Top posting users this month
No user |
Similar topics
தமிழக மீனவர்களை சிறைபிடிக்கும் இலங்கை கடற்படையின் நடவடிக்கை கண்டிக்கத்தக்கது: ஜீ.கே.வாசன்
Page 1 of 1

தொடர்ந்தும் தமிழக மீனவர்களை சிறைபிடிக்கும் இலங்கை கடற்படையினரின் நடவடிக்கை கண்டிக்கத்தக்கது என தமிழக காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
அவர் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
காரைக்கால், நாகபட்டினம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் கடந்த 26ம் திகதி கோடியக்கரை பகுதியில் இலங்கை மீனவர்களினால் கைது செய்யப்பட்டமையையடுத்தே அவர் இந்த கண்டன அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
தமிழக மீனவர்கள் தொடர்ந்தும் இலங்கை கடற்படையால் தாக்கப்படுவதும், துன்புறுத்தப்படுவதும், படகுகள் சேதப்படுத்தப்படுவதும், சிறைப்பிடிக்கப்படுவதும் வழமையாகிவிட்டது. இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியில் நடந்ததை போன்றே தற்போதைய புதிய அரசாங்கமும் மேற்கொண்டு வருகின்றது என அவர் குற்றம் சுமத்தியுள்ளதுடன், புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அட்சியில் தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் என எண்ணியிருந்த போதிலும், அது தொடர்பில் இலங்கை அரசாங்கம் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இலங்கை ஜனாதிபதியின் இந்திய விஜயத்தின் போது இரு நாட்டு மீனவர்களினதும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் இருநாட்டு பிரதிநிதிகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என தெரிவித்தார்.
எனினும் குறித்த பேச்சுவார்த்தை ஒத்தி வைக்கப்பட்டுள்ளதுடன், தமிழக மீனவர்களின் பிரச்சினை தொடர ஆரம்பித்துள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதன் பின்னர் அதிகளவான மீனவர்கள் கைது செய்யப்பட்டமை இதுவே முதல் தடவை என அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இரு நாட்டு மீனவப் பிரதிநிதிகளின் பேச்சுவார்த்தை காலதாமதமின்றி உடனடியாக நடக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் அவர் இலங்கை அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதேவேளை தமிழக மாநில அரசும், மத்திய அரசும் காலம் தாழ்த்தாமல் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் தொடர்வதற்கும், மீனவர்கள் பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு ஏற்படவும், இப்பிரச்சனைகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கவும் அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» தமிழக மீனவர்களை சிங்கள மீனவர்கள் சிறைப்பிடித்துள்ளதாக தகவல்: மறுக்கும் கடற்படை
» தமிழக மீனவர்களை துச்சமாக எண்ணும் இலங்கை தலைகள்: இராமேஸ்வர மீனவ பிரதிநிதி கண்டனம்
» இல.கடற்படையினர் தமிழக மீனவர்களை புகைப்படம், வீடியோ எடுத்ததால் பரபரப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum