Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


மீண்டும் முதல்வராகும் ஆசை இல்லை: கருணாநிதி பரபரப்பு பேட்டி

Go down

மீண்டும் முதல்வராகும் ஆசை இல்லை: கருணாநிதி பரபரப்பு பேட்டி Empty மீண்டும் முதல்வராகும் ஆசை இல்லை: கருணாநிதி பரபரப்பு பேட்டி

Post by oviya Sat Feb 28, 2015 2:06 pm

திமுக தலைவர் கருணாநிதி தனக்கு மீண்டும் தமிழக முதல்வராக வேண்டும் என்ற ஆசை இல்லை என்று பேசியுள்ளார்.
திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினின் பிறந்த நாள் விழா இளைஞர் எழுச்சி நாளாக கொண்டாடப்படவுள்ளதாக முடிவு செய்யப்பட்டுள்ள‌து.

இந்நிலையில், சென்னை மேற்கு மாவட்ட திமுக சார்பில் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை ஒட்டி ரூ.1 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இன்று நடைபெற்றது.

இந்த விழாவில் திமுக தலைவர் கருணாநிதி கலந்து கொண்டு 20 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கியுள்ளார்.

பின்னர் அவர் பேசுகையில், ஆண்டுதோறும் இங்கே ஸ்டாலின் பிறந்தநாள் கூட்டத்தில் கலந்து கொள்கிறேன்.

இன்று நடக்கும் இந்த விழாவில் அவருக்கு எனது வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

எனக்கு முன்னால் பேசியவர்கள் நான் 6-வது முறையாக முதல்வர் ஆக வேண்டும் என்று கூறினார்கள். அந்த ஆசை எனக்கு இல்லை. நான் விரும்புகின்ற ஆசையெல்லாம் திமுகவை கட்டி காக்க வேண்டும் என்பதுதான்.

கடைசி தொண்டன் உள்ள வரை இந்த கழகத்தை எதிரிக்கு விட்டு கொடுக்க முடியாது.

ஏழை எளியவர்கள் நலனுக்காக இந்த இயக்கத்தை காப்பாற்ற வேண்டும். இல்லையென்றால் நாம் நன்றி மறந்தவர்கள் ஆவோம்.

அண்ணாவின் தம்பிகள் என்ற பெருமையோடு நமக்கு இருக்கிற கடமைகளை நிறைவேற்ற வேண்டும்.

மேலும், தமிழ் வாழ, திராவிடம் வாழ நாமெல்லாம் ஒன்றிணைந்து கூட்டாக தொடர்ந்து உழைத்திட வேண்டும் என்று பேசியுள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum