Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


லபுக்கலைத் தோட்டத்தில் குப்பை: செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்களுக்கு தடை விதித்த அதிகாரி

Go down

லபுக்கலைத் தோட்டத்தில் குப்பை: செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்களுக்கு தடை விதித்த அதிகாரி Empty லபுக்கலைத் தோட்டத்தில் குப்பை: செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்களுக்கு தடை விதித்த அதிகாரி

Post by oviya Wed Feb 18, 2015 1:27 pm

நுவரெலியா மாவட்டம் கொத்மலை பிரதேசத்திற்கு உட்பட்ட லபுக்கலை தோட்டத்தில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்களுக்கும் தோட்ட அதிகாரிக்கும் இடையில் நேற்று வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

குறித்த ஊடகவியலாளர்கள் மேற்படி தோட்ட பாடசாலையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றுக்குச் சென்று திரும்பிக் கொண்டிருந்த வேளையில் பாதையின் அருகே பாரிய அளவில் குப்பைகள் காணப்பட்டுள்ளது.

அந்த குப்பைகள் தோட்ட மக்களின் குடியிருப்பு தொகுதிக்கு அருகாமையில் காணப்பட்ட அதே நேரம், துர்நாற்றம் வீசியது. நாய்கள் பறவைகள் குப்பைகளை அங்கும் இங்குமாக இழுத்து சென்றுக் கொண்டிருந்தன. டெங்கு நுளம்பு உருவாவதற்கு காரணமாக இருக்கும் போத்தல்கள் பாரிய அளவில் காணப்பட்டுள்ளன.

அத்துடன் சூழலலும் மாசடைந்து காணப்பட்டது. சுற்றுலாப் பயணிகள் பாவித்த மலசலக்கூட கழிவுகள் உட்பட ஏனைய கழிவுகளும், கொத்மலை நீர்தேக்கத்திற்கு நீர் வரும் பிரதான நீர் வாவியின் அருகே இக் குப்பைகள் போடப்பட்டிருந்தன.

குறித்த நீரை பள்ளதாக்கு பிரதேசங்களில் விவசாயத்திற்கு மக்கள் பாவித்து வருகின்றனர். குறித்த பிரதேசம் மக்கள் குடியிருப்பு காணப்படும் பிரதேசமாகும். இந்த குப்பைகளினால் மக்களுக்கு பலவிதமான நோய்கள் ஏற்ப்ட வாய்ப்புக்கள் காணப்படுகின்றன.

இதனை கண்ட ஊடகவியளார்கள் செய்திகளை சேகரித்தனர். பின் இதன் உண்மை தன்மையை தோட்ட அதிகாரி மூலம் உறுதிபடுத்திக் கொள்ள தோட்ட அதிகாரியின் காரியாலயத்திற்கு சென்று கொண்டிருந்த வேளையில் அத் தோட்டத்தின் தோட்ட அதிகாரி, உத்தியோகஸ்த்தர்கள் உட்பட சில ஊழியர்கள் ஊடகவியலாளர்கள் சென்ற வாகனத்தை தோட்ட அதிகாரியின் வாகனத்தைக் கொண்டு மறித்து ஊடகவியலாளர்களை நிறுத்தி தாக்க முற்பட்டனர்.

அதேநேரம் தகாத வார்த்தைகளாளும் திட்டி இவ்வாறு செய்தி கேசரித்தமை தவறானது என வாதாடினர். இருந்தும் தாங்கள் செய்த தவறை ஏற்றுக் கொள்ளவோ அல்லது இந்த குப்பைகளை அகற்ற எந்த விதமான நடவடிக்ககையும் எடுக்கவில்லை.

தாங்கள் குப்பைகளை அங்கு போட்டமை நியாயமானது என்றனர். இதனால் மக்களுக்கும் சூழலுக்கும் ஏற்படும் தீங்கு பற்றி பேசவில்லை.

ஊடகவியலாளர்கள் அந்த இடத்தை விட்டு வெளியேரினர். மேற்படி குப்பைகள் குறித்த தோட்டத்தில் காணப்டும் தேயிலை விற்பனை நிலையத்தில் காணப்படும் சிற்றூண்டிசாலையின் கழிவுகளாகும்.

லபுக்கலைத் தோட்டத்தில் பெரும்பாலான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லும் இடமாகும். அண்மையில் பிரிட்டிஸ் இளவரசர் சார்ள்ஸ்சும் இங்குத்தான் வந்து சென்றிருந்தார். அச்சந்தர்ப்பத்தில் தோட்ட மக்களை அழகுப்படுத்தி மணப்பெண் போல் இளவரசர் சார்ள்ஸ்க்கு தோட்ட மக்களின் உண்மை நிலைமையை மாற்றி காட்டிய தோட்டமும் இது தான்.

தோட்டத்தினதும் தொழிற்சாலையினதும் முன்புறத்தை அழகுபடுத்தி சுற்றுலப் பிரயாணிகளிடம் பணம் சம்பாதிக்கும் இவர்கள் பின் புறத்தில் உள்ள தோட்ட தொழிலாளர்களை குப்பைகளினால் குப்பைக்குள் தள்ளுகின்றனர்.

தற்போதும் மக்களிடமும் தோட்ட தொழிலாளர்களிடமும், தொழிற்சங்கங்களிடமும் இந்த அதிகாரி அராஜகமாக நடந்துவருவதாகவும் தெரிய வருகின்றது.

தோட்ட பாடசாலையின் மைதானத்தை பிரிட்டிஸ் இளவரசர் சார்ள்ஸ் வந்த வேளையில் ஹெலிகொப்டர் இறங்குவதற்கு தளமாக பயன்படுத்த மாற்றியமைத்த இவர்கள் தற்போது தோட்ட மாணவர்கள் இளைஞர்கள் பயன்படுத்துவதையும் தடுத்து வருகின்றனர்.



அத்துடன் இந்த தோட்ட மக்கள் பல அடிப்படை வசதிகள் இன்றி தோட்ட மக்களினால் அனைத்து வசதிகளும் மறுக்கப்பட்டவர்களாக வாழ்ந்து வருகின்றனர். இதனை ஊடகம் ஊடாக வெளியில் கொண்டு வர வேண்டியது கட்டாயமானதாகும்.

இந்நிலை தொடருமாயின் இந்த தோட்ட மக்கள் குறித்த நிர்வாகத்தினால் நசுக்கப்படுவார்கள் என்பது உறுதிப்படுத்தப்படுகின்றது. இது தொடர்பில் ஊடகவியலாளர்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றைப் பதிவு செய்யவுள்ளனர்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum