Top posting users this month
No user |
Similar topics
அப்துல் கலாமை அவமதித்த அமார்த்யா சென்: வெளியான பரபரப்பு தகவல்கள்!
Page 1 of 1

நாளந்தா பல்கலைக்கழக திட்டத்திலிருந்து முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமை வெளியேற்றும் வகையில், அமார்த்யா சென் மறைமுகமாக செயல்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் இது தொடர்பாக அப்போதைய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவுக்கு கடந்த ஆண்டு யூலை மாதம் ஒரு கடிதம் எழுதியுள்ளார்.
தற்போது அம்பலமாகியுள்ள அந்த கடிதத்தில், தனது இதயத்திற்கு நெருக்கமான நாளந்தா திட்டத்திலிருந்து தன்னை விலக்க அமார்த்யா சென் முயல்வதாக குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் அந்த கடிதத்தில், கடந்த 2007ம் ஆண்டிலிருந்து நாளந்தா பல்கலைக்கழகத்தின் பல்வேறு கல்வி, நிர்வாக கூட்டங்களில் பங்கேற்று வருகிறேன். வேந்தர் மற்றும் துணைவேந்தர் பதவிக்கு கல்வி மற்றும் நிர்வாகத்தில் நிரம்பிய அனுபவம் கொண்டவர்களே தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.
இந்த இருவரும் பீகாரிலேயே முழு நேரமும் இருந்து செயல்பட வேண்டும். அதுதான் நாளந்தா பல்கலைக்கழகத்தின் சிறப்பான வலிமையான செயல்பாட்டுக்கு உகந்ததாக இருக்க முடியும்.
ஆனால் நிர்வாகத்தில் இருப்பவர்கள் அதுகுறித்துக் கவலைப்படுவதாகவே தெரியவில்லை.
குறிப்பாக துணை வேந்தர் பதவிக்கு தனக்கு மிகவும் நெருக்கமான முனைவர் கோபா சபர்வாலை, நாளந்தா பல்கலைக்கழக நிர்வாக குழுத் தலைவர் அமார்த்யா சென் நியமித்துள்ளார்.
இதுகுறித்து அவர் எனது கவனத்திற்குக் கொண்டு வரவே இல்லை. நாளந்தா பல்கலைக்கழகத்திற்கு உரியவர்களைப் பொறுப்பில் நியமிக்காவிட்டால் அந்த நிறுவனத்தின் பெருமைக்கு குந்தகம் ஏற்படும் என்று தெரிவித்துள்ளார்.
நாளந்தா பல்கலைக்கழக திட்டத்தை மத்திய வெளியுறவு அமைச்சகம் தான், சர்வதேச பல்கலைக்கழகமாக அங்கீகரித்து நடத்தி வருகிறது.
இதில் இந்தியா, ஜப்பான், சீனா, கொரியா, அவுஸ்திரேலியா, தாய்லாந்து உள்பட 16 தென் கிழக்கு ஆசிய மற்றும் அவுஸ்திரலேசிய நாடுகள் பங்கெடுத்துள்ளன.
மேலும், இந்த பல்கலைக்கழக நிர்வாகத்தை மத்திய மனித வள மேம்பாட்டுத்துறையிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கலாம் வலியுறுத்தியதை அப்போதைய மத்திய அரசு கண்டு கொள்ளவில்லை் என்பது குறிப்பிடத்தக்கது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» செம்மரக்கடத்தலில் சிக்கவுள்ள பிரபல நடிகர் யார்? வெளியான பரபரப்பு தகவல்கள்
» தேசிய கொடியை அவமதித்த மோடி! பொலிசில் பரபரப்பு புகார்
» பெங்களூர் குண்டுவெடிப்பு: சென்னை பெண் குறித்து வெளியான உருக்கமான தகவல்கள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum