Top posting users this month
No user |
Similar topics
சாவில் மர்மம்: 2 ஆண்டுகளுக்கு பின்னர் தோண்டியெடுக்கப்பட்ட உடல்
Page 1 of 1

தூத்துக்குடி மாவட்டத்தில் 2 ஆண்டுகளுக்கு முன்னர் இறந்து போன நபர் ஒருவரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதால், பிரேத பரிசோதனைக்காக அவரது உடல் தோண்டியெடுக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள தெற்கு வேம்பார் பகுதியைச் சேர்ந்தவர் அந்தோணி ரதிமலர்(36), இவர் தெற்கு வேம்பார் பஞ்சாயத்து தலைவியாக உள்ளார்.
இவருடைய கணவர் சிங்கராஜ்(44), இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். சிங்கராஜூம், அதே பகுதியைச் சேர்ந்த சுயம்புலிங்கம் என்பவரும் கூட்டாக ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தனர்.
கடந்த 2013ம் ஆண்டு யூன் மாதம் சிங்கராஜ் திடீரென இறந்தார், அவர் மாரடைப்பால் இறந்ததாக கூறப்பட்டது. அவரது உடல் அங்குள்ள கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
பின்னர் சில மாதங்களில் அந்தோணி ரதிமலர், தன்னுடைய கணவருடன் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த சுயம்புலிங்கத்தை 2வதாக திருமணம் செய்து கொண்டார்.
சுயம்புலிங்கத்துக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்கள் மற்றொரு வீட்டில் தனியாக வசித்து வருகின்றனர்.
இதற்கிடையே சிங்கராஜூன் சாவில் மர்மம் இருப்பதாக அவருடைய உறவினர்களுக்கு சந்தேகம் எழுந்துள்ளது.
இது தொடர்பாக மதுரை உயர்நீதிமன்றத்தில், சிங்கராஜூன் தாயார் தேவ திரவியம் முறையிட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி, சிங்கராஜின் உடலை தோண்டி எடுத்து, பிரேத பரிசோதனை செய்ய உத்தரவிட்டார்.
இதையடுத்து விளாத்திகுளம் தாசில்தார் செல்வகுமார் முன்னிலையில், தெற்கு வேம்பார் கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டு இருந்த சிங்கராஜ் உடல் தோண்டி எடுக்கப்பட்டது.
தூத்துக்குடி அரசு மருத்துவமனையின் மருத்துவர் மனோகர் தலைமையிலான மருத்துவ குழுவினர் தோண்டி எடுக்கப்பட்ட உடலை அங்கேயே பிரேத பரிசோதனை செய்தனர்.
பிரேத பரிசோதனை அறிக்கையை, நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
பிரேத பரிசோதனை அறிக்கையின் பின்னரே சிங்கராஜ் மாரடைப்பால் இறந்தாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து விபரம் தெரியவரும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» மைத்திரியின் வருகை! 11 ஆண்டுகளுக்கு பின்னர் பணவீக்கத்தில் வீழ்ச்சி
» தஞ்சை பெரியகோவிலில் 100 ஆண்டுகளுக்கு பிறகு இன்று தேரோட்டம்
» மங்களபுரி மர்மம்
» தஞ்சை பெரியகோவிலில் 100 ஆண்டுகளுக்கு பிறகு இன்று தேரோட்டம்
» மங்களபுரி மர்மம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum