Top posting users this month
No user |
Similar topics
கடத்தப்பட்ட மாணவர் ஐவர் கோத்தா முகாமிலா? அல்லது கொல்லப்பட்டனரா? - தவராசா மன்றில் வலியுறுத்து!
Page 1 of 1

தெஹிவளையில் கடத்தப்பட்ட ஐந்து மாணவர்களும் கோத்தா முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனரா? அல்லது கொல்லப்பட்டு விட்டனரா? இது குறித்து கவனம் செலுத்த வேண்டும் என்று சிரேஷ்ட சட்டத்தரணி கே.வி. தவராசா நேற்று கொழும்பு நீதிவான் நீதிமன்றில் வலியுறுத்தியுள்ளார்.
தெஹிவளையில் 2008ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 17ம் திகதி இரவு 10 மணியளவில் மூன்று தமிழ் மாணவர்களும் அவர்களது நண்பர்களான இரண்டு முஸ்லிம் மாணவர்களும் பயணம் செய்த வாகனத்தோடு கடத்தப்பட்டனர்.
கடற்படையினரால் கடத்தப்பட்டதாகக் கூறப்படும் ஐந்து மாணவர்களின் ஆட்கொணர்வு மனு நேற்று திங்கட்கிழமை கொழும்பு பிரதான நீதிவான் கியான் பிலப்பிட்டிய முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட வேளையில் மனுதாரர்களின் சார்பில் ஆஜராகிய சிரேஷ்ட சட்டத்தரணி தவராசா நீதிமன்றத்தில் தெரிவிக்கையில்,
கடற்படையினரால் தெகிவளையில் கடத்தப்பட்ட ஐந்து மாணவர்களில் நான்கு மாணவர்கள் கொலை செய்யப்பட்டு அவர்களது உடல்கள் களனி ஆற்றில் வீசப்பட்டதாகவும், மற்றைய மாணவனான ரஜீவ் நாகநாதன் திருகோணமலைக்கு கடத்திச் செல்லப்பட்டு 2009ம் ஆண்டு சித்திரை மாதம் 24ம் திகதி கொலை செய்யப்பட்டதாகவும் 22. 02.2015ம் திகதி வெளியான திவயின ஞாயிறு பத்திரிகையில் செய்தி பிரசுரிக்கப்பட்டுள்ளது.
எனவே கடத்தப்பட்டு காணாமல் போயுள்ள மாணவர்கள்-கோத்தா முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்களா? அல்லது பத்திரிகைச் செய்தியின்படி கொல்லப்பட்டு விட்டார்களா என நீதிமன்றின் கவனத்திற்கு கொண்டுவந்தார்.
இதனையடுத்து கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்ற நீதிபதி கியான் பிலபிடிய காணாமல் போயுள்ள மாணவர்களின் பெற்றோரிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு சென்று பத்திரிகைச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ள விடயத்தை பற்றிய முறைபாட்டை உடனடியாக செய்யும்படி அறிவுறித்தியதுடன், மனுதாரர்களின் முறைப்பாட்டை உடனே பதிவு செய்து் கோட்டை நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பித்து இந்த விடயங்களை புலன் விசாரணை செய்யும்படி் குற்றப்புலனாய்வுப் பிரிவு பொறுப்பதிகாரிக்கு அறிவுறுத்தினார்.
கோத்தா முகாம் உண்டா, அப்படியிருந்தால் எங்கு அந்த முகாம் உள்ளது? கடத்தப்பட்ட மாணவர்கள் கோத்தா முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்களா? என்பது தொடர்பான அறிக்கையை நீதிமன்றிற்கு சமர்ப்பிக்கும்படி கட்டளையிட்டு மேலதிக விசாரணையை மார்ச் மாதம் 2ம் திகதிக்கு ஒத்திவைத்தார்

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» வாஸ் குணவர்தனவின் மனைவி, மகனுக்கு மன்றில் ஆஜராகுமாறு அழைப்பாணை
» வடமாகாண சபை முரணாக நிதியை கையாள்கிறது: எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா
» ஆஸியில் இருந்து நாடு கடத்தப்பட்ட இளைஞர்கள் கைது

Permissions in this forum:
You cannot reply to topics in this forum