வெற்றியீட்டி நாடாளுமன்ற உறுப்பினராக கடமையாற்றி வந்த போது அப்போதைய அரசாங்கம் அவருக்கு எதிராக வழக்குத் தொடர்ந்து தண்டித்திருந்தது.
தண்டனை விதிக்கப்பட்ட காரணமாக சரத் பொன்சேகா தனது நாடாளுமன்ற உறுப்புரிமையை இழந்தார்.
அதன் பின்னர் இணக்கப்பாட்டின் அடிப்படையில் ஜயந்த கெட்டகொடவிற்கு நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொது மன்னிப்பு வழங்கியதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை மீளப் பெற்றுக் கொள்ளும் முனைப்புக்களில் சரத் பொன்சேகா ஈடுபட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum