Top posting users this month
No user |
Similar topics
எவன்காட் தலைவரின் வெளிநாட்டு கடவுச்சீட்டு: பிரதமர் ரணில் விளக்கம்
Page 1 of 1

எவன் காட் பாதுகாப்பு நிறுவனத்தின் தலைவர் நிஷங்க யாப்பா சேனாதிபதியின் கடவுச்சீட்டு விடுவிக்கப்பட்டமை தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்சவை அழைத்து விளக்கம் கேட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
நீதியமைச்சரிடம் பிரதமர் விளக்கம் கோரியமை குறித்து பிரதமரின் அலுவலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளளது.
எவன் காட் நிறுவனத்தின் தலைவரது கடவுச்சீட்டு சம்பந்தமான பிரச்சினைகள் தொடர்பில் அண்மையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். இதன் பின்னர் பிரதமர், நீதியமைசரை அழைத்து அது குறித்த தகவல்களை கேட்டுள்ளார்.
சிறந்த அரசியல் கலாச்சாரத்தை ஏற்படுத்த வேண்டும் என்று உழைக்கும் அனைவரும் ஊழல், மோசடிகள் முற்றாக ஒழிக்கப்பட்டு அவற்றுடன் சம்பந்தப்பட்டவர்கள் சட்டத்திற்கு முன் நிறுத்தப்பட வேண்டும் என எதிர்பார்ப்பதாக பிரதமர் இதன் போது சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனால், நல்லாட்சியை கட்டியெழுப்பவும் ஊழல் மோசடிகள் தொடர்பான விசாரணைகளுக்கு தடையேற்படுத்தும் வகையிலான கருத்துக்களை வெளியிடவோ, செயற்பாடுகளை முன்னெடுப்பதையோ தவிர்க்குமாறு பிரதமர், நீதியமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன் எவன் காட் தொடர்பான விசாரணைகளை சுதந்திரமாகவும் பக்கசார்பற்றதாகவும் நடத்துமாறும் சட்டவிரோத செயல்கள் நடந்திருந்தால், அதற்கு பொறுப்புக் கூறவேண்டியவர்களை உடனடியாக சட்டத்திற்கு முன் நிறுத்துமாறும் ஜனாதிபதியும் பிரதமரும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளனர் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» நேற்றைய தினம் இலங்கை வந்தடைந்த பூட்டான் பிரதமர் இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்தவுள்ளார். அத்துடன் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோரையும் பூட்டான் பிரதமர் இன்று சந்தித்து பேச்சுவ
» ஜனாதிபதியால் ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆபத்து வருமா?: ரணில் விளக்கம்
» மத்திய வங்கி பிணை முறிவுகள் தொடர்பில் பிரதமர் விளக்கம்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum