Top posting users this month
No user |
Similar topics
மேல் மாகாண சபை வழங்க வேண்டிய நிதி கிடைப்பதில் தாமதம்: கொழும்பு மாநகர சபை குற்றச்சாட்டு
Page 1 of 1

மேல் மாகாண சபையிலிருந்து கிடைக்க வேண்டிய 300 மில்லியன் ரூபா நிதி கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபை குற்றம் சுமத்தியுள்ளது.
உறுதிப் பத்திரங்களை பதிவு செய்யும் போது அறவிடப்படுகின்ற முத்திரைப்பணம் கிடைப்பதிலேயே தாமதம் ஏற்பட்டுள்ளதாக மாநகர சபையின் பொருளாளர் கே.டி சித்ரபால தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் கிடைக்க பெறும் பணம் பிரதேசத்ததின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்காக பயன்படுத்தப்படுகின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது குறித்து அதிகாரிகளுக்குத் தெளிவுபடுத்தும் வகையில் மாநகர மேயர் ஏ.ஜே.எம். முஸம்மிலின் கையொப்பத்துடன் கடிதமொன்று அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை கடந்த வருடத்திற்காக வரவு செலவு திட்டத்தில் மாகாண சபைக்கு ஒதுக்கப்பட்ட முழுமையான நிதி இதுவரையும் கிடைக்காத நிலையில் 50 வீதமான நிதியே கிடைக்கப்பெற்றுள்ளது எனவும்,
இந்நிதியை விரைவில் பெற்றுத்தருமாறு கோரி நிதி அமைச்சின் செயலாளருக்கு அறிவித்துள்ளதாகவும், அவ்வாறு குறித்த நிதி கிடைக்கப்பெற்றால் இந்த பணத்தை மாநகர சபைக்கு செலுத்த முடியும் என மேல்மாகாண சபை முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க விளக்கமளித்துள்ளார்.
பணத்தை விரைவில் பெற்றுத்தருமாறு கோரி நிதி அமைச்சின் செயலாளருக்கு அறிவித்துள்ளதாகவும் பணம் கிடைக்கும் பட்சத்தில் அவற்றை செலுத்த முடியும் எனவும் முதலமைச்சர் தெரிவித்தார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கையில் உயர்வு: கொழும்பு மாநகர சபை எச்சரிக்கை
» 5 பேருக்கு மரண தண்டனை விதித்த கொழும்பு மேல் நீதிமன்றம்!
» மேல் மாகாண முதலமைச்சரின் பதவி பறி போகுமா?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum