Top posting users this month
No user |
Similar topics
சம்பந்தன், சுமந்திரன் ஆகியோர் மீது முழு நம்பிக்கை: தீர்மானம் நிறைவேற்றிய த.தே.கூ-கனடா
Page 1 of 1

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஆகியோர் தமிழ் மக்களது உரிமைகளை வென்றெடுப்பதற்கு பற்றுதியோடு ஆற்றிவரும் பாரிய பணிகளை வரவேற்பதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு (கனடா) தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
கடந்த மார்ச் மாதம் முதல் நாள் வவுனியாவில் நடைபெற்ற இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில்,
தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளக் கூடிய அரசியல் தீர்வு தொடர்பில் இலங்கையின் புதிய அரசு தாமதமின்றி விரைந்து உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று நிறைவேற்றப்பட்ட தீர்மானம் உட்பட அனைத்து தீர்மானங்களையும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு (கனடா) முழுமனதுடன் வரவேற்று தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளது.
(1) இலங்கையில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை முன்னெடுக்கும் நடவடிக்கைகளை இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு ஏற்றுக் கொள்வதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை வரவேற்கிறோம்.
(2) தமிழ் மக்களுக்குச் சொந்தமான காணிகளை விடுவித்தல், அரசியல் கைதிகளை விடுவித்தல், காணாமல் போனவர்கள் தொடர்பில் நடடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ளுதல், தேர்தலின் போது வழங்கப்பட்ட வாக்குறுதிகளுக்கு அமைய விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவின் அரசை வலியுறுத்தும் தீர்மானங்களை வரவேற்கின்றோம்.
(3) கடந்த மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் தமிழர்களை அச்சுறுத்தும் வகையில் வடக்கு மற்றும் கிழக்கில் சிவில் நிருவாகப் பதவிகளுக்கு இராணுவத்தின் முக்கிய அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருந்தார்கள்.
அவர்களை அகற்றுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விடுத்த கோரிக்கைப்படி வட மாகாண சபையின் ஆளுநர் ஓய்வுபெற்ற இராணுவ தளபதி ஜி.ஏ. சந்திரசிறி, கிழக்கு மாகாணசபை ஆளுநர் ஓய்வுபெற்ற கடற்படைத்தளபதி மொகான் விஜயவிக்கிரம, திருகோணமலை அரசாங்க அதிபர் ஓய்வுபெற்ற இராணுவ தளபதி இரஞ்சித் சில்வா ஆகியோர் விடுவிக்கப்பட்டு அவர்களது இடத்தில் சிவில் நிருவாகிகள் நியமிக்கப்பட்டதை வரவேற்கிறோம்.
(4) வட மாகாண சபையின் முதலமைச்ரோடு முரண்பட்டுக் கொண்டு மோதல் போக்கைக் கடைப்பிடித்து வந்த விஜயலட்சுமி ரமேஷ் இடமாற்றம் செய்யுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விடுத்த கோரிக்கைப்படி அவரை இடமாற்றம் செய்யப்பட்டதை வரவேற்கிறோம்.
(5) புலம்பெயர் தமிழர்கள் போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரங்களை மீள்கட்டியெழுப்பவும் கைத்தொழில், விவசாயம் போன்ற துறைகளில் முதலீடு செய்யவும் ஒரு பொறிமுறையை விரைவாக உருவாக்குமாறு வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்களைக் கேட்டுக் கொள்கிறோம்.
(6) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஆகியோர் தமிழ் மக்களது உரிமைகளை வென்றெடுப்பதற்கு பற்றுதியோடு ஆற்றிவரும் பாரிய பணிகளை முழுமனதாக வரவேற்பதோடு அவர்கள் மீதான முழு நம்பிக்கையையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
(7) எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய சகல ஆயத்தங்களை துரிதமாக எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறது.
மேற்காட்டிய தீர்மானங்கள் 2015 மார்ச்சு மாதம் முதல்நாள் கூடிய ததேகூ (கனடா) இன் சிறப்பு செயல்குழுக் கூட்டத்தில் ஒருமனமாக நிறைவேற்றப்பட்டன.
இவ்வாறு தமிழத் தேசியக் கூட்டமைப்பு- கனடா வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» கனடா மொன்றியல் ஜெயம், ஜெனா ஆகியோர் கிளிநொச்சி மாணவர்களுக்கு தொடர்ந்து உதவிக்கரம்
» புதிய அரசாங்கத்தின் மீது மக்களுக்கு முழு நம்பிக்கையில்லை: பிரிட்டிஷ் குழுவிடம் விக்னேஸ்வரன் தெரிவிப்பு
» வாக்குறுதியை நிறைவேற்றிய ஜனாதிபதி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum