Top posting users this month
No user |
Similar topics
பெங்களூர் குண்டுவெடிப்பு: சென்னை பெண் குறித்து வெளியான உருக்கமான தகவல்கள்
Page 1 of 1

பெங்களூர் குண்டு வெடிப்பில் பலியான சென்னை பெண் பவானியை பற்றி உருக்கமான தகவல்கள் வெளியாகியுள்ளன.
பெங்களூர் நகரில் மகாத்மா காந்தி சாலை- பிரிகேட் சாலைக்கு அருகே உள்ள மக்கள் கூட்டம் நிறைந்த சர்ச் சாலையில் நேற்று இரவு 8.45 மணியளவில் குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது.
இதில் 3 பேர் காயமடைந்துள்ளனர். இதில் ஒருவர் சென்னையை சேர்ந்த பவானி. மற்ற இருவரின் பெயர்கள் கார்த்திக், சந்தீப் என்று தெரியவந்துள்ளது.
இந்த குண்டுவெடிப்பில் தலையில் படுகாயமடைந்த பவானி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து பொலிசார் நடத்திய விசாரணையில் பவானி குறித்து பல தகவல்கள் தெரியவந்துள்ளன.
சென்னையை சேர்ந்த பவானி அண்ணாசாலை எல்.ஐ.சி. பின்புறம் உள்ள ஜெனரல் பாட்டர்ஸ் சாலை பூபேகம் 2–வது தெருவில் வசித்து வந்தார்.
இவரது கணவர் பாலன் சென்னையில் டயர் விற்பனை நிறுவனம் நடத்தி வருகிறார். உறவினர் ஒருவரின் பிறந்தநாள் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பவானி தனது குழந்தைகள் உள்பட 8 பேருடன் பெங்களூர் சென்று இருந்தார்.
ஆனால் நேற்று ரெயிலில் சென்னை திரும்ப முன்பதிவு செய்திருந்த பவானி மற்றும் அவரது குழந்தைகளின் பயணச்சீட்டு உறுதியாகததால் அவர்கள் பெங்களூரிலேயே தங்கி விட்டனர் என தெரியவந்துள்ளது.
இந்நிலையில் நேற்று இரவு பவானி, உறவினர் கார்த்திக் (22) உடன் பெங்களூரில் ஷாப்பிங் சென்று விட்டு எம்.ஜி.ரோடு சர்ச் சாலையில் நடந்து சென்றபோது குண்டுவெடித்து பலியாகியுள்ளார்.
தற்போது பவானியின் உடல் பெங்களூர் விக்டோரியா மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அங்கு பிரேத பரிசோதனை முடிந்ததும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு சென்னைக்கு கொண்டு வரப்படுகிறது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» பெங்களூர் குண்டுவெடிப்பு: சென்னை பெண் பரிதாப மரணம்….யார் காரணம்?
» பெங்களூரு குண்டுவெடிப்பு! கைதான தீவிரவாதிகள் பற்றி பரபரப்பான தகவல்கள்
» ராகுல் காந்தி எங்கே இருக்கிறார்? வெளியான பரபரப்பு தகவல்கள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum