Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


அன்னை தெரசா பற்றி தப்பா பேசாதீங்க: கொந்தளித்த பாலிவுட் நடிகை

Go down

அன்னை தெரசா பற்றி தப்பா பேசாதீங்க: கொந்தளித்த பாலிவுட் நடிகை Empty அன்னை தெரசா பற்றி தப்பா பேசாதீங்க: கொந்தளித்த பாலிவுட் நடிகை

Post by oviya Thu Feb 26, 2015 1:42 pm

அன்னை தெரசா பற்றி ஆர்.எஸ்.எஸ் இயக்க தலைவர் மோகன் பகவத் சமீபத்தில் தெரிவித்த கருத்து சர்ச்சையை கிளப்பியுள்ளது.
ராஜஸ்தானில் நடந்த் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய மோகன் பகவத், அன்னை தெரசாவின் சேவைகள் நல்லதாக இருக்கலாம். ஆனால் அவரது சேவையின் பின்புறம் மதமாற்ற நோக்கம் இருந்தது என்று தெரிவித்தார்.

காங்கிரஸ் உட்பட எதிர்க்கட்சிகளும், கிறிஸ்தவ அமைப்பினரும் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்நிலையில் மோகன் பகவத்துக்கு, பா.ஜ கூட்டணி கட்சியான சிவசேனா ஆதரவு தெரிவித்து உள்ளது.

மேலும் இவரது பேச்சை நியாயப்படுத்தும் வகையில், பா.ஜ செய்தி தொடர்பாளர் மீனாட்சி லேகி நிருபர்களிடம் கூறுகையில், அன்னை தெரசாவே ஒருமுறை ஒரு பேட்டியின் போது இதனை பகிரங்கமாக ஒப்புக் கொண்டுள்ளார் என்று தெரிவித்து இருந்தார்.

மீனாட்சியின் இந்த கருத்துக்கு பிரபல பாலிவுட் நடிகை தியா மிர்சா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

டுவிட்டரில், தனிப்பட்ட நம்பிக்கைகளை மிகவும் கொச்சைப்படுத்துவது போல உங்களது பேச்சு உள்ளது. இதற்காக நீங்கள் வெட்கப்படவேண்டும். அன்னை தெரசா குறித்த உங்கள் கருத்து கண்டனத்திற்குரியது என்று தெரிவித்துள்ளார்.

இதற்கு டுவிட்டரில் பதிலளித்த மீனாட்சி லேகி, உண்மை மிகவும் வலிமையானது. அதனை எதிர்கொள்ள முடியாமல் அகந்தையுடன் இருக்கும் நீங்கள்தான் இதற்காக அவமானம் அடைய வேண்டும். உங்களால் உண்மையை ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்று தெரிவித்துள்ளார்.

உடனே தியா, எனது தந்தை ஒரு கத்தோலிக், எனது தாயார் ஒரு வங்காளி. நான் ஒரு இந்துவை திருமணம் செய்து கொண்டேன். நான் ஒரு முஸ்லீம் வளர்ப்பு தந்தையால் வளர்க்கப்பட்டேன். உண்மையில் நான் ஒரு இந்தியன் என பதிலடி கொடுத்துள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum