Top posting users this month
No user |
யாழில் கேரளா கஞ்சாவுடன் நால்வர் கைது
Page 1 of 1
யாழில் கேரளா கஞ்சாவுடன் நால்வர் கைது
யாழ் இளவாலையில் கேரளா கஞ்சாவுடன் நான்கு பேர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
சந்தேகநபர்களின் 101 கிலோ கேரள கஞ்சா மற்றும் சிறிய ரக லொறி ஒன்றும் இரண்டு முச்சக்கரவண்டியும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கலஹா பகுதியை சேர்ந்த இருவரும், யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒருவரும் நொச்சியாகம பகுதியை சேர்ந்த ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களை மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இளவாழை பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
2ம் இணைப்பு
யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பு பகுதியில் 101 கிலோ கஞ்சாவுடன் 4 சந்தேகநபர்கள் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளதாக இளவாலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே. மஞ்சுள டி. சில்வா தெரிவித்துள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது.
இந்தியாவின் கேரளா மாநிலத்திலிருந்து கடல் வழியாக இலங்கைக்குள் கொண்டுவரப்பட்ட கஞ்சா பொதிகளுடன் குறித்த சந்தேக நபர்கள் 4 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த போதைப்பொருள் இந்தியாவிலிருந்து கடல் வழியாக மாதகல் பகுதிக்கு கொண்டு வரப்பட்டு அதன் பின்னர் யாழ்ப்பாணம் ஊடாக கொழும்புக்கு கொண்டு செல்வதற்கான திட்டங்கள் கடத்தல்காரர்களிடம் இருந்தது தெரியவந்துள்ளது.
மேலும் கைதுசெய்யப்பட்ட 4 சந்தேக நபர்களில் இருவர் கண்டியைச் சேர்ந்தவர்கள் எனவும் மற்ற இருவரில் ஒருவர் யாழ்பபாணத்தைச் சேர்ந்தவர் மற்றையவர் அனுராதபுரத்தைச் சேர்ந்தவர் எனவும் தெரியவருகின்றது.
இவர்களிம் இரு முச்சக்கர வண்டிகள் மற்றும் ஒரு சிறிய டிப்பர் ரக வாகனம் மற்றும் காணப்பட்டதுடன் 2 கோடியே 50 லட்சம் ரூபா பெறுமதியான 45 கஞ்சா பொதிகள் காணப்பட்டதாகவும் தெரியவருகின்றது.
மேலும் குறித்த கடத்தல்காரர்கள் சுன்னாகத்திலிருந்து கொழும்பிற்கு வாழைக்குலை கட்டுபவர்களாக தம்மைக் காட்டிக்கொண்டே மேற்படி கடத்தல் நாடகத்தில் ஈடுபட்டுள்ளனர்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum